Monday, April 20

டீசல்- திரை விமர்சனம்

டீசல் திரைப்படத்தினை சண்முகம் முத்துசாமி இயக்க, ஹரிஷ் கல்யாண் , அதுல்யா ரவி, வினய் ராய், சாய் குமார், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். திபு நினன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

படம் 90களில் தொடங்குது ,வடசென்னை பகுதியில் குருடாயிலை சுத்திகரிக்கிற ஆலைக்கு கொண்டு போறதுக்காக பல கிலோமீட்டர் பைப் லைன் மூலமா ,, எடுத்துட்டு போலாம் னு அரசாங்கம் முடிவு பண்றாங்க ,இதற்கு அந்தப் பகுதியில் இருக்கிற மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்,, இதனால போராட்டத்தை கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது இதில் சிலர் இறந்து போக பலர் ஊர காலி பண்ணிட்டு வேற பகுதிக்கு போறாங்க.பைப் லைன் புதைக்கப்பட்டு அதன் மூலமாக குருடாயிலும் தொழிற்சாலைக்கு போகுது ,இதனால கடலுக்கு போக முடியாம மீன் பிடிப்பு தொழிலும் பாதிக்கப்படுது, அதே பகுதியில் இருக்கிற சாய்குமார் தங்களுடைய வாழ்வாதாரத்தையும் ,வாழ்க்கையையும் பாதிக்கிற இந்த பைப் லைன் மூலமாகவே வாழ்வாதாரத்தை தேட முடிவு பண்றாரு ,இதனால பைப் லைன்ல போற குருடாயில திருடி தனியா அதை சுத்திகரிச்சு டீசலாகவும் ஒயிட் பெட்ரோல் ஆகவும் மண்ணென்னை,தார் ஆகவும் பிரித்து அதன் மூலமாக வரும் வருமானத்தை தன்னுடைய மக்களுக்கே கொடுக்கிறார் ,ஆனால் இந்த விஷயம் எதுவும் தெரியாத அந்த மக்களுடைய பார்வையில் அவரை ஒரு சிலர் வில்லனாகவே பாக்குறாங்க, சாய் குமார் லோக்கல் பெட்ரோல் பங்கில் முதல் போலீஸ் வரை யார், யாருக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதை செய்து தன்னுடைய தொழில் சாம்ராஜ்யத்தை பெருசாக்கிறார் .இதன் மூலமா மும்பையில் தொழில்அதிபராகவும் இந்தியாவில் ஆளுமை மிக்க பணக்காரராகாவும் உள்ளவரின் ஆதரவும் கிடைக்குது ,அவர் மூலமா எவ்விதமான பிரச்சினையும் இல்லாமல் பல ஆண்டுகளாக குருடாயில் திருட்டு வேலையினை சிறப்பா செஞ்சிட்டு வராரு சாய்குமார்.

ஆரம்பகால கட்டத்துல போராட்டத்தில் ஈடுபட்ட தன்னுடைய நெருங்கிய நண்பன் இறந்து போக ,அவருடைய மகனான ஹரிஷ் கல்யாணை தன்னோட மகனாக வளர்க்கிறாரு சாய்குமார்,அவரும் குருடாயில் திருடுகின்ற வேலையை மிக நேர்த்தியா செய்றாரு. இதனால அவருடைய பெயர் டீசல் ஆகவே மாறுது. போலீஸ் அதிகாரி இருக்கிற வினய் வேறு வழியில்லாமல் சாய்குமாரோடு ஒத்துப் போறாரு ,பல ஆண்டுகளா அவர் மேல கோபமும் தன்னுடைய அப்பாவ கொன்ற சாய்குமார பழி வாங்கிட்டு அவர் பாக்குற இந்த தொழிலை தானும் செஞ்சு பெரிய ஆளாகணும்னு வேக்  பிரசன்னா முயற்சி செய்றாரு. பல நேரங்களில் அது முடியாமல் போனாலும் அந்த சந்தர்ப்பத்திற்காக விவேக் பிரசன்னா காத்துக்கொண்டிருக்கிறார் ,இந்த சூழ்நிலையில் தொழில்அதிபர் தன் பேர்ல தனியா ஒரு துறைமுகம் உருவாக்குவதுதான் தனது கனவு லட்சியம் என்று சாய்குமார் கிட்ட சொல்றாரு அப்படி துறைமுகம் அமைக்கும் திட்டம் வந்தா தன்னுடைய ஊர் மக்கள் எல்லாம் மொத்தமா காலி பண்ணிட்டு வேற ஊருக்கு போக வேண்டிய சூழ்நிலை ஏற்படும் ,மேலும் அவர்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்பதால அவருடைய திட்டத்திற்கு சாய்குமார் மறுப்பு தெரிவிக்கிறார், இதனால ஆத்திரமடைகிற தொழில்அதிபர் தன்னுடைய கனவை நிறைவேற்ற போகும் திட்டத்திற்கு தடையாய் இருக்கிற சாய் குமாருக்கு பதிலாக வேறு ஒருவரை உருவாக்கி தன்னுடைய திட்டத்தை கொண்டு வரணும்னு முடிவு பண்றாரு.சாய்குமாருக்கு பதிலாக விவேக் பிரசன்னவை உருவாக்கி தன்னோட கனவை எப்படியாவது நிறைவேத்தவும் முடிவு பண்றாரு, இதற்கு பிரசன்னாவும் ஆதரவு கொடுக்க, விவேக் பிரசன்னாவும் ,போலீஸ் அதிகாரியா இருக்குற வினயும் சேர்ந்து ஹரிஷ் கல்யாண் தலைமறைவாய் இருக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்குறாங்க. அந்த சமயத்துல சாய்குமாரை கைது பண்றாங்க. கடைசியில் ஆளும் அரசியல் பலம், மிகப்பெரிய பணபலம் என இருக்கின்ற தொழில்அதிபரின் கனவு திட்டம் ,யாரால் எப்படி நிறைவேறியதா? இல்லையா?, ஆளுமை மிக்க அவரை எதிர்க்கும் ஹரிஷ் கல்யாண் போடும் திட்டம் நிறைவேறியதா ? இல்லையா என்பதுதான் படத்துடைய மீதி கதை

