Friday, April 24

குட்டே(GOOD DAY) திரை விமர்சனம்

குட்டே திரைவிமர்சனம்

மதுவை மையமாகவும் அல்லது சில காட்சிகளில் மட்டும் அது பற்றி பேசப்படுகின்ற படமாகவும், சில படங்களில் நகைச்சுவைக்கான காட்சிகளுக்கு மட்டுமே குடிப்பழக்கத்தை பயன்படுத்தி இருப்பதையும்,நாம் பாத்திருப்போம் மேலும் இது போன்ற பல படங்கள் குடி குடியை கெடுக்கும் என்கின்ற மையக்கருத்தை விட்டு விலகாமலேயே இருக்கும்.அதேபோல சில படங்களில்,குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படும் பாதிப்பையும், அவர்களைச் சார்ந்த பிறருக்கு ஏற்படும் இன்னல்களையும், அதனால் ஏற்படுகின்ற வலியையும் ,வேதனைகளையும் , மனத்தை கனமாக்கின்ற வகையில் கதைகளங்கள் கொண்டதாக இருப்பதை பெரும்பாலும் பார்த்து இருப்போம், ஆனால் மதுவையும், மது பழக்கத்தையும் கதையின் கருவாக வைத்து இவ்வளவு எளிதாக இயல்பாக அனைவரும் பார்க்கும் படியான ஜனரஞ்சகமான ஒரு கதையாக சொல்கின்ற படம் குட் டே.

மனைவி குழந்தைகளை விட்டுட்டு வருமானத்திற்காக பிரித்விராஜ் ராமலிங்கம் திருப்பூரில் இருக்கிற ஒரு தனியார் எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்கிறார் ,அங்க தன்னுடைய நண்பர்களோட ரூம்ல தங்கி இருக்கிறார், தனக்கு கிடைக்கிற வருமானத்துல வீட்டுக்கு கொஞ்சம், அம்மாவுக்கு கொஞ்சம், தன்னுடைய செலவுக்கு கொஞ்சம் மாச சம்பளத்தை முழுமையா நம்பியிருக்கிறார், அவர் வேலை செய்ற கம்பெனியில் இருக்கிற மேனேஜர் கிட்ட ஒரு பொண்ணுக்காக நியாயம் கேட்க போய் அந்தப் பெண் முன்னாடியே அடியும் வாங்குகிறார், சம்பள நாளான அன்னைக்கின்னு பார்த்து இந்த சம்பவம் நடக்குது, வேலை முடிஞ்சு எல்லாரும் வீட்டுக்கு போக தனக்கு மட்டுமே சம்பளம் இன்னும் வரலன்னு மேனேஜர் கிட்ட கெஞ்சுறாரு, ஒரு வழியா மேனேஜரும் சேலரிபணத்தை அவரு அக்கவுண்ட்ல போடுறாரு ,சேலரி பணத்துல மனைவிக்கு கொஞ்சமும் அம்மாவுடைய மருத்துவ செலவுக்கு கொஞ்சமும் கொடுக்கிறார்.ஒரு பக்கம் தன்னுடைய இயலாமை ,கம்பெனியில் நடந்த அவமானம் இன்னொரு பக்கம் பொண்டாட்டியுடைய பிரச்சனை என எல்லாத்தையும் மறக்க தண்ணி அடிக்கிறார்.,அந்த நேரம் பார்த்து ஹவுஸ் ஓனர் மேலே வந்து வாடகை கேட்க ,அங்கிருந்து பிரச்சினை ஆரம்பமாகிறது, டிவில வர சாங் கேட்கிற பிரித்விராஜ்-க்கு காலேஜ்ல உடன் படித்த மைனாவோட ஞாபகமும் வருது, ஹவுஸ் ஓனருக்கும் இவருக்கும் நடக்கிற பிரச்சனையில வீட்டை விட்டு போற ப்ரீத்தி மைனாவ பார்க்கலாம்னு நினைக்கிறாரு ,. தான் என்ன பண்றோம்னு தெரியாம போதையில் இருக்கிற பிரித்வி, போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து இன்ஸ்பெக்டர் உடைய யூனிஃபார்மையும்,வாக்கி டாக்கியையும்  எடுத்துக்கிட்டு தப்பிச்சு போறாரு., போகிற இடங்கள் எல்லாம் ஒவ்வொரு பிரச்சனையா வர, அந்த பிரச்சனைக்குள்ள மாட்டிக்கிறாரு,கடைசில விடியறதுக்குள்ளாக ஏகப்பட்ட களேபரங்கள் நடக்குது., விடிந்த பிறகு போதையில் இருந்த ப்ரித்விக்கு ராமலிங்கத்திற்கு என்ன ஆச்சு, அவரால் ஏற்படுற பிரச்சனைகள் என்னென்ன? என்பதை முதல் நாள் இரவில் ஆரம்பித்து ,விடியும் போது அவை முடிவடையும் வகையில் கதை செல்லுகிறது..
.

