விக்ரம் ரமேஷ், கார்த்திக் வெங்கட்ராமன், ஸ்வயம் சித்தா மற்றும் பலர் நடித்துள்ள எனக்கு End-யே கிடையாது படத்தை ஹங்கிரி வுல்ஃப் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் புரொடக்ஷன்ஸ் எல் எல் பி என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரித்துள்ளார் .

டாக்ஸி டிரைவராக உள்ள கதையின் நாயகன் சேகர் (விக்ரம் ரமேஷ்) ஊர்வசி (சுவயம் சித்தா)என்னும் பெண்ணை ஒரு பாரில் இருந்து பிக்கப் செய்துகொண்டு அவரது இல்லத்தில் ட்ராப் செய்வதற்காக செல்கிறார். காரில் பயணம் செய்யும் பொழுது இருவருக்கும் இடையே ஏற்படும் நட்பின் தொடர்ச்சியாக ஊர்வசி சேகரை மது அருந்த அழைக்கும் அழைப்பை ஏற்று வீட்டுக்குள் சேகர் செல்ல பின்னர் இருவரும் மது அருந்துகிறார்கள், போதை தெளிந்தபின்னர் அங்கிருந்து சேகர் கிளம்ப தயாராகும் போது அந்த வீட்டிற்குள் ஒரு சடலத்தை இருப்பதை காண்கிறான்.அந்த வீட்டிலிருந்து அவன் வெளியேற நினைக்கையில் அந்த பெண்ணும் இறந்து விடுகிறார்.அந்த வீட்டில் செக்யூரிட்டி லாக் சிஸ்டம் உள்ளதால் அவனால் வீட்டை விட்டு வெளியே வருவதற்க்கும் வாய்ப்பு இல்லை .சிறிதுநேரம் சென்ற பின்பு டேவிட் என்கிற திருடனும் அதன்பிறகு மஸ்தான் என்கிற அரசியல்வாதியும்அந்த பெண்ணை காண அந்த வீட்டிற்குள் நுழைகிறார்கள் அதன் பின் . அந்த இரவில் பல எதிர்பாராத சம்பவங்ள் அந்த வீட்டுனுள் நடக்கின்றன .இறுதியில் அந்த வீட்டில் என்ன நடக்கிறது ?என்னும் பல வினாக்களுக்கு விடையை தருகிறது எனக்கு என்டே-யே கிடையாது படத்தின் மீதி கதை.
டாக்ஸி டிரைவராக சேகர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம் ரமேஷ் மற்றும் ஊர்வசியாக நடித்திருக்கும் ஷ்வயம் சித்தா இவர்களுடன் டேவிட் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் வெங்கட்ராமன் மூவரும் தத்தம் பாத்திரங்களை உணர்ந்து நன்றாக நடித்திருக்கிறார்கள். விக்ரம் ரமேஷ் கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். ஒரு இரவில் வீட்டுக்குளேயே நடக்கக்கூடிய கதையை சிறப்பானகாட்சிஅமைப்புகளுடன் இயக்கியுள்ளார். மஸ்தான் வேடத்தில் நடித்துள்ள சிவக்குமார் ராஜுவும் நிறைவாக நடித்துள்ளார்
ஒரு வீட்டுக்குளேயே நடக்கக்கூடிய கதைக்கு ஏற்ற வகையில் சிறப்பான ஒளிப்பதிவை தளபதி ரத்தினம் கொடுத்துள்ளார். அவருக்கும் கதைக்கும் தேவையான கலை அம்சங்களை ஆர்ட் டைரக்டர் சூர்யாவும் அமைத்துள்ளார் கலா சரணின் பின்னணி இசையும், முகன் வேலுவின் படதொகுப்பும் இயக்குனருக்கு பக்கபலமாய் நின்றுள்ளது.
புதியவர்களின் புதிய முயற்சியை வரவேற்கலாம்.
