காமெடிக்கு கியாரண்டி- கலக்கும் சந்தானம் டீம் 
கதையின் நாயகனான வெற்றிவேல் (சந்தானம்)சராசரியான எல்லா ஆண்களுக்கும் உள்ள கனவைப் போலவே திருமணம் , வீடு என்ற ஆசைகளை கொண்டவர் தனக்கு சொந்த வீடில்லாத காரணத்தினால் தனது திருமணத்திற்கு ஏதேனும் தங்கு தடைகள் வந்துவிடக்கூடாது என்றெண்ணி 25 லட்ச ரூபாய் கடனில் சொந்த வீடு வாங்குகிறார். மேர்ட்ரிமோனியல் அலுவலகத்தில் வேலையில் உள்ள அவருக்கு பெரிய ஜமீன் விஜயகுமார் (தம்பி ராமையா) குடும்பத்து பெண்ணான தேன்மொழியை (ப்ரியாலயா) பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது அந்த பெண்ணையே திருமணம் செய்தபின்பு, அந்த ஜமீனுக்கு பத்து கோடி கடன் இருப்பது வெற்றிக்கு தெரிய வருகிறது. திருமணத்துக்கு பிறகு மனைவி, மாமனார் , மச்சான் உடன் சென்னைக்கு வெற்றி வருகிறார். இந்த நிலையில் தீவிரவாத கும்பலொன்று சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு வைக்க இங்கு வருகிறது. இறுதியில் வெற்றியால் கடனை அடைக்க முடிந்ததா ? அந்த வெடிகுண்டு திட்டம் என்ன ஆயிற்று ? என்ற கேள்விகளுக்கு விடை சொல்லுவதே மீதிக்கதை.
வழக்கம்போல தன்னுடைய களைகட்டும் ஒன்லைன் கவுன்ட்டர்களுடன் வெற்றி கதாபாத்திரத்தில் சந்தானம்.நன்கு நடித்துள்ளார் .மீண்டும் அவரது ரசிகர்களுக்கு விடுமுறை கால நகைச்சுவை ட்ரீடீனை நிறைவாக கொடுத்துள்ளார் .நாயகி பிரியாலயா கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வழங்கியுள்ளார் மேலும் தம்பி ராமையா, பால சரவணன், விவேக் பிரசன்னா, முனிஷ் காந்த், லொள்ளுசபா மாறன், மனோபாலா, சேஷூ, கூல் சுரேஷ் என நட்சத்திர பட்டாளங்கள் படம் முழுவதும் சிறப்பான பங்களிப்பை தங்களுடைய வளமான நடிப்பின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.
ஓம் நாராயணனின் ஒளிப்பதிவு படத்தின் காட்சி அமைப்புகளுக்கும், காமெடி காட்சிகளுக்கு ஏற்ற விறுவிறுப்பை எம்.தியாகராஜனின் படத்தொகுப்பும் நன்கு அமைத்துள்ளன டி.இமான் இசையில் பாடல்கள் நன்கு உள்ளன ,பின்னணி இசையினை பொறுத்தமட்டில் ஒரு முழு நீள நகைச்சுவை படத்திற்கு ஏற்ற வண்ணம் நன்கு அமைத்துள்ளார்,எடுத்துக்கொண்ட கதைக்கு ஏற்ற காட்சிகளை நகைச்சுவை மிளிர, பொருத்தமான நடிகர்களை கொண்டு ,சிறந்த பொழுதுபோக்கு படமாக கொடுத்துள்ளார் இயக்குநர் ஆனந்த் நாராயணன்.
மொத்தத்தில் சந்தானம் ரசிகர்கள் மட்டுமல்ல ,அனைவரும் இந்த விடுமுறைக்கால நகைச்சுவை விருந்தினை பார்க்கலாம் , சிரிக்கலாம் ,ரசிக்கலாம்.
