இன்ஜினியரிங் கல்லூரி மாணவரான ரியோ ராஜ் மற்றும் அவரது வகுப்பில் படிக்கும் மாளவிகா மனோஜ் இருவரும் காதலர்கள் . பின்பு பின் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து மாளவிகாவை பெண் கேட்டு அவருடைய வீட்டிற்கு ரியோ செல்கிறார். அப்போது மாளவிகா வீட்டில் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதன் பின் ஏற்பட்ட சூழலால் மன உளைச்சக்கு ஆளாகும் ரியோவை பார்த்தஅவரின் பெற்றோர் அவருக்கு பவ்யாவை திருமணம் செய்து வைக்கிறார்கள். கடந்த கால வாழ்வியல் சோகத்துடன் ரியோ இருக்க, பவ்யா தன்னுடைய வாழ்க்கையின் கசப்பான நினைவுகளோடு உள்ளார் . இதன் பின் அவர்களின் வாழ்க்கையில் என்ன நடந்தது? என்பது மீதி படத்தின் கதை.
ஜோவாக கதையின் நாயகனாய் நடித்துள்ள ரியோ ராஜ், கதை நடைபெறும் வாழ்வியலுக்கு ஏற்ற வகையில் கதாபாத்திரத்தின் தன்மையை நன்கு வெளிப்படுத்தும் வண்ணம் நன்கு நடித்துள்ளார்
சுஜி என்னும் கதாபாத்திரத்தியாக மாளவிகா மனோஜ். மற்றும் நாயகனின் இரண்டாவது இணையாக பவ்யா மற்றும் சார்லி .என அனைவருமே கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தின் தன்மைக்கு பொருத்தமான நடிப்பை
வழங்கியுள்ளார்கள்.
ஹரிஹரன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சித்துகுமார் இசையில் சிறந்த பாடல்கள் உள்ளன ,ராகுல் விக்னேஷின் ஒளிப்பதிவு கதையின் வாழ்வியல் சூழலை அழகுற பதிவு செய்துள்ளது
காதல் கால நினைவுகளை அழகுற பதிவு செய்துள்ள ஜோ, கண்டிப்பாக இளைஞர்களின் விருப்ப தேர்வு பட்டியலில் இடம் பெறும் .
