Saturday, December 6

‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’- திரைப்பட விமர்சனம்

படத்திற்குள் ஒரு படமாக கதைக்களம் கொண்டு ,பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தின் ஒளிப்பதிவு – தீபக் குமார் பதி இசை- ஆஃப்ரோ.

திரைப்பட விமர்சகரான கதையின் நாயகன் கிருஷ்ணா என்னும் கிஸ்ஸா (சந்தானம்)’கிஸ்ஸா 47′ என்ற யூடியூப் சேனலின் மூலம் திரைப்படங்களை விமர்சனம் செய்து வருபவர். இயக்குநர் ஹிட்ச்காக் இருதயராஜ் (செல்வராகவன்) என்பவர் கிஸ்ஸாவை குடும்பத்துடன் தனது படத்தைக் காண பிரிமீயர் காட்சிக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார் அதன்படி செல்லும் கிஸ்ஸாவுக்கு, ஹிட்ச்காக் இருதயராஜ் திரைப்பட விமர்சகர்களைத் தேடிக் கொல்லும் பேயாக உள்ளது , தெரியவருகிறது. சந்தானமும் அவரது நண்பருமான மொட்டை ராஜேந்திரனும் திரைக்குள் இழுக்கப்பட்டு அங்கு ஓடும் திரைப்படத்துக்குள் சென்று பார்க்கும்போதுதான் அங்கு, அவரது குடும்பத்தினர்களான நிழல்கள் ரவி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் ஆகியோர் திரைப்படக் கதாபாத்திரங்களாக மாட்டிக்கொண்டு இருப்பது தெரிய வருகிறது, இறுதியில் தன் குடும்பத்தினரை கிஸ்ஸா எப்படி காப்பாற்றினார் என்பதே ‘டெவில்ஸ் டபுள்: நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் கதை.

கதையின் நாயகன் சந்தானம் தனிக்கே உரித்த பாணியில் பேசும் டயலாக் டெலிவரி பல இடங்களில் ரசிக்க வைக்கிறது மொட்டை ராஜேந்திரன் ,சந்தானம் காட்சிகளில் காமெடி ரசிகர்களை மிகவும் கவரும் வகையில் உள்ளன நாயகி கீத்திகாவுக்குபெரிய அளவில் வேலை இல்லாவிட்டாலும் கிடைத்த காட்சிகளில் நன்றா நடித்துள்ளார் . காட்சிகளில் மட்டுமே சிறிது வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது; அதைக் குறையின்றி செய்திருக்கிறார். செல்வராகவன் லொள்ளு சபா மாறன், கௌதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி ,நிழல்கள் ரவி, யாஷிகா ஆனந்த் என பல நடிகர்களும் படத்தில் அணிவகுத்து நின்று படத்திற்க்கு தங்களால் ஆன பங்களிப்பை செவ்வனே கொடுத்துள்ளார்கள்.

திகில் காமெடி ஜானரில் ,படத்துக்குள் படமாக ,ஒரு படத்தை பார்க்க வைக்கும் புதிய யுக்தியில் இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்தின் முயற்சி பாராட்டுக்குரியது .காட்சிகளுக்கு ஏற்ற கலை அம்சங்கள் நிறைந்த பிண்ணணியோடு ஒளிப்பதிவாளர் தீபக் குமாரும் பதியும்,கலை இயக்குநர் ஏ.ஆர். மோகனும் நன்கு பணியாற்றியுள்ளார்கள் ஆப்ரோவின் இசை இயக்குனருக்கு தேவையான அளவுக்கு தனது பங்களிப்பை கொடுத்துள்ளது .

மொத்தத்தில் இந்த DD Next Level படம் ரசிகர்களுக்கு ஏற்ற சம்மர் விடுமுறை பொழுபோக்குக்கு பொருத்தமான படம்.

Spread the love