ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் நடராஜ்( நட்டி ) சிங்கம் புலி ,மகேஷ் ரவி ,ஸ்ரீ ரஞ்சினி, ஜாவா சுந்தரேசன் கராத்தே ரவி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கம்பி கட்டின கதை.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரத்தினை கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு தெரியாத வண்ணம் எடுத்து வந்து கொடுக்க வேண்டும் என்பதற்காக கராத்தே கார்த்தி நட்டியை நியமிக்கிறார் ஆனால் அந்த வைரத்தை நட்டி எடுத்த பிறகு இதை தனக்கே உரிமையாக்கி கொள்ளலாம் என்று முடிவெடுக்கிறார் எனவே அதை ஒரு தோட்டத்தில் மறைத்து வைக்கிறார் அதன்பிறகு காவல்துறையை அதிகாரிகளிடம் சிக்கும் நட்டி தன்னிடம் எந்த வைரமும் இல்லை என்று சொல்லியும் ,அதிகாரி வீட்டில் பணம் திருடிய குற்றத்திற்காக சிறைக்கு செல்கிறார். சிறையில் இருந்து திரும்பி வந்த பிறகு தான் மறைத்து வைத்திருந்த வைரத்தை தேடிச் சென்று அதை மீண்டும் கைப்பற்ற நினைக்கும் நட்டிக்கு அங்கு இப்பொழுது ஒரு கோயில் இருப்பதும் அதில் ஒரு துறவி இருப்பதும் கைப்பற்ற நினைக்கிறார் நாட்டி ஆனால் அவர் வைரத்தை மறைத்து வைத்திருந்த தோட்டத்தில் தற்பொழுது ஒரு கோயில் இருக்கிறது, அங்கே ஒரு துறவி சாமியார் இருக்கிறார் .அந்த இடத்திலிருந்து வைரத்தை மீண்டும் கைப்பற்ற நினைக்கும் நட்டி தானும் ஒரு சாமியாராக மாற முடிவு செய்கிறார், இதற்குப் பிறகு அவரால் அந்த வைரத்தை கைப்பற்ற முடிந்ததா? இல்லையா ?இந்த முயற்சியில் அவரால் காவல்துறையிடம் இருந்து தப்ப முடிந்ததா? அதன் பிறகு என்ன நடந்தது ?என்பதுதான் படத்தின் மீதி கதை.

கதாநாயகனாக நடித்துள்ள நட்டிக்கு இது போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பது மிகவும் கைவந்த கலையாகும் ,ஏற்கனவே சதுரங்க வேட்டையில் இது போன்ற கதாபாத்திரத்தில் கலக்கி இருந்த நட்டி நடராஜுக்கு இந்த கதையின் கதாபாத்திரமும் நன்றாக பொருந்தி போகின்றது. தன் கதாபாத்திரத்தின் மூலம் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி படம் முழுவதும் ரசிகர்களை நட்டி நடராஜ் கவர்கிறார். மற்றும் இளஞ்சோடிகளாக முகேஷ் ரவி, ஷாலினி, ஸ்ரீ ரஞ்சனி ,நட்டியின் சீடராக வரும் சிங்கம் புலி ,ஜாவா சுந்தர்ராஜன் என அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களில் நன்கு நடித்த படத்தின் கதையோட்டத்தில் பெரும் பங்கு வகித்துள்ளார்கள் .முருகானந்தம் இந்த படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதி உள்ளார் ,இவரது வசனங்களில் நகைச்சுவை ரசிக்கும்படி உள்ளது.
ஒளிப்பதிவாளர் ஜெய் சுரேஷ் ,எடிட்டர் பாசில் போன்றவர்களும் இயக்குனருக்கு உறுதுணையாக பணியாற்றியுள்ளார்கள் . படத்தின் தலைப்பிலேயே இது எந்த மாதிரியான படம் என்பதை நமக்கு சொல்லி இருக்கும் இயக்குனர் ராஜநாதன் பெரியசாமி முழு நீள நகைச்சுவை படத்தைக் கொடுத்து ரசிகர்களுக்கு நகைச்சுவை தீபாவளி திரை விருந்தை படைத்திருக்கிறார் என்று சொல்லலாம்.
