Friday, April 24

குபேரா- திரைவிமர்சனம்

வங்காள விரிகுடா கடல் பகுதியில ஏராளமான அளவில் எண்ணெய் வளம் உள்ளதா ? என்பதை கண்டுபிடிக்கும் சோதனையை ஒரு குழுவின் மூலமாக அரசாங்கம் ஆராய்ச்சி செய்கிறது, கடைசியில இந்தியாவுக்கு 15 வருடங்களுக்கு தேவையான எரிபொருள் இருக்குன்னு கண்டுபிடிக்கப்பட , இந்த தகவல் அரசாங்கத்துக்கு தெரிவதற்கு முன்பே ,மிகப்பெரிய தொழில் அதிபராக இருக்கிற ஜிம்முக்கு தெரிய வருது. அதனால் ,அரசாங்கம் அந்தத் திட்டத்தை கைவிட்டு ,அதற்கான ஒப்பந்தத்தை யாருக்கும் தெரியாமல் தனக்கு கொடுக்குமாறு மினிஸ்டரா இருக்கிற ஹரிஷ் பெராடிகிட்ட சொல்றாரு, அதே போல அவர் கேட்கிற ஒரு லட்சம் கோடி ரூபாய கொடுக்க ஜிம் சம்மதம் சொல்றார். கூடவே ஒரு கண்டிஷனையும் போடுறாரு அதன்படி இந்த பணப்பரிமாற்றம் பற்றிய தகவல் ஏதாவது வெளியில வந்து வந்தா நாங்க பொறுப்பு ஏற்க முடியாது, அதோட மட்டும் இல்லாம உங்களை காப்பாற்றவும் முடியாதுன்னு ஹரிஷ் சொல்றாரு. இது சம்பந்தமாக பாதி ஒயிட் மணியாகவும் மீதி பாதி கருப்பு பணமாகவும் கொடுக்கணும்னு அவர்களுக்குள்ள டீல் முடியுது இதை செய்து முடிக்க சரியான நபராக சிபிஐ ஆபீஸரா இருந்த நாகார்ஜுனா இருப்பாருன்னு முடிவு பண்ணி , பொய்யான வழக்குக்காக சிறையில தண்டனை கைதியா இருக்கிற நாகார்ஜுனாவை வெளியே கொண்டு வந்து அவர் மூலமா எந்த சிக்கலிலும் சிக்காம,, இந்த பண பரிமாற்றத்தை செய்ய முடியும்ன்னு ஜிம்முடைய அப்பா சொல்றாரு, ஆரம்பத்துல ஜிம்முடைய வழிக்கு நாகர்ஜுன வர மறுத்தாலும் சூழ்நிலையும் தன்னோட நேர்மைக்கான அவமானமும் ஏற்படுகிறதுனால ஜிம்முடைய திட்டத்திற்கு அவர் , சம்மதம் சொல்றாரு. இந்த பிரச்சனையில யாரும் மாட்ட கூடாதுன்னா எந்த அடையாளமும் இல்லாத எழுத படிக்க தெரியாத பிச்சைக்காரர்கள் நாலு பேர தேர்ந்தெடுத்து அவர்கள் பெயரில் கம்பெனி ஆரம்பிச்சு, அந்த கம்பெனியின் மூலமா கருப்பு பணத்தை வெளிக் கொண்டு வந்து ,ஹரிஷ்க்கு மீதி இருக்கிற நாற்பதாயிரம் கோடியை மாற்றலாம் என்றும் சொல்றாரு. இதனால வேற வேற மாநிலத்துல பிச்சை எடுத்துட்டு இருக்கறவங்கள தேர்வு செய்றாங்க ,அந்த நாலு பேர்ல ஒருவராக தனுஷ , திருப்பதியில் இருந்து கூட்டிட்டு மும்பைக்கு வராங்க.

நாகர்ஜுனா அந்த நாலு பேருக்கும் ட்ரைனிங் கொடுக்கிறார் ,அந்த நாலு பேருமே அவங்கள எதுக்காக பயன்படுத்துறாங்கன்னு தெரியாமலேயே அவங்க சொல்றது எல்லாம் செய்றாங்க ,அதன்படியே ஒவ்வொருவரின் பெயரிலும் கம்பெனி ஆரம்பிக்கப்பட்டு, கருப்பு பணத்தை அக்கவுண்ட்ல போடுறாங்க, போட்ட பணத்தை அடுத்தடுத்து எடுக்குறாங்க,. பணத்தை எடுத்ததுக்கு அப்புறம் நாகார்ஜுனாவுக்கு தெரியாம எந்த ஆதாரமும் இருக்கக் கூடாதுன்னு அவங்கள கொலையும் செய்றாங்க இந்த விஷயம் நாகர்ஜுனாக்கு தெரிய வருது,இவங்க கிட்ட இருந்து தனுஷ் தப்பி ஓட, அவரை எப்படியாவது கண்டுபிடிக்கணும் ,அந்த பணத்தை எடுத்துட்டு, அவரை கொலை செய்ய வேண்டும் என்று ஜிம்மு சொல்றாரு., யாரும் எதிர்பாகாத நேரத்துல தனுஷ் அவங்களிடமிருந்து தப்பிச்சு போறாரு ,அதிகாரம்,, பண பலம் அரசியல் பலம் கொண்ட ஜிம்கிட்ட ஒரு பிச்சைக்காரனா மாட்டிக்கிட்ட தனுஷ்க்கு அதன்பின் என்ன நடந்தது? அவர் பேர்ல இருக்கிற பத்தாயிரம் கோடி என்ன ஆச்சு ?என்பதுதான் குபேரன் படத்தோட மீதிக்கதை ..

