யோகி பாபு நடிப்பில் ,வினீஸ் மில்லினியம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜோரா கைய தட்டுங்க. இந்த படத்தில் சாந்தி ராவ், ஹரிஷ் பெரடி, அருவி பாலா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு எஸ்.என் அருணகிரி, ஜித்தின் ரோஷன் இசையமைத்திருக்கிறார்கள்.
மக்களிடையே மிகவும் பிரபலமான மேஜிக் கலைஞர் ஒருவரின் மகனான யோகி பாபு ,அவரது அப்பாவின் மரணத்திற்குப் பிறகு தானும் ஒரு மேஜிக் கலைஞர் ஆகி விடுகிறார்,ஆனால் அவரால் அவரது தந்தையைப் போல் அந்த துறையில் அவரால் பெயர் எடுக்க முடியவில்லை, இந்த சூழ்நிலையில் ரவுடி கும்பல் ஒன்றினால் யோகி பாபு, தன்னுடைய கையையும் இழக்கிறார் ,அதனால் தன்னுடைய மேஜிக் கலையை அவரால் தொடர்ந்து செய்ய இயலாமல் போகின்றது, மேலும் யோகி பாபுவுக்கு நெருக்கமான சிறுமியையும் அந்த ரவுடி கும்பல் கொலை செய்து விடுகிறது ,அதன் பிறகு யோகி பாபு தன்னுடைய மேஜிக் கலைத்திறமையை பயன்படுத்தி அந்த ரவுடி கும்பலை பழி தீர்க்கிறார், இதனை அவர் எவ்வாறு செய்கிறார் ? இதனால் அவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன ? அவற்றிலிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் ? என்பதே ’ஜோரா கைய தட்டுங்க’ படத்தின் மீதி கதை.

யோகி பாபு ஒரு மேஜிக் கலைஞராகவும் தனக்கு பாதிப்பு கொடுத்தவர்களை பழிவாங்குபவராகவும் முழு படத்திலும் வலம் வரக்கூடிய மையக்கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ,படம் முழுக்க அவர் வந்திருந்தாலும் ,அவருக்கே உரித்தான அவரது பாணி நகைச்சுவை பஞ்ச்கள் படத்தில் நிறைய இடங்களில் மிஸ்ஸாய் இருக்கிறது , இது முழு நீளப்படத்தில் அவருடைய காமெடியை ரசித்து பார்க்கலாம் என்று எதிர்பார்த்து வரும், அவரது ரசிகர்களுக்கு நிச்சயமாக ஏமாற்றத்தையே தரும் .படத்தின் நாயகியாக நடித்திருக்க கூடிய சாந்தி ராவிற்கு வழக்கமான கதாபாத்திரம்தான். மேலும் ஹரிஷ் பெராடி, அருவி பாலா போன்றவரும் அவரவர்கள் கதாபாத்திரங்களில் நன்கு நடித்துள்ளார்கள்.. ஜித்தின் கே ரோஷனின் பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கு ஏற்ற வகையில் தன் பங்களிப்பு கொடுத்துள்ளது ,எஸ் என் அருணகிரியின் இசையில் பாடல்கள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் எதுவும் இல்லை .வினிஷ் மில்லினியம் மற்றும் பிரகாஷ் கே யின் கதை ,திரைக்கதையில், வினிஷ் மில்லினியத்தின் இயக்கத்தில் , பாதிக்கப்பட்ட மனிதன் ஒருவனின் பழி வாங்கும் முயற்சியினை, கதைக்களமாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது, ஆனால் கதையின் நாயகனாக யோகிபாபு இருப்பதால் ஏற்படும் எதிர்பார்ப்பை ஈடு செய்ய முடியாத வகையில் , காமெடியில் உள்ள வறட்சியும் அதே சமயத்தில் , பழிவாங்கும் ஆக்சன் படத்திற்கு உரிய விறுவிறுப்பும் குறைந்து காணப்படுவது ,ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்திருக்கலாம் என்று தெரிகின்றது .
ஒளிப்பதிவு மதுஅம்பாட் , அவருக்கென்று உள்ள .முத்திரை படத்தின் காட்சிகளில் குறைந்து காணப்பட்டாலும், தன்னுடைய பங்குக்கு நிறைவான பணியை அவர் செய்துள்ளார்.
ஆக்சன் ரிவஞ்ச் ஸ்டோரியில் மையக்கதாபாத்திரத்தில், நடித்துள்ளவரின் (யோகிபாபு ) இமேஜுக்கு ஏற்ப காமெடியை இணைத்து இருந்தால் எல்லா ரசிகர்களாலும் இந்த படம் ஜோராக கை தட்டப்பட்டு ,வரவேற்பை பெற்று இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
