Monday, May 25

கங்குவா – திரைவிமர்சனம்

ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி பாபி தியோல் , யோகி பாபு மற்றும் பலர் நடிக்க தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள படம் ‘கங்குவா’ .

கோவாவில் வாழ்ந்து வரும் பவுண்டி ஹண்டரான ஃபிரான்சிஸ் (சூர்யா) ரஷ்ய விஞ்ஞான ஆராய்ச்சி முகாமில் இருந்து தப்பிய ஸெட்டா என்னும் சிறுவனை சந்திக்கிறார் .அதன் பின் கதையானது   பின்னோக்கி 1070-காலகட்டத்துக்கு பயணிக்கிறது, அப்போது அங்கே உள்ள  ஐந்தீவில் ஒன்றான பெருமாச்சியை தீவினை பாதுகாத்து வருபவர் கங்குவா (சூர்யா).என்னும் இளவரசன்..பெருமாச்சி தீவில் இருக்கும் மக்களிடம் இருந்து அந்த தீவை அபகரிக்க ரோமானியர்கள் படையுடன் வருகிறார்கள். இந்த சூழலில் கங்குவா (சூர்யா) தன்னுடைய இனத்தின் மக்களை எப்படி போராடி காப்பாற்றினார் ? ,மேலும் அங்கு நடைபெற்ற சம்பவங்கள் , அவை நிகழ்காலம் மற்றும் கடந்த காலத்துடன் எப்படி தொடர்பு கொள்கின்றன ? என்பதே படத்தின் மீதிக்கதை..

கதையின் நாயகனாக கங்குவா, பிரான்சிஸ் என இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் சூர்யா வீரம், நேசம் ,பாசம் என பல பரிமாணங்களில் தோற்றத்திலும் , நடிப்பிலும் சிறப்பாக நடித்துள்ளார்.. திஷா பதானியை பொறுத்தவரையில் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு பொருத்தமான நடிப்பை குறைவின்றி கொடுத்து நடித்துள்ளார். மேலும் வில்லனாக நடித்துள்ள பாபி தியோலின் தோற்றமும், அதனை அவர் கதாபாத்திரத்துக்கு ஏற்ப வெளிப்படித்தியுள்ள விதமும் ரசிக்கும்படி உள்ளது ..யோகிபாபு ,ரெடின் கிங்ஸ்லி,கலைராணி, நட்டி, கோவை சரளா,  கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ், போஸ் வெங்கட்  என ஏராளாமான திரைக் கலைஞர்கள் படம் முழுக்க விரவி காணப்படுகிறார்கள்..கிளைமேக்ஸில் வரும் கார்த்தியின் கேமியோ ரசிகர்களை பெரிதும் கவரும் வகையில் உள்ளது

இரண்டு மாறுபட்ட காலக்கட்டகதைக்களத்தில் பயணிக்கும் கதைக்கு ஏற்ற திரைக்கதையினை எடுத்து கொண்டு அதனோடு அவலுவான தொழில்நுட்ப குழுவினையும் இணைத்து , பிரமாண்டமான ஆக்கத்துடன் சிறுத்தை சிவா.இந்த படத்தினை உருவாக்கியுள்ளார்..அவருக்கு உறுதுணையாக தேவிஸ்ரீ பிரசாதின் இசையும் வெற்றிபழனிச்சாமியின் ஒளிப்பதிவும் அமைத்துள்ளன. நிஷாத் யூசுபின் படத்தொகுப்பு காலஓட்டத்துக்கு ஏற்ப வேகத்தினை கொடுத்துள்ளது .கலை இயக்கம்,ஆக்ஷன் காட்சி அமைப்புகள், வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் பாராட்டும்படி அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தத்தில் சூர்யா -சிவா கூட்டணியில் உருவாகியுள்ள இந்த கங்குவா, படவெளியீட்டுக்கு .முன்பு இருந்த எதிர்பார்ப்புகளை முழுமையாக ஈடு செய்யாவிட்டாலும் ,அதனுடைய பிரமாண்டமான உருவாக்கத்தையும், அதற்க்கு உறுதுணையாக நின்ற சிறப்பான தொழில்நுட்பாளர்களின் பங்களிப்பினையும் அடிப்படையாக கொண்டு, சிறப்பான பட வரிசையிலே இடம் பிடிக்கும்.

Spread the love