ஜென்ம நட்சத்திரம் திரை விமர்சனம்

இயக்குனர் ஆக வேண்டும் என்கிற கனவோடு இருக்கிற தமன் உதவி இயக்குனரா வேலை செய்ற அவர் தன் கூட பணியாற்றிய மால்வி மாலோத்ராவ காதலித்து கல்யாணம் பண்ணிக்கிறாரு மால்வி கர்ப்பமாகவும் இருக்காங்க ரெண்டு பேரும் நண்பர் மைத்ரேயா வீட்டில் தங்கி இருக்கிறார்கள். கர்ப்பமாக இருக்கிற மால்விக்கு பேய் கனவு வருகிறது இதை பற்றி அவர் தமன் கிட்ட சொல்றாரு. ஆனா அவரு அதை பெரிதுபடுத் தாமல் அலட்சியமா இருக்கிறாரு . இந்த சூழ்நிலையில் , ஒரு நண்பர் மூலமா கோயம்புத்தூரில் இருக்கிற ஒரு தயாரிப்பாளர சந்திச்சு கதை சொல்ல போறாரு தமன்.அந்த சமயம் தனியா ஒரு ரூம்ல இருக்கிற மால்விக்கு மறுபடியும் அதே கனவு வருது. ரத்தம் பதிந்த கையோட வெளியில ஏதோ ஒரு உருவம் இருக்குன்னு, மைத்ரேவையும்,ரக்ஷா செரினையும் மால்வி எழுப்புறாருங்க. மூணு பேரும் வெளியில போய் பார்க்கும்போது , பல இடங்களில் வெட்டுப்பட்ட நிலைமையில உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிற காளி வெங்கட் அங்கு இருக்காரு , அவர் தான் யாரு? என்பதையும் எதுக்காக அவருக்கு இந்த நிலைமை என்பதையும் அவங்ககிட்ட சொல்றாரு. எம்எல்ஏவான வேலராமமூர்த்தி இடம் உதவியாளரா வேலை செய்ற காளி நேர்மையானவராக இருக்கிறாரு , எலக்சனுக்காக பணத்தை பட்டுவாடா செய்ற வேலையும் அவர் செய்றாரு,அந்த சமயத்துல ,காளியோட குழந்தைக்கு இருதய ஆபரேஷன் கண்டிப்பா செய்யணும் என்ற நிலை ஏற்படுகிறது,அதுக்கான பண தேவைக்காக வேலராம மூர்த்தி கிட்ட காளி பணம் கேட்கிறாரு , ஆனால் பணம் தராமல் காளி வெங்கட்ட வேல ராமமூர்த்தி அலட்சியமா பேசறாரு. இதனால ஓட்டுக்கு பணம் கொடுக்க வைத்திருந்த பணத்தை எடுத்து மகளுடைய உயிரை காப்பாத்தணும்னு காளி நினைக்கிறாரு. எம்எல்ஏ ஆட்கள் அவர துரத்திகிட்டு வர, பணத்தை ஒரு இடத்தில மறைச்சு வைக்கிறாரு காளி ,எம்எல்ஏ ஆட்கள் அவரை வெட்ட அவங்க கிட்ட இருந்து தப்பிச்சு இங்க வராரு, கடைசில காளி வெங்கட், 57 கோடி ரூபாய் பணத்த பதுக்கி வெச்சிருக்கிற இடத்தை சொல்றாரு, உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கிட்டு என்னுடைய மகளை எப்படியாவது காப்பாத்துங்கன்னு சொல்லிட்டு அவர் இறந்தும் போய் விடுகிறாரு , போலீஸ்கிட்ட போகாம கிடைக்குற பணத்த வைச்சி பிரச்சனைகளை சரி செய்து குழந்தை காப்பாத்திட்டு life ல செட்டில் ஆகலாம்-னு மூவரும் முடிவு பண்ணாறnங்க. தமன் கிட்ட சொல்ல அவர் ஆரம்பத்துல இதை மறுக்க,ஆனால் பணம் கிடைச்சா சொத்தமா படம் எடுக்கலான்னு சொல்கிறார் மைத்ரேயா. அதன்படி நண்பர்கள் அனைவரும் சேர்ந்து பணம் இருக்குற இடத்த தேடி போறாங்க. கடைசியில பணம் கிடைச்சதா? அங்க நடக்கிற ஏதிர்பாரத சம்பவங்களினால இவங்களுக்கு என்ன நடந்தது அப்படிங்கிறதுதான் படத்தோட மீதிக்கதை.
கதையின் நாயகனாய் அஜய் என்னும் கதாபாத்திரத்தில் , ஒரு நடிகராக தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிற தமன் இந்தப் படத்தில் அந்த முயற்சியை கைவிடவில்லை. இவரின் பயிற்சியும் ,முயற்சியும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
கதாநாயகியாக நடித்திருக்கிற மால்வி மாலோத்ரா மற்றும் நண்பர்களாக வரும் மைத்ரேயா, ரக்ஷா செரின், அருண் கார்த்திக், சிவம் என அந்த அறிமுக நடிகர்கள் யாவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சரியான முறையில பயன்படுத்திகிட்டு நல்ல நடிச்சு இருக்காங்க, சிவம் எதிர்காலத்தில் நல்ல வில்லனா வருவார் என்று சொல்லலாம். மற்றபடி படத்தில் நடித்து இருக்கிற அனுபவம் வாய்ந்த கலைஞர்களான, காளி வெங்கட் ,மூனீஷ்காந்த், வேலராமமூர்த்தி ,தலைவாசல் விஜய் போன்றவர்கள், ஜென்ம நட்சத்திரத்திற்கு பக்க பலமா இருந்திருக்காங்க.
ஒரு சில இடங்களில் மட்டுமே பயணிக்கிற படத்தோட காட்சிகளை அதன் தேவைக்கு தகுந்த மாதிரி கே.ஜி ஒளிப்பதிவு செஞ்சிருக்காரு ,பெரும்பாலான காட்சிகள் பாழடைந்த மில்லுக்கு உட்ப்புறமாக நடக்கிறதுனால அவருடைய ஒளிப்பதிவும் ,அதற்கு ஏற்றார் போல் அமைந்திருக்கு, சஞ்சய் மணிகண்டனின் இசை காட்சிகளில் இருக்கும் தொய்வுகளை சரி செய்து ,படத்துக்கு உறுதுணையா அமைந்திருக்கு.
அமானுஷ்ய சம்பவங்களோடு படம் ஆரம்பிக்க, காட்சிகள் நகர நகர பணத்துக்காக மனம் மாறும் முகங்களுக்குள் பயணித்து ,மீண்டும் அமானுஷ்ய காட்சிகளோடு படம் முடியுது. ஒரு முழு நீள பேய் படமாக எடுக்க முயற்சி செஞ்சி இருக்காரு இயக்குனர் மணி வர்மன். முதல் பாதி கொஞ்சம் விறுவிறுப்பா நகர்ந்தாலும் ,இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் அந்த விறுவிறுப்பு குறைவதை தவிர்த்து இருந்திருக்கலாம். பேய்களின் நாடகமா மனிதர்களின் நாடகமா என்ற கேள்விக்கு இரண்டாம் பாதியில் விடை கிடைக்கிறது ,ஒரே இடத்தில் நடக்கும் சம்பவங்கள்னால ஏற்படுகின்ற தொய்வ கொஞ்சம் திசைமாற்றி முனீஸ் காந்த் மூலம் கொஞ்சம் நகைச்சுவையை ஆங்காங்கே தெளித்து இருந்தால் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கும்.
ஜென்ம நட்சத்திரம் -ஒளிவீசும்
