நாயகன் விமல் (அசோக்) மற்றும் நாயகி அபி (ராகினி திவேதி )ஆன்லைன் கேமில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் இவரும் நாயகன் விமலும் (அசோக்) காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். தொடர்ந்து ஆன்லைன் கேமில் ஈடுபடும் ராகினி திவேதிக்கு அந்த கேம் மூலமாகவே பிரச்சனை வருகிறது. அந்த சிக்கலில் இருந்து மனைவியை மீட்க நினைக்கும் நாயகனுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. இந்த சிக்கல்களை நாயகி அபி, தனது தோழிகள் உதவியுடன் முடித்துவிட நினைக்கும் போது அவருக்கு மேலும் பல இடையூறுகள் ஏற்படுகின்றன ? இறுதியில் என்ன நடந்தது என்பதை பல திருப்பங்களுடன் நகரும், மீதி கதை சொல்லுகிறது .
கதையின் நாயகனாக நடித்திருக்கும் அசோக் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை குறைவின்றி கொடுத்துள்ளார்
நாயகியாக நடித்திருக்கும் ராகினி திவேதி பல பரிமாணங்களில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.மேலும் ஆதவ் பாலாஜி, ஆர்த்தி ஸ்ரீ, மனோபாலா, லொள்ளு சபா மனோகர் என பலரும் அவரவர்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்தியுள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் செல்வம் மாதப்பன் காட்சிகளுக்கு தேவையான கேமரா கோணங்களையும், கவாஸ்கர் அவினாஷ் மற்றும் ஜுபின் இசை மற்றும் பிண்ணனி இசைகோர்வையினையும் அமைத்து இயக்குனருக்கு பக்க பலமாய் நின்றுள்ளார்கள்
இன்றைய காலகட்டத்தில் பெரும் பேசுபொருளாக உள்ள ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் ஏற்படும் பாதிப்புகளை மையமாக கொண்டு படத்தின் கதையினை உருவாக்கியுள்ள இயக்குநர் எஸ்.ஆர்.ராஜன் அதனை காட்சிப்படுவதில் இன்னமும் மெனக்கேட்டு இருந்தால் அதற்க்கு ஏற்ற பலன் அதிகமாகவே .கிடைத்து இருக்கும்.
மொத்தத்தில் பொழுது போக்கான விளையாட்டு ,போகப்போக விபரீதமாகவும் , கடைசியில் வினையாகவும் முடிந்து விட கூடாது எனபதை எடுத்துச்சொல்லும் இந்த இ-மெயில் அனைத்து ஆன்லைன் கேமில் அதிக நாட்டமுள்ளவர்களுக்கு ஒரு பாடத்தை தரும் படமாகும் .