படத்தின் கதாநாயகனாக டீசல் கதாபாத்திரத்திற்கு ஏத்த மாதிரி தன்னுடைய நடிப்பை முழுமையாக மாற்றி ,வேறொரு பரிமாணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் ஹரிஷ் கல்யாண் ,இதுவரைக்கும் ரொமான்ஸ் ,ஆக்சன் என இரண்டும் கலந்த மென்மையான கதாபாத்திரங்களில் மட்டுமே பார்த்த ஹரிஷ், இந்தப் படத்தில் அவரது சிறந்த நடிப்பின் மூலம், அவர் வேற ஒரு பரிமாணத்திற்கு தயாராக இருக்கிறார் என்பதை உணர்த்தியிருக்கிறது. குறைவாக வரும் காதல் காட்சிகளில் நிறைவாகவும் ,ஆக்ரோஷமான நடிப்பை பல காட்சிகளிலும் நன்கு அவர் வெளிப்படுத்தியுள்ளார் .ஹரிஷ் கல்யாண் திரையுலக பயணத்தில் தொடர்ந்து பயணிக்கவும் .அவரை அடுத்த கட்ட நகர்விற்கு கொண்டு செல்வதற்கான படங்கள் அவருக்கு வருவதற்கும் இந்த டீசல் படம் ஆச்சாரமாக ,அடித்தளம் போட்டு இருக்குன்னு சொல்லலாம்.

கதாநாயகியாக நடித்திருக்கும் அதுல்யா ரவியின் நடிப்பு, அவரின் அழகு போலவே அமைஞ்சிருக்கு, விறுவிறுப்பான கதைக்களத்துக்கு ஏற்ப தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சரியாக பயன்படுத்தி நடித்துள்ளதன் மூலமாக தனது ரசிகர்களின் மனதை ஆட்கொண்டிருக்கிறார் அதுல்யா. படம் முழுக்க வியாபித்து, தன் நடிப்பின் ஆளுமையை அழகாக வெளிப்படுத்தி படத்துக்கும், திரைக்கதைக்கும் மிகப்பெரிய துணையாக நடித்திருக்கிறார் சாய்குமார். போலீஸ் அதிகாரியாக வரும் வினயும், வில்லனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னாவும் நண்பனாக துணை நிற்கும் திலக்கும் மற்றும் படத்தில் இடம் பெற்றுள்ள பிற நட்சத்திரங்களும் படத்தின் திரைக்கதைக்கு ஏற்ற வகையில் உறுதுணையாக இருந்திருக்காங்க.

பல படங்களில் சில கேரக்டர்களில் இதுவரை பார்த்து வந்த, சிலரும் கவனிக்கும் தவறிய சச்சின் கெடேகர் இந்தப் படத்தில் முழுமையாக தன்னுடைய நடிப்பால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி அறியப்பட வைத்திருக்கிறார்.மிகை இல்லாத ,மிடுக்கான பெரிய அதிபர்களின் நுட்பமான பல விஷயங்களை தன் தோற்றம் மற்றும் நடிப்பின் மூலமாக தத்ரூபமாக அவர் வெளிபடித்தியுள்ளார்.

தீபு நீனன் தாமஸின் பின்னணி இசை காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி செல்வதற்கு பெரிதும் துணை நின்றுள்ளது .. ரிச்சர்ட்.எம். நாதன் மற்றும் எம் எஸ் பிரபுவின் ஒளிப்பதிவு படத்தை அழகாக்கி,கதை நிகழும் கால சூழலை பக்குவமாய் காட்சிப்படித்தியுள்ளதுடன், கதையோடு பயணித்து காட்சிகளின் பின்புலத்தையும் சிறப்பாக பதிவு செய்துள்ளது பாராட்டக்கூடியது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்குள், இவ்வளவு பெரிய வியாபாரமும் அதன் மீதான ஆளுமைகளும், அவைகளால் ,நடத்தப்படும் திட்டங்களும் ,அதன் வியாபாரத்தை தன்னகப்படுத்துவதற்கு இவ்வளவு பெரிய சூழ்ச்சி வலையும் இருக்கிறது என்பதை மிக அழகாக, நேர்த்தியாக இரண்டரை மணிக்குள் வெள்ளி திரையில் காண்பித்து மக்களை ஆச்சரியப்படுத்தி ,.அதே நேரத்தில் பொழுது போக்காகவும் திரைக்கதையை நகர்த்தி முக்கியமான ஒரு பதிவை படமாக்கி இயக்கியிருக்கிறார் சண்முகம் முத்துசாமி. மிகப்பெரிய பட்ஜெட்டில் மிகப்பெரிய விஷயத்தை வெளியுலகத்திற்கு வெளிப்படுத்தி இருக்கும் டீசல் நிச்சயம் தீபாவளி வெடிக்குள் இருக்கும் அணுகுண்டு தான்

Spread the love