எந்த ஒரு முன்னணி நடிகரும் ஏற்று நடிக்க தயங்குற கதாபாத்திரத்தை மிக தைரியமாக நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிற தனுஷ்க்கு முதலில் பாராட்டுகளை தெரிவிக்கலாம்., எவ்விதமான பரிமாணங்கள் கொண்ட கதாபாத்திரத்திலும் தன்னால் நடித்து முடியும் என மீண்டும் நிரூபிச்சிருக்காரு தனுஷ். அவருடைய இமேஜை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் நிறைய திரைக்கதைல இருந்திருந்தாலும் அதை பயன்படுத்திக் காம அந்த கதாபாத்திரம் எப்படி இருக்குமோ, எந்த அளவுக்கு தன்னுடைய எதிரிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளுமோ ,அதற்குத் தேவையானதை மட்டுமே செஞ்சு, அந்த கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார் தனுஷ். கதைக்காவும் ,அந்த கதாபாத்திரத்திற்காகவும் தன்னை மாற்றிக்கொண்ட தனுசுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை சொல்லலாம்.

முன்னாள் சிபிஐ அதிகாரியாக நடித்திருக்கிற நாகார்ஜுனா படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார் படத்துடைய முதல் பாதியில நடிப்பின் மூலமா தன்னுடைய ஆளுமைய வெளிப்படுத்தி, திரைக்கதை விறுவிறுப்பாக நகர்வதற்கு உறுதுணையாய் இருந்திருக்கிறார், இரண்டாம் பாதியில் என்னதான் சுயநலம் இருந்தாலும் மனசுக்குள்ள புதைந்திருக்கிற மனிதாபிமானம் வெளிப்பட, இரண்டுக்கும் நடுவுல சிக்கிக் கொண்டிருக்கிற கதாபாத்திரத்தை அழகா நடிச்சு,தன்னுடைய அனுபவ நடிப்பை மீண்டும் ஒரு முறை நிரூபிச்சிருக்காரு நாகர்ஜுனா.

இதுவரை பார்த்திராத ராஷ்மிகாவின் நடிப்பை இந்த படத்துல பார்க்கலாம், படத்துடைய இரண்டாம் பாகம் முழுக்க தனுஷ் கூடவே பயணம் செஞ்சு தன்னுடைய நடிப்பை ஆழமா பதிய வச்சுருக்காங்க ராஷ்மிகா.

ஹைடெக் வில்லனா நடிச்சிருக்கிற ஜிம் சர்ப் கொடூரமானவன் அப்படிங்கறத ஆக்ரோஷம் இல்லாம , அளவான நடிப்பின் மூலமா வெளிப்படுத்தி இருக்காரு.,மற்றபடி மேலும் படத்தில் நடித்து இருக்கிற ஹரிஷ் பெராடி,சாயாஜி சிண்டே, சுனைனா போன்றவர்களும் தங்களுடைய பங்களிப்பை சரியா வெளிப்படுத்தியிருக்காங்க , ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு, படத்துக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கு,அவர் கதைக்கும் காட்சிகளுக்கும் விறுவிறுப்பான திரைக்கதைக்கும் ஏற்றவாறு பிரம்மாண்டமாக , அழகாக ஒளிப்பதிவு செஞ்சிருக்கிறாரு, தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையா இது என ஆச்சரியப்படுத்தும் வகையில DSP தன்,னுடைய வழக்கமான ஸ்டைல்ல இருந்து விலகி படத்துல வர ஒவ்வொரு பாடலிலும் வார்த்தைகள் கேட்கும் படியாகவும் ரசிக்கும் படியாகவும் அமைத்து இருந்ததோடு, பின்னணி இசையும் அதிக சத்தம் இல்லாமல் அமைத்து இருந்தது காட்சிகளுக்கு மேலும் வலிமை சேர்த்து இருக்கிறது, பாராட்டும்,படியுள்ளது

மிகப்பெரிய கோடீஸ்வரரையும், பிச்சைக்காரரையும் இணைச்சு அவர்களை சந்திக்க வச்சு ஒரு கதையை உருவாக்க முடியுமா? என்ற சந்தேக கேள்விக்குறிக்கு விடையாக, திரைக்கதை அமைச்சு அதை விறுவிறுப்பாக நகர்த்தி ,சுவாரசியம் குறையாமல் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர்.சேகர் கம்முலா, இதுவரை இருந்த தங்களுக்கென அடையாளங்களில் இருந்து சிலரை மாற்றி, தன்னுடைய கதைக்கும் ,கதாபாத்திரத்திற்கும் ஏற்றவாறு அவர்களை பொருத்தி, இன்றைய அதிகார வளையத்துக்குள் நடக்கும் திரைமறை ரகசியங்களை படத்திற்கு பின்னணியாக கொண்டு,,ஒரு ஜனரஞ்சகமான படத்தினை கொடுத்திருக்கிறார் இயக்குனர்சேகர் கம்முலா.

படத்தின் முதல் பாதியுடைய நீளம் அதிகமாக இருந்தாலும் அதனை மறைக்க ,அமைக்கப்பட்ட திரைக்கதை படத்துக்கு பலமாக இருந்தது ,ஆனால் இரண்டாம் பாதியை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக நகர்த்தியும், நீளத்தை கொஞ்சம் குறைவாகவும் அமைத்து இருந்தால் நன்றா அமைத்து இருக்கும் அதேபோல ,படம் பார்க்கும்போது எழும் லாஜிக்கான கேள்விகளை நம் மனதிற்குள் எழாமல் பார்த்துக் கொண்ட திரைக்கதையும், எதிர்பாராத வகையில் நடக்கும் சில திருப்புமுனை காட்சிகளும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது .

குபேரா, குதூகலத்தோடு வெற்றி களத்தில் விளையாட வாழ்த்துவோம்.

Spread the love