Monday, May 25

’ஃபோர்த் ஃப்ளோர்’- திரை விமர்சனம்

ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது தளத்தில் நடைபெறும் அமானுஷ்யமான சம்பவங்களை கொண்ட ஹாரர் திரைப்படம் இந்த ஃபோர்த் ஃப்ளோர்

கதையோட நாயகன் ஆரி அர்ஜுன் ஐடி ஐடி ஊழியராக மும்பையில் இருக்காரு, அவரோட முன்னாள் காதலி தொலைபேசி வழியா அவர் கிட்ட ஒரு உதவி கேட்கிறாரு , அதுக்கு அப்புறம் மும்பையில் இருந்து சென்னைக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு வர ஆரி,சென்னையில் இருக்கக்கூடிய ஒரு அடுக்குமாடி குடியிருப்புல, நான்காவது மாடியில தங்குகிறாரு , அதுக்கு பிறகு, தான் கிட்ட உதவி கேட்ட தன்னோட முன்னாள் காதலியே தேடுறாரு, இந்த நிலையில் நிறைய அமானுஷ்யமான விஷயங்கள் சம்பவங்களாக நடக்குது ,தன்னுடைய காதலியை ஆரி கண்டுபிடிச்சாரா ?அதற்குப் பிறகு என்ன நடந்தது ?அப்படிங்கறது தான் படத்தோட மீதி கதை.

இந்த படத்தோட கதையின் நாயகனாக ஐடி ஊழியராக ஆரி அர்ஜுன் நடிச்சிருக்காரு , தன்னோட காதலியை எப்படியாவது கண்டுபிடித்துவிடவேண்டும் அப்படிங்கற உத்வேகத்தோட அவர் செய்யக்கூடிய செயல்கள், அதுல அவர் காட்டும் வேகம் இதுக்கெல்லாம் பொருத்தமான விதத்துல தன்னுடைய நடிப்பை ,அளவான முறையில் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஆரி அர்ஜுன். பவித்ரா, தீபிகா மற்றும் மிரட்டல் வில்லனாக சுப்ரமணிய சிவா இவர்களுடன் தலைவாசல் விஜய் என பிற கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தவர்களும் அவரவர் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் குறைவில்லாத நடிப்பு நிறைவாக கொடுத்து இருக்காங்க, தருண்குமார் இசையில பாடல்கள் விட பின்னணி இசை குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வகையில் காட்சிகளுக்கு பக்க பலமாக சிறப்பான முறையில் அமைந்திருக்கு. விறுவிறுப்பான கதை களத்திற்கு தேவையான வேகத்தை படத்தொகுப்பாளர் ராம் சுதர்சன் கொடுத்திருக்கிறாரு .


இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து இருப்பவர் ஜெ.லக்ஷ்மண்,கதைக்கும், காட்சிக்கும் பொருத்தமான வகையில் கேமரா கோணங்களையும், ஒளி அமைப்புகளையும் சிறப்பான முறையில் அமைத்து படம் பார்க்கும் ரசிகர்களுக்கு தேவையான அளவிற்கு தனது காட்சி பதிவை நன்கு அவர் அமைத்துள்ளார்.

ஃபேமிலி சென்டிமென்டோட கலந்த ஹாரர் திரில்லர் சப்ஜெக்டை எடுத்துக் கொண்டு ,அதற்கு பொருத்தமாக நடிகர்களையும் நடிக்க வைத்து, விறுவிறுப்பான முறையில் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் எல் ஆர் சுந்தர பாண்டியன்.

மொத்தத்தில் ’ஃபோர்த் ஃப்ளோர்’-திருப்பங்களுடன் கூடிய திரில்லர்.

Spread the love