Tuesday, March 18

ஜவான் -விமர்சனம்

நமது நாட்டின் எல்லைப் பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்தின் ஆற்றில் கடுமையான படுகாயங்களுடன் அடித்து வரப்படும் ஒருவரை அந்த ஊர் மக்கள் அவரைக் காப்பாற்றி சிகிச்சை அளிக்கின்றனர்.அதற்க்கு பதில் உதவியாக அந்த மக்களை ஒரு இடரிலிருந்து அவர் காப்பாற்றுகிறார். அவரே கதையின் நாயகன் ஷாருக்கான் .அதன் பின் முப்பது வருடங்களுக்கு பிறகு மும்பையில் மெட்ரோ ரயிலை மர்ம மனிதன் ஒருவர் (ஷாருக்கான்), சில பெண்களின் உதவியுடன் கடத்துகிறார். அதே ரயிலில்தான் ஆயுத வியாபாரியான காளி கெய்க்வாட்டின் (விஜய் சேதுபதி) மகளும் உள்ளார் . இதனால் அந்த மர்ம மனிதன் கேட்கும் தொகையை காளி கெய்க்வாட் கொடுத்து விடுகிறார் . அதற்க்கு மறுநாள் அந்தத் தொகை அனைத்தும் நாட்டிலுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படுகிறது.அவரை பிடிக்கும் பணி காவல்துறை அதிகாரியான நர்மதாவிடம் (நயன்தாரா) ஒப்படைக்கப்படுகிறது. இந்த இரண்டு ஷாருக்கான்கள் யார்?.. விஜய் சேதுபதிக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? இது போன்ற கேள்விகளுக்கு விடையே ‘ஜவான்’.படத்தின் மீதி கதை.

விக்ரம் ரத்தோர், ஆஸாத் என இரண்டு வேட கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளார் ஷாருக்கான் அவருக்கு இணையாக மிரட்டியுள்ளார் நயன்தாரா ,நர்மதா எனும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நன்கு நடித்துள்ளார்

வில்லத்தனத்தில் விஜய் சேதுபதி தனது நடிப்பின் மூலம் மீண்டும் ரசிகர்கள் மனதில் நிறைகிறார், மேலும் தீபிகா படுகோனே, பிரியாமணி,சஞ்சய் தத், யோகிபாபு என் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்கு ஏற்ற வகையில் நன்கு நடித்துள்ளார்கள்


சமூக பிரச்னைகள், கருத்துக்கள் கொண்ட கதை களத்தை பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த நிறைவான படமாக ‘இயக்குநர்’ அட்லி உருவாக்கியுள்ளார் ,ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் வழங்கியுள்ள அனிருத் ,சிறப்பான ஆக்ஷன் காட்சிகளை தந்த ஸ்டண்ட் இயக்குநர்கள் மற்றும் படத்தொகுப்பாளர் ரூபன் போன்றோரும் ‘இயக்குநர்’ அட்லிக்கு பக்கபலமாய் நின்றுள்ளார்கள் .

ஆக்‌ஷன், சென்டிமெண்ட்,லவ் அனைத்து அம்சங்களும் நிறைந்த முழுநீள என்டர்டெயின்மெண்ட் படமான ‘ஜவான்’எல்லோரையும் கவரும் .

Spread the love