cabdriver ஆக இருந்த தன் அப்பாவை கொலை செஞ்சவங்ககள சாமான்ய குடும்பத்துல இருக்குற அவரின் மகள் எப்படி பழிவாங்குகிறாள் அப்படிங்கறதுதான் டிரைவர் ஜமுனா படத்தோட கதை கரு ,

call taxi driver ஆக இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு ஒரு pickup செய்ய வேண்டிய booking வருகிறது யாரையும் அவங்க கொலை செய்வாங்கன்னு தெரியாம அவங்களை pickupம் செய்றாங்க …அரசியல்ல தனிப்பெரும் செல்வாக்கோடு இருக்கிற நரேனை கொல்ல வேண்டும் என்ற அசைன்மெண்டுடன் ஐஸ்வர்யாவோட வண்டியில அவங்க வர்றாங்க ..ஒருகட்டத்துல அவங்க யாருன்னு ஐஸ்வர்யாவுக்கு தெரிய வர பயத்துடன் பயணிக்கிறாங்க..தனி படை போலீஸ் ஐஸ்வர்யா போன் மூலமாக அந்த car ஐ follow பண்ணுறாங்க …இந்த விஷயத்தை தெரிஞ்ச அந்த கும்பல் ஐஸ்வர்யாவையும், காரையும் தங்களோட கன்ட்ரோலுக்கு கொண்டு வராங்க… யாரை கொலை செய்ய போறோமிங்கற போட்டோவையும்,அட்ரஸையும் தவிர யார் சொன்னாங்க? எதற்காக சொன்னாங்க? அப்படின்னு தெரியாம கொலை செய்யுற அந்த கும்பலிடம் சிக்கிக்கொண்ட ஐஸ்வர்யாவிற்கு என்ன ஆச்சு? போலீஸ் அவங்களை பிடிச்சாங்களா ?,தன்னோட அப்பாவை கொலை செய்தவர்களை ஐஸ்வர்யா பழி வாங்கினாரா? என்பதே மீதி படத்தின் கதை
யதார்த்தமான தோற்றத்துடன் மிக நேர்த்தியாக கதாபாத்திரத்துடன் ஒன்றிக்கொண்டு நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆக்ஷன் காட்சிகளிலும் திறம்பட நடித்து ரசிகர்களை கவர்கிறார். அரசியல்வாதியாக வரும் ஆடுகளம் நரேன், ஸ்ரீ ரஞ்சனி, அபிஷேக்குமார், கவிதா பாரதி, ஆகியோரும் கொடுக்கப்பட்ட தங்கள் கதாபாத்திரத்துக்கு வலு சேர்க்கும் வகையில் நன்கு நடித்துள்ளார்கள். இசை அமைப்பாளர் ஜிப்ரானும் ஒளிப்பதிவாளர் கோகுல் பினாயும் கதையின் காட்சி அமைப்புக்கு தேவையான பங்களிப்பை நிறைவாய் வெளிப்படுத்தியுள்ளார்கள். சஸ்பென்ஸ், ஆக்ஷன் கலந்த கதையை அனைவரும் ரசிக்கும் வகையில் நிறைவான படமாய் உருவாகி இருக்கிறார் இயக்குனர் கின்ஸ்லின்.
