Thursday, April 23

ஃப்ரைடே (Friday)- திரைப்பட விமர்சனம்

ஒரு வெள்ளிக்கிழமை இரவில் நடக்கும் கதை, படமாக உருவாக்கப்பட்டுள்ளது

அனிஷ் மாசிலாமணி, மைம் கோபி, KPY தீனா, ராமச்சந்திர துரைராஜ், கலையரசன் ,சித்ராசேனன் , சித்து குமரேசன் மற்றும் பலர் நடிப்பில் ஹரிவெங்கடேஷ்இயக்கியுள்ள திரைப்படம் ஃப்ரைடே இந்த படத்திற்கு ஒளிப்பதிவு  – ஜானி நாஷ் ,இசை – டுமே,படத்தொகுப்பு – பிரவீன் M,
தயாரிப்பாளர் – அனிஷ் மசிலாமணி,மக்கள் தொடர்பு – திரு.
அனிஷ் மாசிலாமணியும், கே பி ஒய் தீனாவும் ஒருவரை கொலை செய்ய முயற்சிக்கும் பொழுது தீனா தாக்குதலுக்கு உட்படுகிறார், இதனால் அனிஷ் மாசிலாமணி அவருடன் ஒரு இடத்தில் தஞ்சமடைய, குழுவில் இருந்து தப்பித்தவர் தன்னை கொலை செய்ய முயன்றவர்களை தேடும் அதே வேளையில் ,தீனாவும் அனிஷ் மாசிலாமணியின் உடன் இருந்து கொண்டே அவரை தீர்த்துக்கட்ட திட்டமிடும் குழுவுக்கு உதவியும் செய்து கொண்டிருக்கிறார். இதற்குப் பின் என்ன நடந்தது ?அனிஷ் மாசிலாமணி எதற்காக கொலை செய்ய முயற்சித்தார்? அவருடன் இருந்து கொண்டே அவரை கொலை செய்ய முயற்சிபவர்களுக்கு தீனா உதவி செய்வதற்கான காரணம் என்ன ?இது போன்ற கேள்விகளுக்கு விடையைத் தருகிறது ஃப்ரைடே படத்தின் மீதி கதை

கதையின் நாயகனாக நடித்திருக்க கூடிய அனீஸ் மாசிலாமணி, தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிப்பை தன் தோற்றத்தின் வாயிலாகவும் ,உடல் மொழியினாலும் நன்கு வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தைப் பெறுகிறார். மேலும் KPY தீனாமற்றும் மைம் கோபி இவர்கள் இருவரும், இந்தப் படத்தில் தங்களுடைய கதாபாத்திரத்தின் உணர்வுகளை சிறப்பான முறையில் வெளிப்படுத்தி, அவர்கள் ஏற்றி இருந்த கதாபாத்திரங்களுக்கு தங்களது நடிப்பின் மூலம் பெரும் பலம் சேர்த்துள்ளார்கள், மற்றும் ராமச்சந்திர துரைராஜ் ,கலையரசன் ,சித்ரா சேனன், சித்து குமரேசன் போன்றவர்களும் அவரவர் கதாபாத்திரங்களில் நன்கு நடித்துள்ளார்கள் .ஒளிப்பதிவாளர் ஜானி நாஷின் கை வண்ணத்தில் படத்தின் காட்சிகள் சிறப்பான முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன .அதே போல இசையமைப்பாளர் டுமோவின் பின்னணி இசை காட்சிகளுக்கு தேவையான பின்புலத்துடன் ஒன்றிணைந்து கதையோடு பயணித்துள்ளது.

ஹரி வெங்கடேஷ் இந்த படத்த இயக்கி இருக்கிறார், கிரைம் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் பெரிய நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகர்கள் இடம் பெற விட்டாலும் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களுக்கு வலிமை சேர்க்கும் வகையில் நடிக்கக்கூடிய கலைஞர்களை தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளார்.

மொத்தத்தில் இந்த ஃப்ரைடே இளம் ரசிகர்களுக்கு good day -தான்.

Spread the love