உதவி மற்றும் இணை இயக்குனராக இருந்த பிரித்விராஜ் ராமலிங்கம் ,இந்த படத்துல சாந்தகுமார் என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக மற்றும் தயாரிப்பாளரா அறிமுகம் ஆகி இருக்கிறார், இவர் கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி கொண்டு, வெகு இயல்பாக நடிச்சிருக்காரு, ஒரு சாதாரண நடுத்தர வர்கத்துடைய குடும்பத் தலைவன் சந்திக்கிற பிரச்சனை ,அவர்களுக்கே உண்டான வேதனை, சந்திக்கின்ற அவமானங்கள், இதை மறக்க நாடிச் செல்லும் மது பழக்கம் இப்படி உள் மனதின் வேதனைகளை நடிப்பின் மூலமாக இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிற பிரித்விராஜ்க்கு பாராட்டுக்கள். குறிப்பாக சீரியஸான பிரச்சனைக்கு நடுவில் மாட்டிக்கிட்ட இவர் சில இடங்களில் அடிக்கிற லூட்டிகளை ரசிக்கலாம். இவரின் இரு பரிமாணங்களும் வெற்றியடைய வாழ்த்துவோம்

படத்தில் கல்லூரி தோழியாக கிருஷ்ண வேணி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மைனா நந்தினிக்கு குறைவான காட்சிகள் மட்டுமே இருந்தாலும் அவர் கொடுக்கப்பட்ட காட்சிகளில் குறைவின்றி நடித்துள்ளார் மேலும் அவரது கணவராக நடித்துள்ள ஆடுகளம் முருகதாஸ் மற்றும் ஜீவா சுப்பிரமணியம், கார்த்திக் நேத்தா, காளி வெங்கட், வேல ராமமூர்த்தி, போஸ் வெங்கட் என அனைத்து நடிகர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் நன்கு நடித்துள்ளார்கள் ..

மதன் குணதேவின் ஒளிப்பதிவு ,கதை களத்துக்கு இணக்கமாக ,காட்சிகளுக்கு பொருத்தமான வகையில் அமைந்துள்ளது..கோவிந்த் வசந்தாவின் இசையில் கார்த்திக் நேத்தாவின் வரிகளில், பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன, பின்னணி இசை கதையோட்டத்துடன் நன்கு பயனித்துளளது

இன்றைய சமூகத்தில் அன்றாடம் பார்க்கும் சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்களின் வாழ்க்கையின் வலிகளையும் சொல்லும் கதைக்கு,நேர்த்தியான திரைக்கதை கொண்டு இயக்குனர் :என்.அரவிந்தன் நல்ல கருத்துடன் படமாக்கியுள்ளார்.மது குடிப்பதை நியாயப்படுத்தவும் செய்யாமல், அது தவறு என்பதை மிகவும் உறுதியாக சொல்லுவதோடு , ஆனால் அவன் குடிக்கப் போவதுக்கான காரணம் அவன் மட்டும் கிடையாது, அதற்கு சமுகத்தில் இருக்கும் பலரும் காரணமாக உள்ளார்கள் என்பதையும் இந்த படம் சொல்லுகிறது . மேலும் ஒரு நாள் இரவுக்குள் பயணிக்கும் கதைக்குள், நடக்கும் சம்பவங்களை நல்ல ஒரு மெசேஜுடன் பதிவு செய்துள்ளது பாராட்டப்படக்கூடியது.

Spread the love