Tuesday, March 18

இந்தியன் 2-திரை விமர்சனம்

இயக்குனர் ஷங்கர்.இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996-ஆம் ஆண்டு வெளியான இந்தியன்,28 ஆண்டுகளுக்கு பிறகு தனது இரண்டாம் பாகமான இந்தியன் 2 வாயிலாக மீண்டும் வெள்ளித்திரையில் உலா வந்துள்ளதுசித்தார்த்.மற்றும் அவரது நண்பர்கள் பிரியா பவானி சங்கர், ஜெகன் மற்றும் ரிஷிகாந்த் யூ டியூப் சேனலை நடத்தி வருகிறார்கள். அந்த சேனல் வாயிலாக நாட்டில் நடைபெற்றுவரும் சமூக அநீதிகளை, லஞ்ச லாவன்ய குற்றங்களை வீடியோவாக வெளியிட்டு வருகின்றார்கள் ஒரு சூழலில் இவற்றை தட்டிக்கேட்க மீண்டும் இந்தியன் தாத்தாவே வரவேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள் ‘இந்தியன்’ தாத்தாவை மீண்டும் திரும்பி வரவழைக்க #ComeBackINDIAN என்ற ஹேஷ்டேக்கை சமூகதளங்களில் ட்ரெண்ட் செய்கிறார்கள் .இந்த நிலையில் தைவானில் தற்போது வர்மக்கலை பயிற்சிப் பள்ளி நடத்தி வரும் சேனாபதிக்கு இது தெரிய வந்து, இந்தியாவிற்கு மீண்டும் வரும் அவர் என்ன செய்தார்?என்பதே இந்தியன் 2′-வின் கதை.

சேனாபதியாக வலம் வரும் உலகநாயகன் கமல்ஹாசன் தனக்கே உரித்த தனி தன்மை கொண்ட உடல் மொழியாலும், குரலாலும் நிறைவான நடிப்பை அர்ப்பணிப்புடன் கொடுத்துள்ளார். சித்தார்த்.மற்றும் அவரது நண்பர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கேற்ற நடிப்பை நன்கு வெளிபடித்தியு ள்ளார்கள்,மற்றும் சமுத்திரகனி, விவேக், மனோபாலா, மாரிமுத்து:பாபிசிம்ஹா போன்றோரின் நடிப்பும் ரசிக்கும்படி உள்ளது மேலும் குறிப்பிட்ட கவனத்தினை பெறுபவர் எஸ்.ஜே.சூர்யா, மேலும் தம்பி ராமையா, காளிதாஸ் ஜெயராம், டெல்லி கணேஷ், ரேணுகா,என அணிவகுக்கும் நட்சத்திர பட்டாளங்களின் பங்களிப்பும் நிறைவாக உள்ளது

:பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்துக்கு அனிருத்தின் இசை மேலும் பலம் சேர்த்துள்ளது. பிரம்மாண்டகாட்சிஅமைப்புகளையும் ,பொருத்தமான நடிகர்களையும் கொண்டு அதோடு தரமான தொழில்நுட்ப கலைஞர்களின் பக்கபலத்தோடு ,இயக்குனர் ஷங்கர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய visual treat ஆக இந்த படத்தினை கொடுத்துள்ளார்.

பல வருடங்களுக்கு முன்னால் வெற்றி கண்ட கலைஞர்கள் மீண்டும் புதிய கலைஞர்களுடன் கரம் சேர்த்து கொண்டு உருவாக்கியுள்ள இந்த படைப்பு அனைத்து தரப்பு ரசிகர்களையும் நிச்சயம் கவரும். .

Spread the love