Thursday, April 23

காந்தி கண்ணாடி- திரை விமர்சனம்

ஜெய் கிரண் தயாரிப்பில் , இயக்குனர் ஷெரிஃப் இயக்கத்தில் , பாலா கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள படம் காந்தி கண்ணாடி. இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிகை அர்ச்சனாவும், இயக்குனர் பாலாஜி சக்திவேல் நடித்துள்ளார்கள் .

பாலாஜி சக்திவேலும், அர்ச்சனாவும் தெரிஞ்சவங்களுடைய அறுபதாவது கல்யாண விசேஷத்துக்கு போறாங்க, அங்க நடக்குற சம்பவங்களை பார்த்து மகிழ்ச்சி அடையிற அர்ச்சனா விளையாட்டாக நம்மளுக்கும் பிள்ளைங்க இருந்தா இந்த மாதிரி ஒரு விசேஷம் நடந்திருக்கும் என்று சொல்ல ,அதுவரையிலும் சந்தோஷமா இருக்கிற பாலாஜி சக்திவேல் இதைப்பற்றி சிந்திக்க ஆரம்பிக்கிறார்,தனக்காக எல்லாரையும் விட்டு விட்டு தன்னை மட்டுமே நம்பி  வந்த அர்ச்சனாவின் அந்த ஆசையை எப்படியாவது நிறைவேற்றணுமின்னு முடிவு பண்றாரு, பாலாவும் அவருடைய காதலியும் நண்பர்களும் சேர்ந்து மேரேஜ் ஈ வன்ட் நடத்தற வேலையை செய்றாங்க, அந்த பங்க்ஷன பாலா சிறப்பா செஞ்சதுனால பாலாஜி சக்திவேல் அவரை தேடி போறாரு , அறுபதாவது கல்யாணம் பண்ணனும் ,அதுக்கு எல்லா ஏற்பாடுகளை செய்யணும்னு சொல்றாரு, அர்ச்சனா இளமை காலத்துல அவரை காதலிக்கும் போது சொல்லுகின்ற ஒவ்வொரு விஷயத்தையும் இந்த அறுபதாவது கல்யாணத்துல நடத்தணுமின்னு சொல்றாரு ,அது என்னென்ன ஆசைகள் சொல்ல ,சொல்ல பட்ஜெட்டும் பெருசா போய்க்கொண்டே இருக்கு, கடைசியில அவர் சொன்ன எல்லா ஆசைகளையும் நிறைவேற்றி கல்யாணம் முடிக்க 55 லட்சம் ரூபாய் செலவாகும் என்று பாலாவின் டீம் சொல்றாங்க ,சாதாரண ஒரு வாட்ச்மேன் வேலை செஞ்சுட்டு இருக்கிற பாலாஜி சக்திவேல் இவ்வளவு பணத்துக்கு என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கிறாரு,இதுவரைக்கும் தனக்கென்று எந்த ஒரு ஆசையையும் சொல்லாத அர்ச்சனாவின் இந்த ஒரு ஆசையையாவது எப்படியாவது நடத்தியே ஆக வேண்டும் என்று முடிவு பண்றாரு ,கடைசில அதற்காக சில முயற்சிகளையும் எடுக்கிறார். எல்லாம் கைகூடி வர சூழலில் , 2016 இல் நடந்த சம்பவமான பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு, அந்த சூழ்நிலை தகர்க்கப்படுது, கடைசியில அர்ச்சனாவுடைய ஆசையை பாலாஜிசக்திவேல் நிறைவேற்றினாரா ?அதற்காக அவர் என்ன செய்தார் ?கடைசியில் அறுபதாவது கல்யாணம் நடந்ததா ?இல்லையா என்பதுதான் காந்தி கணக்கு போடும் கால்குலேஷன்.

கதாநாயகனாய் வெள்ளித்திரையில் பாலா அறிமுகமாகி உள்ள படம், ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு பொருத்தமான நடிப்பை கொடுத்துள்ளார் ,பாலாஜி சக்திவேல் மற்றும் அர்ச்சனா இருவரும் வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது என்னும் வாலியின் வரிகளுக்கு ஏற்ப இந்த படத்தில் அழகான முதியோர் காதலை தங்களது அனுபவ நடிப்பால் மெருகேற்றியுள்ளார்கள்,, மேலும் நாயகியாய் நடித்துள்ள நமீதா ஆராத்யா, ரிது சாரா, அமுதவாணன், மனோஜ் பிரபு, மதன் போன்றவைகளும் அவரவர் கதாபாத்திரங்களில் குறைவின்றி நடித்துள்ளார்கள்.

விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலை பதிவு செய்ய பாலாஜி கே.ராஜாவின் ஒளிப்பதிவும் , விவேக்-மெர்வின் இசையில் பாடல்களும் இயக்குனருக்கு பக்க பலமாய் நின்றுள்ளன. யதார்த்மான கதை மாந்தர்களை கொண்டு ,கதைகளம் அமைத்து ,கதாபாத்திரங்க்ளுக்கு பொருத்தமான கலைஞர்களை நடிக்க வைத்து ,இயக்குனர் ஷெரிஃப் நல்லதொரு படத்தினை கொடுத்துள்ளார் .

தற்போதைய ட்ரெண்டில் முன்னணி கதாநாயகர்கள் பலருமே காமெடி கலந்த கதாபாத்திரத்திலோ அல்லது காமெடி கலந்த காட்சிகளிலோ நடித்து வருகிறார்கள், அப்படி இருக்கையில் முதன்முறையாக பாலா கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் அவரது ரசிகர்களுக்கும் ,பிற திரை ரசிகர்களுக்கும் இந்தப் படத்தில் சற்று ஏமாற்றமே மிஞ்சுகிறது அதனை தவிர்க்கும் வகையில் படத்தின் முதல் பகுதிகளில் திரைக்கதை அமைக்கப்பட்டிருதால் , சில காட்சிகளில் ஏற்பட்டிருக்கும் தொய்வுகளும் தவிர்க்கப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. வலுவான கதாபாத்திரங்கள் இருந்தாலும் அந்த கதாபாத்திரங்கள் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளின் மீதும் எழும்பும் லாஜிக் மீறல் கேள்விகளுக்கு பதில் இல்லாமலே திரைக்கதை செல்கிறது,இது போன்ற அம்சங்களை தவிர்த்து இருந்தால் இந்த கண்ணாடி, ஆடம்பரத்திற்கு போடப்பட்ட கண்ணாடியாக இல்லாமல் அத்தியாவசிய தேவைக்காக போடக்கூடிய கண்ணாடியாக இருந்திருக்கும்.

Spread the love