Friday, April 24

கட்டில் -விமர்சனம்

கதையின் நாயகன் கணேசனின் (ஈ.வி.கணேஷ்பாபு) பாரம்பரியமும் பழமையும் நிறைந்த மூன்று தலைமுறைகள்கண்ட வீட்டை அவரது உடன் பிறந்தோர் விற்க முடிவு செய்கிறார்கள் அதற்கு மனமில்லாமல் கணேசன் ஒத்துக்கொண்டாலும் கொண்டாலும் அந்த வீட்டில் இருக்கும் பழமை வாய்ந்த தேக்கு கட்டிலின் மீது அளவற்ற பற்று கொண்டுள்ளார் கட்டிலை விற்க சம்மதிக்காத கணேசன் அதை வைக்கும் அளவிற்கு ஒரு புதிய வீட்டைத் தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார் கடைசியில் அவருக்கு பெரிய வீடு கிடைத்து, அந்த கட்டிலை பாதுகாத்தாரா? அவரது எண்ணம் ஈடேறியதா ? என்பதே படத்தின் மீதி கதை.

மகன் கணேசன் கதாபாத்திரம் முதல் மூன்று தலைமுறை கதாபாத்திரத்தில் அப்பா இளங்கோவனாக, தாத்தாவாக ஈ.வி.கணேஷ்பாபு. நடித்துள்ளார்.இந்த படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளரும் இவரே ஆவார். மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் முயற்சியை பாராட்டலாம் ,ஆனால் மூன்று கதாபாத்திரங்களுக்கும் உடல்மொழிகளில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கலாம்.

படத்தின் நாயகியாக தனலட்சுமி என்னும் கதாபாத்திரத்தில் சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார், தன்னுடைய கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை நன்கு வெளிப்படுத்தியுள்ளார் ,அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீதா கைலாசம் சிறப்பாகச் செய்துள்ளார். சுரேஷ் என்னும் கதாபாத்திரத்தில் விதார்த் மற்றும் இந்திரா சௌந்தர ராஜன் போன்றோரும் தத்தம் பாத்திரங்களுக்கு ஏற்ற வண்ணம் இயல்பாக நடித்துள்ளார்கள்

‘வைட் ஆங்கிள்’ ரவி சங்கரன் ஒளிப்பதிவும், படத்தொகுப்பாளர் பி.லெனினின் படத்தொகுப்பும் ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும் கதையின் தேவைக்கு ஏற்ப பயணிக்கிறது.

உயிரற்ற பொருட்களின் மூத்த ஏற்படும் ஈர்ப்புக்கு இன்னுமும் அழுத்தமான காரண காரியங்களும் அதையொட்டிய காட்சிகளும் இணைக்கப்பட்டிருந்தால் கட்டில் இன்னுமும் மனதில் இடம்பிடித்திருக்கும் .

Spread the love