Sunday, April 26

‘காத்துவாக்குல ஒரு காதல்’- திரை விமர்சனம்

” காத்து வாக்குல ஒரு காதல் ” படத்தின் கதையின் நாயகனாக நடித்துள்ள மாஸ் ரவி இப்படத்தினை இயக்கியும் உள்ளார். லட்சுமி பிரியா, மஞ்சு, சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், தங்கதுரை, மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

மாஸ் ரவி மற்றும் லட்சுமி பிரியா இருவரும் அன்பான காதல் ஜோடிகள் அதே சூழலில் ரவுடி குழுக்களுக்கு இடையே ஏற்படும் மோதலின் காரணமாக பல ரவுடிகள் கொல்லப்படுகின்றார்கள் இப்படிப்பட்ட நிலையில் மாஸ் ரவி காணாமல் போய்விடவே அவரை கண்டுபிடிக்க பல முயற்சிகள் எடுக்கும் நாயகி லட்சுமி பிரியா மாஸ் ரவியை ரவுடி கும்பலைச் சேர்ந்த நபர்களில் ஒருவனாக பார்க்க நேரிடுகிறது ,தன் காதலனை அந்த சூழ்நிலையில் பார்த்தவுடன் லட்சுமி பிரியாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுகிறது அவளுடைய அன்பான காதலன் இப்படிப்பட்ட வேறுபட்ட சூழலில் மாறுவதற்கு என்ன காரணம் ?அதன் பிறகு லஷ்மி பிரியாவின் காதல் கைகூடியதா ?இல்லையா போன்ற வினாக்களுக்கு விடையை தருகிறது படத்தில் மீதிக்கதை.

படத்தின் கதையின் நாயகனாக ஜீவா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கக்கூடிய மாஸ் ரவி, இந்தப் படத்தை இயக்கியும் உள்ளார், ,இரண்டு வேறுபட்ட பரிணாமங்களை, தன் நடிப்பை மூலம் வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் கதாபாத்திரத்தில் அவர் மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார் ..கதையின் நாயகியையைப் பொறுத்தவரை மேகாவாக வரும் லட்சுமி பிரியாவின் யதார்த்தமான நடிப்பு அவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்துக்கு பாந்தமாக நன்கு உள்ளது, இரண்டாவது நாயகியாக மஞ்சு பல்லவியாக நடித்துள்ளர் , இவரும் கொடுக்கப்பட்ட காட்சிகளில் நிறைவான நடிப்பை வழங்கி இருக்கிறார் படத்தில் சூப்பர் சூப்பராயன் மற்றும் சாய் தீனா இருவரும் எதிர்மறை கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள் இதில் ரத்னா என்னும் கதா பாத்திரத்தில் சாய் தீனாவின் நடிப்பு சிறப்பாக உள்ளது அவரது தோற்றமும் உடல் மொழியும்  அவரது கதாபாத்திரத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது , இவர்களுடன் ஆதித்யா கதிர், பாஸ்கர், தங்கதுரை, பவர் ஸ்டார், என பிற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்களும் தங்களுடைய பங்குக்கு ஏற்ற வண்ணமாக நன்கு நடித்துள்ளார்கள்.

ஜிகேவி மற்றும் மிக்கின் அருள்தேவ் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார்கள், தேனிசை தென்றல் தேவாவின் குரலில் ஒலிக்கும் பாடல் சிறப்பாக உள்ளது ,பின்னணி இசையை பொறுத்தவரையில் காட்சிகளுக்கு ஏற்றதொரு பின்புலத்தை கொடுக்கும் வகையில் உள்ளது. ராஜதுரை மற்றும் சுபாஷ் மணியன் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர்களாக பணிபுரிந்துள்ளார்கள், இவர்கள் கதையோட்டத்திற்கு தக்கவாறும் , காட்சிகளின் தன்மைக்கு ஏற்றவாறும் படத்தினை நன்கு பதிவு செய்துள்ளார்கள் , அழகிய காதல் கதையில் சுவாரசியமான ட்விஸ்ட்கள் வைத்து படத்தை இயக்கியுள்ளார் படத்தின் நாயகனாக நடித்துள்ள மாஸ் ரவி. எடுத்துக்கொண்ட கதைக்கு ஏற்ப இன்னமும் திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டி இருந்தால் , கதையில் இடம்பெற்றுள்ள ட்விஸ்ட்களுக்கு இன்னமும் ஆழம் கிடைத்திருக்கும் .

Spread the love