தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஏற்ற படம் ‘தீபாவளி போனஸ்’

ஒரு கிராமத்தில் மனைவி மற்றும் மகம் என் சிறு நடுத்தரகும்பத்தில் வாழும் விக்ராந்த் ஒரு கொரியர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் தீபாவளி பண்டிகையை கொண்டாட விரும்பும் அவர்கள் பெரிதும் நம்பி இருப்பது தீபாவளி போனஸை .ஆனால், அதில் தாமதம் ஏற்படவே தன்னுடைய குடும்ப தேவைகளுக்காக விக்ராந்த் மாற்று முயற்சிகளில் ஈடுபடுகிறார்.ஆனால் அது அவரை வேறு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கொண்டு விடுகிறது அதன் பின் அவருக்கு என்ன நடந்தது ?அவரால் தனது மனைவி மற்றும் மகனுடன் தீபாவளியை கொண்டாட முடிந்ததா ?இல்லையா?என்பதை தீபாவளி போனஸ்’.படத்தின் மீதி கதை சொல்லும்.
இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் விக்ராந்த், இதுவரை அவர் நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில் எளிய கும்பத்தின் தலைவனாக சாமான்ய மக்களின் பிரதிபலிப்பாக நன்கு நடித்துள்ளார் இவரது மனைவியாக ரித்விகாநடித்துள்ளார்.சாதரண குடும்பத்து இல்லத்தரசிகளின் உணர்வுகளை சித்தரிக்கும் கதாபாத்திரத்தில் யதார்த்தமான நடிப்பை வழங்கியுள்ளார். இந்த பெற்றோரின் அன்பு மகனாக நடித்திருக்கும் சிறுவன் ஹரிஷ் தன்னுடைய சிறந்த நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறான்.
பாடல்களும், பின்னணி இசையும் காட்சிகளின் வழியே நன்கு பயணிக்கும் வகையில் மரிய ஜெரால்டின் இசை அமைந்துள்ளது.எளியமான முறையில் வாழ்க்கை பயணத்தினை கடக்கும் மக்களின் வாழ்வியலை ஒளிப்பதிவாளர் கெளதம் சேதுராமன் நன்கு பதிவு செய்துள்ளார்.
ஆண்டு முழுவதும் வாழ்வாதாரத்துக்காகவே உழைத்து வாழும் மக்களுக்கு கிடைக்கும் சின்ன சின்ன மகிழ்ச்சி பண்டிகை நாட்கள் தான். ஆசைப்பட்டு குழந்தைகள் கேட்கும் சில பொருட்களை பண்டிகைக்கு வாங்கி தருகிறேன் என பெற்றோர்கள் சமாதானம் கூறி வருவதால் ,பல குழந்தைகள் அந்த பண்டிகைக்காக தவமாய் தவம் இருப்பார்கள், ஆனால் அந்த சமயத்திலும் அந்த பெற்றோர்களுக்கு நிதி நிலை சரியாக அமையாமல் போனால், அந்த குடும்பம் சந்திக்கும் நிலை என்ன? என்பதை கதையாக்கி ,அதில் சிறப்பான காட்சிகளையும் சேர்த்து, நல்ல படத்தினை இயக்குநர் ஜெயபால்.ஜெ,உருவாக்கியுள்ளார்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில் படம் வெளியாகி, தற்போது பல குடும்பங்கள் சந்திக்கும் நிகழ்வுகளை பதிவு செய்துள்ளது .
மொத்தத்தில்,இந்த ‘தீபாவளி போனஸ்’ காலத்துக்கேற்ற கருத்துள்ள படம்.
