இப்படத்தின் ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற தலைப்பு, படம் எப்படியானதாக இருக்கும் என்ற பெரும் ஆர்வத்தை பார்வையாளர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இத்தலைப்பு குறித்து இயக்குநர்.., பல்வேறு தொழில்களின் அடிப்படையில் மக்கள் மழையை ஒரு வரம் அல்லது சாபமாக உணர்கிறார்கள் ஆனால், இங்கே கதாநாயகன் ஒரு விதிவிலக்கானவன், மழையை விரும்பாததற்கு அவனுக்கு தகுந்த காரணமும் உள்ளது. ஆனால் அதற்கு பின்னணி கதை எதுவும் இல்லை, மழையுடன் தொடர்புடைய நினைவுகள் சில அவனில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, ஆனால் இறுதியில் இவையெல்லாவற்றிலும் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. இந்தப் படத்தில் மேகா ஆகாஷின் கதாபாத்திரம் வழக்கமான ஒன்றாக இருக்காது, ஆனால் யதார்த்தமான பெண்ணின் சாயல்களை கொண்டிருக்கும். சரத்குமார் மிக முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தின் பெரும்பகுதியை தியூ – தாமன் பகுதியில் படக்குழுவினர் எடுத்துள்ளனர், அந்த கவர்ச்சியான இடங்களில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இதுவாகும். கன்னட திரையுலகில் மிகவும் கொண்டாடப்படும் தனஞ்செயா மற்றும் பிருத்வி அம்பர் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்கள். மற்ற நட்சத்திர நடிகர்கள் சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சுரேந்தர் தாக்கூர், ப்ரணிதி, இயக்குனர் ரமணா மற்றும் இன்னும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கிறார்கள்.
படத்தின் சிறு சிறு பகுதிகள் தவிர படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது, மேலும் 2022 கோடையில் இப்படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது, மற்றும் பிற போஸ்ட் புரடக்சன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.