காவல்துறையில் அசிஸ்டென்ட் கமிஷனராக அர்ஜுன் (ஜெயம் ரவி)அவருடன் பணியாற்றும் நண்பராக ஆண்ட்ரூ (நரேன்) உள்ளார்கள்,சென்னையில் தொடர்ச்சியாக பல இளம் பெண்கள் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள்.அந்த கொலையாளியை கண்டுபிடிக்க காவல்துறை அதிகாரிகளான அர்ஜூன், அவருடைய நண்பர் ஆன்ட்ரூ குழு களம் இறங்குகிறது,இந்த கொலைகளை தன்னை கடவுளாக நினைத்துக்கொள்ளும் ‘பிரம்மா’என்னும் கொலைகாரன் செய்வதாகக் கூறப்படுகிறது.கடினமான முயற்சிகளுக்கு பிறகு, போலீசார் அவனை பிடிக்கின்றனர் இந்நிலையில் ஆண்ட்ரூ கொல்லப்படுகிறார். அவரது மரணம் அர்ஜுனின் மனதில் பெரிய சுமையை ஏற்படுத்துகிறது.நண்பனின் குடும்பத்தை பாதுகாப்பாய் பார்த்துக்கொள்ள விரும்பும் அர்ஜுன் (ஜெயம்ரவி) தனது காவல்துறை பணியிலிருந்து விலகிவிடுகிறார், திடீரென்று அந்த சைக்கோ கொலைகாரன் பிரம்மா தப்பிகின்றான்,இதன்பின்அந்த கொலைகாரன் என்ன செய்தான்? அதன் பின் அர்ஜுனின் (ஜெயம்ரவி) நிலைப்பாடுகள் என்ன ? என்பதே இறைவன் படத்தின் மீதி கதை…

கதையின் நாயகனாய் அர்ஜுன் என்னும் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நிறைவாக நடித்துள்ளார், தனியொருவனுக்கு பிறகு ஜெயம்ரவியுடன் இணைந்து நாயகியாக நடித்துள்ள நயன்தாராவுக்கு வழக்கமான நாயகி கதாபாத்திரம்தான்,ஆண்ட்ரூ என்னும் கதாபாத்திரத்தில் நரேனும், சீரியல் கில்லர் வில்லனாக நடித்துள்ள ராகுல் போசும் தங்களது பாத்திரங்களுக்கு ஏற்ற பங்களிப்பை நன்கு கொடுத்துள்ளார்கள் ,மேலும் வினோத் கிஷன்,விஜயலட்சுமி,, அழகம் பெருமாள், பக்ஸ் ,ஆஷிஷ் வித்யார்த்தி குறிப்பிட்டு சொல்லக் கூடிய வகையில் சார்லி போன்றோரும் கொடுக்கப்பட்ட கேரக்டர்களில் குறைவின்றி நடித்துள்ளார்கள்
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும், ஹரி.கே.வேதாந்த்தின் ஒளிப்பதிவும் படத்தின் கதையோட்ட த்துக்கு பெரிதும் உதவியுள்ளது , பாடல்களில் இன்னமும் யுவனின் பங்களிப்பு இருந்திருக்கலாம்.
வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் போன்ற முந்தைய தனது படங்களின் மூலம் தமிழ் திரை ரசிகர்களின் மனதில் இடம் பெற்று இருந்த ஐ.அஹமது இப்படத்தை இயக்கியுள்ளார், விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் எதிர்பாராத முடிச்சுகள் நிறைந்த ஆக்ஷன் த்ரில்லர் படமாக இறைவனை உருவாக்கியுள்ளார்.
இறைவனை நம்பி படம் பார்க்க வந்த ரசிகர்கள் நிச்சயம் ஏமாற்றபட மாட்டார்கள்.
