நானி, ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் வெளிவந்துள்ள ஹிட் 3 திரைப்படத்தை சைலேஷ் கோலானு இயக்கியுள்ளார்.
அர்ஜுன் சர்க்கார் எஸ் பி( நானி)ஆக உள்ளார் அவர் விசாகப்பட்டினத்தில் ஒரு கொலை குற்றத்தை விசாரணை செய்கிறார் ஆனால் அந்த கொலையை செய்ததும் அவரே தான் .அதேபோல மறுபடியும் இன்னொரு கொலையை அர்ஜுன் நானி செய்யும்போது மற்றும் ஒரு பெண் காவல்துறை அதிகாரி அதை பார்த்துவிட்டு அவரை தடுக்க முயற்சிக்கிறார் அதற்குப் பிறகு அந்த இரண்டு கொலைகளை தான் செய்வதற்கான காரணம் ,அதன் பின்னணி என்ன என்பது குறித்து நானி விளக்கம் கொடுக்கிறார் அந்த ஃபிளாஷ்பேக்கில் அதிர்ச்சியான திடுக்கிடும் பின்னணி விஷயங்கள் வெளியாகின்றன இதற்குப் பிறகு நடப்பவனே படத்தின் மீதி கதையாக உள்ளது.
படத்தில் கதையின் நாயகனாக நானி தான் ஏற்றுக் கொண்ட காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் மிடுக்கான உடல் மொழியுடன் சிறப்பாக நடித்துள்ளார். கதையின் நாயகியாக மிருதுளா எனும் கதாபாத்திரத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார் இவருக்கும் நானி க்குமான காதல் காட்சிகள் நன்றாக உள்ளன இந்த படம் ஸ்ரீநிதிக்கு தெலுங்கில் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது
மற்றும் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள பிரதிக் பாபர் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ,மேலும் நானியின் தந்தையாக சமுத்திரகனி ,கோமளிபிரசாத் ,சூர்யாஸ்ரீநிவாஸ், ராவு ரமேஷ் என அனைவரும் தத்தம் கதாபாத்திரங்களில் நிறைவாக நடித்துள்ளார்கள்
ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கிஸின் கைவண்ணத்தில் வெளிப்புற காட்சிகள் சிறப்பாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன ,அதேபோல ஆக்ஷன் காட்சிகளிலும் அவரது பணி பாராட்ட தகுந்த வகையில் உள்ளது .மிக்கி ஜே மேயரின் பின்னணி இசை ,காட்சிகளுக்கு பொருத்தமான பின்பலத்தை திறம்பட வெளிப்படுத்தி உள்ளது. ஆக்சன் கதைக்கு ஏற்ற விறுவிறுப்பை, திரைக்கதையில் நிறைவாக கொடுத்து, முழு நீள பொழுதுபோக்கு படத்,தை சைலேஷ் கோலானு கொடுத்துள்ளார். திரைக்கதையில் வேகமும் விறுவிறுப்பும் இருந்தாலும் அதில் பல இடங்களில் இழையோடி இருக்கும் தீவிரமான வன்முறை காட்சிகளை குறைத்து இருக்கலாம் என்ற எண்ணம் மேலாங்காமல் இல்லை ,படத்தின் இறுதியில் ஹிட் பார்ட் 4 -க்கான லீடும், அதில் தமிழ் முன்னணி நடிகரின் என்ட்ரியும் திரையரங்குகளை அதிர வைக்கிறது .
மொத்தத்தில் ஹிட் 3 ரசிகர்களுக்கு முழு நீள சம்மர் ஆக்சன் ட்ரீட்
