சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹவுஸ் மேட்ஸ்’.
எந்த ரத்த சொந்தங்களும், உறவுகளும் இல்லாத தர்ஷன் தன்னுடைய நண்பன் தீனாவுடன் தங்கியிருக்க தங்கி இருக்கும் ஹவுஸ் ஓனரின் மகளை (அர்ஷா சாந்தினி பைஜூ ) காதலிக்கிறார், சென்னையில சொந்தமா ஒரு வீடு வாங்குனா தன்னுடைய பொண்ணை கொடுக்கிறேன்னு சொல்றாரு பெண்ணின் அப்பா, இதனால தான் சம்பாதித்து வெச்ச எல்லா பணத்தையும் வைத்து ஒரு 45 லட்ச ரூபாய்ல ஒரு அப்பார்ட்மெண்ட்டை வாங்குறாரு தர்ஷன்.அப்படி வாங்க்கின வீட்டை ரிஜிஸ்டர் பண்ணிட்டு பொண்ணு கேக்க போறாரு தர்ஷன். ஆனா பொண்ணோட அப்பா, தன்னுடைய பொண்ணு அர்ஷா சாந்தினி பைஜூவை கல்யாணம் பண்ணி கொடுக்க முடியாதுன்னு சொல்லி வெளியில் அனுப்பி விடுறாரு, அப்பா அம்மாவை எதிர்த்துகிட்டு அர்ஷா சாந்தினி பைஜூ கல்யாணம் பண்ணிக்கிறாங்க, ரெண்டு பேரும் சந்தோஷமா அந்த அப்பார்ட்மெண்ட்ல பல கனவுகளோடு குடியிருக்க போறாங்க. அன்று இரவு பெய்யும் மழையில இடி இடிக்க ,அந்த இடி இவர்களுடைய பிளாட்ல, சில அறிவியல் மாற்றங்களை உருவாக்குது. இதனால அடுத்து வரும் நாட்களில் சில நிகழ்வுகள் அங்க நடக்குது , ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி அந்த வீட்ல இருப்பதாக அர்ஷா சாந்தினி பைஜூவும் உணர்றாங்க, இந்த விஷயத்தை தர்ஷன் கிட்ட சொல்றாங்க ,ஆரம்பத்துல தர்ஷன் இதை நம்ப மறுத்தாலும் பின்பு அதை நம்புறாரு.அங்க இருக்கும் சுவத்துல ஒரு சின்ன பையன் வரைஞ்ச ஓவியம் இருக்கு, அதோட கூட சில கேள்விகளும் வர, என்ன பண்றதுன்னு தெரியாம இருக்கிற தர்ஷன் அந்த கேள்விகளுக்கு பதில் எழுதலாம்னு ரெண்டு பேரும் முடிவு பண்றாங்க ,இப்படியாக கேள்விகளும் அதற்கான பதில்கள் மூலமா, 2012ல அதே வீட்டுல இருந்த காளி வெங்கட் வினோதினி மற்றும் அவருடைய குழந்தையும், அதேபோல 2022ல தர்ஷன், அர்ஷா சாந்தினி பைஜூ தம்பதி என இந்த இரண்டு குடும்பமும் அறிவியல் மாற்றத்தினால் ஒரே வீட்டுக்குள்ளாக இருக்கிற விஷயம், இரண்டு குடும்பங்களுக்கும் தெரிய வருது, இந்த நிகழ்வு எப்படி நடந்தது ? இது சாத்தியமா ? என்ற கேள்விகளோடு, இந்த நிகழ்வினால் இரண்டு குடும்பங்களுக்கு மத்தியில் ஏற்படுகின்ற சிக்கல்கள், பிரச்சனைகள் என்ன ?அந்த சிக்கல்களில் இருந்து அவர்கள் எப்படி வெளியே வந்தார்கள்? இரண்டு பேருமே வீட்டை காலி பண்ண முடியாதுன்னு பிடிவாதமாய் இருக்க, கடைசில யார் வீட்டை விட்டு போனார்கள், அறிவியல் மாற்றத்தினால் ஏற்பட்ட இந்த நிகழ்வுக்கு தீர்வுதான் என்ன ?அப்படிங்கற தான் ஹவுஸ் மேட் படத்துடைய மீதி கதை.
படத்தின் கதையின் நாயகர்களாக, ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களாகவே மாறி இருக்கும் தர்ஷன், அர்ஷா சாந்தினி பைஜூ ,காளி வெங்கட் வினோதினி போன்ற நால்வரும் ஆரம்பத்தில் பேய் இருக்குமோ என்கின்ற பதட்டத்தை ஏற்படுத்தி இருப்பதும் பின்வரும் காட்சிகளில் , திரைக்கதை ஓட்டத்தில் இருக்கும் இறுக்கத்தை இலகுவாக்கி, பார்ப்பவர்களை பதட்டத்துக்குள் இருந்து விலக்கி, கலகலப்பாக்கி ,ஜனரஞ்சகனமான படமாக மாற்றும் வண்ணமாக இவர்களுடைய பங்களிப்பு இந்த படத்துல சிறப்பாக அமைந்திருக்கு.மேலும் நண்பராக வரும் தீனா, அப்துல் லீ மற்றும் மாஸ்டர் ஹென்றிக் போன்றவர்களும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை அழகாக செஞ்சிருக்காங்க
குறிப்பாக கலை இயக்குனர் ராகுல் உடைய பங்களிப்பு இந்த படத்துல மிக முக்கியமானதாக அமைந்திருக்கு, ஒரே வீட்டுக்குள் இரு வேறு குடும்பங்கள் பயணிக்கும் காட்சிகளை தன்னுடைய கலை அமைப்பின் மூலமாக நயம்பட அமைத்து படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார் ராகுல் .
ராஜேஷ் முருகேசன் இசை மற்றும் பின்னணி இசை கதையோடும் காட்சியோடும் ஒருங்கிணைந்து நெருடல் இல்லாத பின்புலத்தை கொடுத்திருக்கு , எம்எஸ் சதீஷின் ஒளிப்பதிவும் இரு வேறு கோணங்களை இரண்டற கலந்து திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்துவதற்கு கதைக்கும் ,படத்திற்கும் பலம் சேர்த்திருக்கு.
படத்தின் முதல் பாதியில், நடைமுறையில் இது சாத்தியமா ? இது போல் நடக்குமா ? என்று கேள்விகள் சில இடங்களில் எழும் வகையில் கதைகள காட்சிகள் இருந்தாலும், படத்தின் இரண்டாம் பாதியில் அது அப்படியே தலைகீழாக மாறி, வேறு கோணங்களில், வேறு தளத்தில் சுவாரசியமாக திரைக்கதை பயணிக்கிறது.
அறிவியல் சார்ந்த விஷயத்தை படத்தின் மையக்கருவாக எடுத்துக்கொண்டு, அந்த கதையினை மக்கள் ரசித்து பார்ப்பதற்கு தேவையான வகையில் திரைக்கதையில் சில கமர்சியல் விஷயங்களை ,பல அடுக்குகளாக அமைத்து, தன்னுடைய முதல் படத்தை ,வித்தியாசமான படமாக உருவாக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் ராஜவேல் .
