யாருக்காவது ஏதேனும் உதவி தேவைப்பட்டு கேட்டால் உடனே களத்தில் இறங்கி உதவிடும் கூகுளிடம் (சந்தானம்) கடத்தப்பட்ட தங்களது நண்பனை மீட்டுத்தர சிலர் உதவி கேட்டு வருகிறார்கள்.அவர்களது வேண்டுகோளின்படி உதவி செய்ய கிளம்பும் கூகுள் அந்த நண்பனை கண்டுபிடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்றாரா ?என்பதே இதன் கதை ஆகும்.
‘குலுகுலு’ படத்தில் புதிய மாறுபட்ட தோற்றம் மற்றும் நடிக்கும் பாணியில் வித்தியாசமாக சந்தானம் நடித்திருக்கிறார் அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத் ,மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் போன்றோரும் தங்கள் பங்களிப்பை நன்கு வெளிப்படுத்தி உள்ளனர்.
சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை மற்றும் பாடல்கள். படத்தில் குறிப்பட்டு சொல்லக்கூடிய ஒரு நல்ல அம்சமாகும் ,மேயாத மான், ஆடை படங்களுக்கு பிறகு ரத்னகுமார் இயக்கியுள்ள இந்த படத்தில் இதுவரை நாம் பார்க்காத சந்தானத்தை புதிய ட்ரெண்டில் வெளிப்படுத்த முயன்றுள்ளார் ,விஜய் கார்த்திக் கண்ணனின் ஓளிப்பதிவு பல காட்சிகளில் மிளிர்கிறது
இதுவரை நீங்கள் படங்களில் பார்த்த சந்தானத்தை இந்த படத்தில் தேடாமல் பொழுபோக்காக படம் பார்க்க விரும்பும் ரசிகர்களும் புதிய ட்ரெண்டில் சந்தானத்தை பார்க்க விரும்பும் அவரது ரசிகர்களும் நிச்சயம் இந்த படத்தை ரசிப்பார்கள் .