Sunday, April 19

‘தில் ராஜா’ -விமர்சனம்

‘GOLDEN EAGLE STUDIOS சார்பில், கோவை பாலாசுப்பிரமணியம் தயாரிப்பில், இயக்குநர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா, ஷெரீன் நடிப்பில்,வெளியாகி உள்ள திரைப்படம், “தில் ராஜா”.

கதையின் நாயகனான விஜய் சத்யா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகராக உள்ளார் அவர் தன்னுடைய மனைவி ஷெரின் மற்றும் மகளுடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார்.அவர் தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரும்போது அமைச்சரின் மகன் உட்பட நான்கு இளைஞர்கள் போதையில் இவர்களுடன் பிரச்சனையில் ஈடுபடுகின்றார்கள் விஜய் சத்யா, இந்த சூழலை எப்படி எதிர் கொண்டார்? அதன் பின் நடந்தவைகள் என்ன?என்பதை விறுவிறுப்பான காட்சிகளுடன் சொல்லுகிறது தில் ராஜா படத்தின் கதை.

நாயகனாக நடித்திருக்கும் விஜய் சத்யா, ஆக்ஷன் நாயகர்களுக்கு ஏற்ற உடல்மொழி கொண்டு உள்ளதால் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்கு மிகவும் பொருத்தமான வகையில் நடித்துள்ளார் அவரது மனைவியாக நடித்திருக்கும் ஷெரின் கதாபாத்திரத்துக்கு ஏற்ற வகையில் நன்கு நடித்து தன் அனுபவ நடிப்பை பதிவு செய்துள்ளார் .

அமைச்சராக எதிர்மறை கதாபாத்திரத்தில் ஏ.வெங்கடேஷ் நடிப்பிலும் நன்றாக ஸ்கோர்.செய்துள்ளார் .காவல் அதிகாரியாக நடித்திருக்கும் சம்யுக்தா , வனிதா விஜயகுமார் போன்றோரும் தத்தம் கதாபாத்திரங்களில் நன்றாக நடித்து ரசிகர்களிடம் தனிக்கவனம் பெறுகிறார்கள் .

.
மேலும் .கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட காட்சி களில் குறைவின்றி நடித்துள்ளார்கள் .

அம்ரீஷ் இசையில் பாடல்களும், ஆக்ஷன் கட்சிகளுக்கேற்ற வகையில் தரமான பின்னணிஇசையும் ரசிக்கும்படி உள்ளது ,சுரேஷ் அர்ஸின் படத்தொகுப்பும் மனோ வி.நாராயணாவின் ஒளிப்பதிவும் ஆக்ஷன் காட்சிக்களுக்கு தேவையான விறுவிறுப்பை கொடுத்து கதைக்கு பக்க பலமாய் நின்றுள்ளது

சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார், மாஞ்சா வேலு, மலை மலை, கில்லாடி போன்ற வர்த்தக ரீதியிலான படங்களை இயக்குவதில் தனித்தனதுவமான பலம் கொண்ட இயக்குனர் ரான ஏ.வெங்கடேஷ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தன் ஆக்ஷன் பாணியில் இப்படத்தினையும் ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமான படமாக கொடுத்துள்ளார்.

தில் ராஜா- அதிரடி ஆக்ஷன் ராஜா

Spread the love