Monday, May 25

கிங்டம்’ -திரை விமர்சனம் .

கெளதம் தின்னூரி இயக்கத்தில் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, சத்யதேவ், பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கிங்டம்.

கதையின் நாயகன் சூரி ( விஜய் தேவரகொண்டா) யின் அண்ணன் சிவா( சத்தியதேவ்) இளம் வயதிலேயே வீட்டை விட்டு ஓடி போய் விடுகிறார், காணாமல் போன தன் அண்ணனை கண்டுபிடிக்கும் முயற்சியில் சூரி இருக்க கூடிய சூழ்நிலையில் ,நடைபெறும் ஒரு சம்பவத்தினால் இலங்கைக்கு அருகாமையில் இருக்கும் ஒரு தீவு பகுதியில் உள்ள ஒரு கடத்தல் தொழில் செய்யும் மாஃபியா கும்பலை கண்டறியும் பொறுப்பு அவரிடம் கொடுக்கப்படுகிறது, அதன்படி அங்கு செல்லும் சூரி இதன் மூலம் தன் அண்ணனை கண்டுபிடிக்க முடியும் என்று எண்ணுகிறார், அதன்படி சூரி கொடுக்கப்பட்ட கடமையினை நிறைவேற்ற சென்ற இடத்தில் தன் அண்ணனை கண்டுபிடித்தாரா ? இல்லையா ? அதே போல தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பினையும் அவரால் நிறைவேற்ற முடிந்ததா ? என்பதே படத்தின் மீதி கதை.

கதையின் நாயகன் சூரியாக போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார் கதாபாத்திரத்திற்கு ஏற்ற இவரது உடல் மொழியும் ,தோற்றமும் ஒருசேர இவருக்கு பொருந்தி இருப்பதால் அது அவர் ஏற்றுள்ள கதாபாத்திரத்திற்கு மேலும் .பலம் சேர்த்துள்ளது இவரது அண்ணனாக சிவா என்னும் கதாபாத்திரத்தில் சத்தியதேவும் நடித்துள்ளார் ,மிகைப்படுத்தப்படாத இவரின் நடிப்பும் பாராட்டும்படி உள்ளது .மற்றும் பாக்யஸ்ரீ, வெங்கடேஷ் போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் குறைவில்லாத நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

ஆக்ஷன் கதை களத்தில் செல்லும் இந்த படத்திற்கு தொழில் நுட்ப அளவில் பெரிய பங்களிப்பை கொடுத்திருப்பவர்கள் ஒளிப்பதிவாளர்கள் கிரீஷ் கங்காதரன் மற்றும் ஜோமோ டி ஜான் ஆகியோர் இவர்களுடன் இசை அமைப்பாளர் அனிருத் போன்றவர்களின் கூட்டணியில் திரைக்கதையின் காட்சிகளுக்கு மேலும் மெருகேற்றப்பட்டுள்ளது. வெளிப்புறகாட்சிகளில் வைக்கப்பட்டுள்ள கோணங்களும்,அமை க்கப்பட்டுள்ள ஒளி அமைப்புகளும் ஒளிப்பதிவாளர்களின் பணியை சிறப்பாக்கி உள்ளது. குறிப்பாக அனிருத்தின் பின்னணி இசையும் , படத்தொகுப்பாளர் நவீன் நூலியின் கைவண்ணமும் திரைக்கதையின் வேகத்துக்கும் ,விறுவிறுப்புக்கும் உறுதுணையாக அமைந்துள்ளது .ஆக்சன், எமோஷன் ,சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களும் கலந்த ஒரு ஜனரஞ்சகமான திரைப்படமாக இந்த திரைப்படத்தை இயக்குனர் கெளதம் தின்னூரி கொடுத்திருக்கிறார்.

படத்தின் முதல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காட்சிகளும் ,இரண்டாம் பகுதி எப்படி அமையப் போகிறது என்று எதிர்பார்க்க வைக்கும் இடைவேளையும் ,படத்தின் இரண்டாம் பகுதியிலும் தொடர்ந்து இருந்தால் ,அது முழு நீள படத்தின் கதை ஓட்டத்துக்கு பெரும் உறுதுணையாக அமைந்திருக்கும் ,அது மேலும் விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து ஆக்ஷன் பட ரசிகர்களுக்கும் பெரிய விஷுவல் ட்ரீட்டை கொடுத்திருக்கும்.

Spread the love