பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில், பிரம்மாண்ட பான் இந்தியப் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ஹனு-மான்.

இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் திரைப்பட யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகும் ஹனு-மான் படத்தின் கதை அடிப்படையில் “அஞ்சனாத்ரி” என்ற கற்பனை இடத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க சிஜியில் உலகத்தரத்தில் இந்த ஃபேண்ட்ஸி உலகம் உருவாக்கப்பட்டுள்ளது.
அனுமந்து (தேஜா) தனது சகோதரி அஞ்சம்மாவுடன் (வரலட்சுமி)அஞ்சனாத்ரி என்ற கற்பனை கிராமத்தில் மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ்ந்து வரும் ஒரு இளைஞன். படத்தின் வில்லனான வினய்க்கு இளம் வயதில் இருந்து சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை போன்றே தானும் மாற வேண்டும் என் நினைக்கிறார், அனுமந்துக்கு திடீரென சூப்பர் சக்தி கிடைக்கிறது. இதன்னை அறிந்த வினய் அந்த சக்தியை தான் பெற வேண்டும் என் நினைக்கிறார். இறுதியில் அந்த சக்தி அவருக்கு கிடைத்ததா இல்லையா? அதன் பின் நடப்பவைகள் என்ன? என்பதே ஹனுமன் படத்தின் மீதி கதை.
வெளிவருவதற்க்கு முன்பாக ரசிகர்களின் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளியான ஹனுமான், அவர்களின் ஆவலை நிறைவேற்றியுள்ளது என்றே சொல்லலாம்
பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம் உள்ளது .படத்தில் இடம் பெற்றுள்ள அட்டகாசமான விஎப்எக்ஸ் காட்சிகள் கதை களத்தை நம் கண் முன்பாக காட்டும் வகையில் உள்ளது, கதையின் நாயகனான தேஜா சஜ்ஜா அனுமந்து என்ற கதாபாத்திரத்தில் நன்கு நடித்துள்ளார். மேலும் அக்கா கதாபாத்திரத்தில் வரலட்சுமி மற்றும் வினய் போன்றோரும் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார்கள்.
இந்த பிரம்மாண்டமான படத்தின் , ஒளிப்பதிவை சிவேந்திரா செய்துள்ளார், இப்படத்திற்கு இளம் திறமையாளர்களான கவுரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ணா சவுரப் ஆகிய மூவர் இணைந்து இசையமைத்துள்ளனர். இவர்கள் யாவரும் இயக்குனரின் கதை மற்றும் காட்சிகளுக்கு ஏற்ற வகையில் தங்களது பங்களிப்பை நன்கு கொடுத்துள்ளார்கள்.
ஹனு-மான் அனைவரையும் கவர்வான்.
