Thursday, January 15

ஃபேமிலி படம் -விமர்சனம்

கதையின் நாயகன் தமிழ் (உதய் கார்த்தி),திரைப்பட இயக்குனராக வேண்டும் என்ற இலட்சிய வேட்கையுடன் உள்ள இளைஞன். ஆனால் பல தயாரிப்பாளர்களை அவர் சந்தித்தும் வாய்ப்பு எதுவும் அமையவில்லை, கடைசியில் ஒரு தயாரிப்பாளரால் படம் இயக்க வாய்ப்பு கிடைத்தாலும்,அதிலும் பிரச்னை ஏற்பட்டு வந்த வாய்ப்பு கை நழுவி போய்விடுகிறது. தமிழின் இலட்சியகனவை நிறைவேற்ற, அவரது குடும்ப உறுப்பினர்களே கைகொடுத்து உதவி முயற்சிக்கிறார்கள் இறுதியில் தமிழின் இலட்சிய கனவு நனவானதா? இல்லையா? என்பதே மீதி படத்தின் கதை.இலட்சியகனவையும் சுமந்துகொண்டு, அத்தோடு பாசம், நேசம், காதல் என பல பரிமாணங்களில் வாழ்க்கை பயணத்தினை நகர்த்தும் இளைஞராக, ஏற்று கொண்ட கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நன்கு நடித்துள்ளார் உதய் கார்த்திக்.அவரது சகோதரர்களாக விவேக் பிரசன்னா,பார்த்திபன் குமார், தாத்தாவாக மோகன சுந்தரம், அவரது காதலியாக யமுனாவாக சுபிக்‌ஷாபோன்றவர்களும் தங்களது நடிப்பில் குறை காண இயலாத அளவுக்கு நன்கு நடித்துள்ளார்கள் .

திரைப்பட உலகம் பற்றிய திரை படங்களின் வரிசையில் இந்தப்படம் வந்து இருந்தாலும் அதில் சாதிக்க விரும்பும் ஓர் கலைஞனுக்கு, அவரது குடும்பமே உறுதுணையாக வருவது போல புதுமையாக திரைக்கதை அமைத்து ,இயக்குனர் செல்வ குமார் திருமாறன்.இப் படத்தினை நன்கு இயக்கியுள்ளார். அவருக்கு தேவையான முழு பங்களிப்பை ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரனும் படத்தொகுப்பாளர் ஆர். சுதர்சனும் கொடுத்துள்ளார்கள்.

ஃபேமிலி படம் – கதைக்கு பொருத்தமான தலைப்பு, அதேபோல ஃபேமிலியாக பார்பதற்கும் பொருத்தமான படம்.

Spread the love