Tuesday, April 21

’கிஸ்’ திரைப்பட விமர்சனம்

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், சதீஷ் இயக்கத்தில், நடிகர்கள் கவின், ப்ரீத்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிஸ்’.

காதலர்கள் முத்தம் கொடுப்பதை பார்த்து அந்த காதல் ஜோடிகளுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளும் சக்தி இந்த படத்தின் கதையின் நாயகன் கவினுக்கு உள்ளது, இந்த நாயகனுக்கு ப்ரீத்தி அஸ்ரானியுடன் காதல் ஏற்படுகிறது .,காதலி பிரீத்தி அஸ்ரானி தனக்கு முத்தம் கொடுத்து விட அதன் பின் என்ன நடக்கப்போகிறது என்பதை அறிந்து கொள்ளும் நாயகன் தன் காதலியை விட்டு விலக முடிவு செய்கிறான். இறுதியில் காதலர்கள் இருவரும் ஒன்றிணைந்தார்களா? இல்லையா? என்பது தான் கிஸ் படத்தின் மீதிக்கதை.

முதலில் காதலை எதிர்ப்பவராகவும் ,அதன் பின்பு காதல் வசப்படுவராகவும் இளம் நாயகன் கவின் இந்த படத்தில் நன்கு நடித்திருக்கிறார் .இவருக்கு இணையாக நடித்துள்ள ப்ரீத்தி அஸ்ரானி, தோற்றத்திலும், நடிப்பிலும் ரசிகர்களை கவரும் வண்ணம் தன்னுடைய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் மற்றும் ஆர் ஜே விஜய், தனது ஒன் லைனர்களால் கலகலப்பு ஊட்டி இருக்கும் விடிவி கணேஷ்,தேவயானி, கௌசல்யா ஆகியோரும் அவரவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நன்றாக நடித்துள்ளார்கள்.

காதல் கதை களத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவும் ,ஜென்மார்ட்டீனின் பின்னணி .இசையும்  பக்க பலமாக அமைந்துள்ளது .பாடல்களை பொறுத்தமட்டில் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் ரசிக்கும்,படியே அமைந்துள்ளன .படத்தின் ஆரம்பத்தில் இடம்பெறும் மன்னர் காலத்து கதையை சொல்லும் குரலாக விஜய் சேதுபதியின் குரல் ஒலிக்கிறது.நடன இயக்குநராக பல படங்களில் சிறப்பாக பணிபுரிந்த சதிஷ், இயக்குநராக இந்த படத்தில் அறிமுகமாகியுள்ளார் .முற்றிலும் இளம் ரசிகர்களை கவரும் வகையில் தனது முதல் படத்திலேயே இளமையான ஒரு காதல் கதையினை கையில் எடுத்துக் கொண்டு அதனை திரையாக்கம் செய்திருக்கிறார் இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன்..

காதல், காமெடி என இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த கிஸ், நிச்சயம் அத்தகைய பார்வையாளர்களை கவரும் என்றே நம்பலாம்.

Spread the love