Tuesday, January 21

டைரி : திரை விமர்சனம்

டைரி படத்தை Five Star Creations LLP  சார்பில்  S கதிரேசன் தயாரிப்பில்  இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ளார்.  பயிற்சியினை நிறைவு செய்து முடித்த உதவி ஆய்வாளரகளிடம், இன்னுமும் கண்டுபிடிக்கமுடியாமல் முடியாமல் இருக்கும் ஏதாவுது ஒரு வழக்கை எடுத்து விசாரணை உத்தரவிடும் உயரதிகாரியின் ஆணையின் படி இணைங்க கண்களை மூடிக்கொண்டே ஒரு கோப்பை எடுக்கிறார் வரதன் (அருள்நிதி).என்பவர் ,அந்த வழக்கில் ஊட்டியில் இருந்து கோயமுத்தூர் செல்லும் வழியில் 13-வது கொண்டை ஊசி வளைவில் ஏற்பட்ட விபத்து மற்றும் அதேபோல் உதகையில் உள்ள ஒரு ஹோட்டலில் தம்பதியினர் கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது, அந்த கொள்ளை யாரால் நடத்தப்பட்டது? அவற்றை 16 வருடங்களை கடந்தும் கண்டுபிடிக்க முடியாமல் உள்ள நிலை இவற்றை விசாரணை செய்கிறார் அருள்நிதி ,பல திருப்பங்களைக் கொண்ட நிகழ்வுகளுடன் நகரும் கதையில் மர்மமுடிச்சுகள் எப்படி அவிழ்க்கப்பட்டன, புதிரான கேள்விகளுக்கு அருள்நிதி விடைகளை எப்படி கண்டார் ?அதன் பின் என்ன நடக்கிறது? போன்றவற்றை மீதி கதையில் காணலாம்

இந்தப் படத்தில் பயிற்சி உதவி காவல் ஆய்வாளராக நடித்துஇருக்கும் அருள்நிதி தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் நிறைவாக நடித்துள்ளார், மேலும் போலீஸ் டிரைவர் சாம்ஸ், ஷாரா, கிஷோர், எம்.எல்.ஏ, ஜெயப்பிரகாஷ், வழக்கறிஞர் சதீஷ் கண்ணன், போலீஸ் அதிகாரி அஜய் ரத்னம், தனம் ,பவித்ரா மாரிமுத்து என பெரும் நட்சத்திர பட்டாளங்களுடன் நகரும் கதைக்கு ரான் ஈத்தன் யோஹனின் பின்னணி இசையும் அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவும் , எடிட்டர் ராஜா சேதுபதியின் பங்களிப்பும் பாராட்டும் வகையில் உள்ளது

படத்தின் நிறைய காட்சிகள் பேருந்து பயணம் அதற்குள் ஏற்படும் உறவுகள், திருப்பங்கள் ஆகியவை நிறைந்த ஜனரஞ்சகமான படமாக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இப்படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார் திரில்லர் கதைகளுக்கு வரவேற்பு தரும் ரசிகர்கள், இந்த டைரியையும் நிச்சயம் பார்ப்பார்கள் ,இந்த படம் சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் டைரியில் இப்படத்தின் வெற்றிக்கான விபரங்களை இப்போதே குறித்து வைத்துக்கொள்ளலாம்

Spread the love