ரவுடிகளின் அட்டகாசத்தால் ஆட்பட்டுக்கிடக்கும் கொத்தை என்ற ஊருக்கு பணி மாறுதலின் காரணமாக வரும் காவல்துறை அதிகாரி ஷாகுல் ,அங்கிருக்கும் கேங்ஸ்டர் கண்ணன் பாயின் (ஷபீர் கல்லாரக்கல்) கொட்ட த்தை அழிக்க நினைக்கிறான் அதற்காக கொத்தை நகரத்தை விட்டு வெளியேறிய ராஜு பாயை (துல்கர் சல்மான்) மீண்டும் அந்த நகருக்கு வரவழைக்கிறார். ராஜு பாய் கொத்தையின் முன்னாள் தாதா மட்டுமல்ல, கண்ணன் பாயின் முன்னாள் நெருங்கிய தோழனுமாவான். கண்ணன் பாயின் அட்டகாசத்தை ராஜு பாய் மூலம் அழிக்க நினைக்கும் ஷாகுலின் திட்டம் என்னவானது?, முன்னாள் நெருங்கிய தோழர்களான கண்ணன் பாய் மற்றும் ராஜு பாயின் பிண்ணனி என்ன? ராஜுபாய் வந்த பிறகு நடந்தவை பற்றி படத்தின் மீதி கதை சொல்லும் .

கதையின் நாயகனாய் துல்கர் சல்மான் ராஜுபாய் கதாபாத்திரத்தில் வழக்கமான சாக்லேட் பாய் பா ணியிலருந்து மாறுபட்டு புதிய பரிமாணத்தில் ஆக்ஷன் ஹீரோவாக பரிமளித்துள்ளார், புதிய பரிமாணத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார் என்றே சொல்லலாம். கண்ணன் பாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஷபீர் கல்லாரக்கல் தேர்ச்சியான நடிப்பை வழங்கி இருக்கிறார். மேலும் காவல்துறை அதிகாரியாக பிரசன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, துல்கரின் தந்தை கதாபாத்திரத்தில் ஷம்மி திலகன், தங்கையாக அனிகா சுரேந்திரன், சப் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கோகுல் சுரேஷ் ,ஷபீரின் மனைவி நைலா உஷா, செம்பன் வினோத் என அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களின் இயல்புக்கு ஏற்ற வண்ணம் நிறைவாக நடித்துள்ளார்கள்.
ஆக்சன் கதையில், பல உணர்வு போராட்டங்களையும் கலந்து அபிலாஷ் ஜோஷி இயங்கியுள்ளார் அவருக்கு பக்கபலமாய் நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவும் நிமிர்ந்து நிற்கிறது. ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசையும் படம் முழுவதுமாக பயணித்துள்ளது .
கிங் ஆஃப் கொத்தா -கேங்ஸ்டர் கதை ரசிகர்களுக்கு நல்லதொரு ஆக்ஷன் ட்ரீட் .
