Monday, May 4

காடப்புறா கலைக்குழு – திரைப்பட விமர்சனம்

நம் வாழ்வியல் சூழ்நிலைகள் இன்றையகாலகட்டத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருந்தாலும் ,திடீரென்று ஒரு நாள் நம் சொந்த கிராமத்துக்கு சென்று அங்குள்ள பழைய வாழ்வியல் சூழ்நிலைகளை அசை போட்டுவிட்டு வருவோம் ,அது போல தொழில் நுட்ப வளர்ச்சியாலும் ,மாறி வரும் வாழ்க்கை சூழலாலும், நாம் நிறைய புதியபாணி படங்களை பார்த்துகொண்டு இருந்தாலும், நமது பாரம்பரியமான நாட்டுப்புறக் கலைகளை அடிப்படையாக கொண்ட ஒரு படம் வரும்போது, அதனையும் நாம் பார்த்து ரசிக்கிறோம், அந்த வரிசையில் காலம் மாறினாலும்,கலை மீது மாறாது பற்று கொண்டுள்ள கலைஞர்களின் வாழ்வியல் சூழ்நிலைகளில் ,அவர்கள் சந்திக்கிற இன்ப துன்பங்களை வெளிப்படுத்துகிற படங்களின் வரிசையில் வந்துள்ளது இந்த ‘காடப்புறா கலைக்குழு.’திரைப்படம் .

 

இந்த படத்தின் கதையின் நாயகன் பாவாடை(முனீஸ்காந்த் ) நாட்டுப்புற கலைஞர்களை நிகழ்ச்சிகள் நடத்தி வருபவர். அவருக்கென்று மனைவி குழந்தைகள் இல்லை இருப்பினும் தமிழ்(ஹரிகிருஷ்ணன் ) என்பவரை எடுத்து வளர்க்கிறார் ஒருசூழ்நிலையில் அதே ஊரில் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் ஈஸ்வரமூர்த்திக்கும் (மைம் கோபி), முனீஸ்காந்த்துக்கும் மோதல் ஏற்படுகிறது அதற்க்கு அடுத்து வரும் தேர்தலில் ஈஸ்வரமூர்த்திக்கு எதிராக போட்டி போடுபவரை பாவாடை(முனீஸ்காந்த் ) ஆதரிக்கிறார் இதனால் ஈஸ்வரமூர்த்தி(மைம்கோபி)தனக்கு எதிராக இருக்கும் அணியில் பாவாடை(முனீஸ்காந்த்) செயல்படுவதால் அவருக்கும் , அவரது கலைக்கும் தடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் ஈஸ்வரமூர்த்தி(மைம்கோபி)ஆனால் அதையெல்லாம் பாவாடை(முனீஸ்காந்த் ) எப்படி முறியடிக்கிறார் என்பதே மீதி கதை.

 

பல படங்களில் சிறு, பெரு என பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நம்மை மகிழ்வித்த முனீஸ்காந்த் பாவாடைச் சாமியாக நடித்து தனது ஆடல், பாடல் கலை திறமைகளை சிறப்பாக வெளிப்படித்தியுள்ளார் அதே போல அவருக்கு நண்பனாக தவில் இசைக் கலைஞராக வருகிற காளி வெங்கட்டும் பாத்திரத்திற்கேற்ற இயல்பான நடிப்பை கொடுத்துள்ளார் . மற்றும்

ஹரிகிருஷ்ணன் ,‘சூப்பர் குட்’ சுப்ரமணி, வில்லனாக மைம் கோபி,சுவாதி முத்து,ஸ்ரீலேகா ராஜேந்திரன்,ஆந்தகுடி இளையராஜா என அனைவரும் கொடுத்த காதபத்ரைங்களுக்கு ஏற்ற நிறைவான நடிப்பை தந்துள்ளார்கள்.

இது போன்ற கலை அம்சத்தை பிண்ணனியாய் கொண்ட படங்களுக்கு இசையும் ,பாடல்களும் மிக முக்கியமானவை அந்த வகையில் ஹென்றியின் பின்னணி இசையும், ராஜா குருசாமியின் பாடல்களும் படத்திற்கு பெரியபலமாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் வினோத் காந்தியின் காட்சிப்பதிவுகள் ரசிக்கும்படி அமைந்துள்ளன.

சென்டிமென்ட் நிறைந்த கதைக்களத்தை கலைநயமிக்க கலைஞர்களின் வாழ்வியல் சூழ்நிலைகளோடு கலந்து அதனை திரைப்படமாக இயக்குநர் ராஜா குருசாமி உருவாக்கியுள்ளார்.

கலையை அடிப்படையாக கொண்ட இந்த கலைஞர்களின் கதையை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம் .

Spread the love