Wednesday, April 22

கெழப்பய -திரைப்பட விமர்சனம்

ஒரு கிராம பகுதியில் ஒரு கர்ப்பிணி பெண்ணுடன் ஆண்கள் சிலரும் ஒரு காரில் அந்த பகுதி சாலை வழியே செல்லும்போது ,அவர்கள் செல்லும் பாதையில் ஒரு முதியவர் (கதிரேசகுமார்) சைக்கிளில் சென்றுகொண்டுள்ளார். தங்கள்து காருக்கு வழிவிட சொல்லி காரின் ஓட்டுனர் விடாமல் ஒலி எழுப்பினாலும், அந்த முதியவரோ வழி கொடுக்காமல் செல்கிறார். இதனால் காரில் உள்ளவர்கள் கோபமுற்று அந்த முதியவரிடம் சண்டையிடுகின்றனர். ஆனால் அப்போதும் முதியவர் வழிவிடவில்லை,யார் அந்த முதியவர் ? அவர் ஏன் அந்த காருக்கு வழிவிடாமல் இடையூறு ஏற்படுத்துகிறார் ?இறுதியில் என்ன நடந்தது ?போன்ற கேள்விகளுக்கு விடை சொல்லுகிறது இந்த படத்தின் மீதி கதை…

கதையின் நாயகனாக நடித்துள்ளகதிரேசகுமார் படம் படம் முழுவதும்தன் நடிப்பை சிறந்த முறையில் பதிவு செய்துள்ளார் மேலும் கிருஷ்ணகுமார், விஜய ரண தீரன், கே.என்.ராஜேஷ், ‘பேக்கரி’ முருகன், அனுதியா, ‘உறியடி’ ஆனந்தராஜ் போன்ற நடிகர்களும் அவர்கள் ஏற்ற கதாபாத்திரத்துக்கு பொருத்தும்வகையில் நன்கு நடித்துள்ளார்கள்.

,இயக்குனர் யாழ் குணசேகரன் இயக்கியுள்ள இப்படத்தின் காட்சிகளை ,அதன் தன்மைக்கு ஏற்ப சிறப்பாக பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் அஜித்குமார். அவர் மட்டுமல்லாது இசைமூலம் கெபியும், கதாபாத்திரங்களின் உணர்வுகளை பேசும் வகையில் சிறப்பாக தன் பங்களிப்பை வழங்கியுள்ளார்.

புதிய கதைகளங்களில் உள்ள படங்களை ரசிப்பவர்கள் தவறாமல் பார்க்கலாம்.

Spread the love