கதையின் நாயகனான கண்ணப்பன் (சதீஷ்) வேலையினை தேடும் ஒரு கேம் டிசைனர் அவரது அப்பாவாக வி.டி.வி. கணேஷ்,அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் உள்ளார்கள், ஓர் நாள் சதீஷ் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும்போது இறகுகளால் பின்னப்பட்ட ‘ட்ரீம் கேட்சர்’ஒன்று அவருக்கு கிடைக்கிறது. அதில் இருக்கும் சூனியம் வைக்கப்பட்ட ஒரு இறகுகளில், ஒரு இறகை தெரியாமல் பறித்து விடுகிறார் அதன்பின் இரவில் தூங்கும்போது கனவில், பாழடைந்த அரண்மனைக்குள் சிக்கிக்கொள்கிறார். அவரை பேய்கள் விரட்டுகின்றன ,இதை பற்றி முதலில் சதீஷ் எக்ஸார்சிஸ்ட் ஏழுமலையிடம் (நாசர்) மற்றும் மனநல மருத்துவராக உள்ள ரெடின் கிங்ஸ்லி ஆகியோரிடம் கூறுகின்றார். இந்த இக்கட்டிலிருந்து தப்பிக்க ஒரு சாவியைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்று ஏழுமலை கூறுகிறார். ஒரு சூழலில் கண்ணப்பனின்(சதீஷ் ) குடும்பத்தினரும் ,டெவில் ஆம்ஸ்ட்ராங்க் (ஆனந்தராஜ்) மற்றும் மருத்துவர் ஜானி (ரெடின் கிங்ஸ்லி) ஆகியோருமே அந்த பேய்களிடம் மாட்டிக் கொள்கிறார்கள். அந்த ‘ட்ரீம் கேட்சரி’ன் பின்புலம் என்ன?, பேய்களிடம் இருந்து அவர்கள் எப்படி தப்பித்தார்கள் ? என்பதுதான் ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’ படத்தின் மீதி கதை.

கதையின் நாயகனான கண்ணப்பன் என்னும் கதாபாத்திரத்தில் சதீஷ் நடித்துள்ளார்,கொடுக்கப்பட்ட பாத்திரத்தின் தேவைக்கு ஏற்ப சரியான விகிதத்தில் நடிப்பை அவர் தந்துள்ளார் ,மற்றும் லட்சுமி என்னும் கதாபாத்திரத்தில் சரண்யா பொன்வண்ணன், எக்ஸார்ஸ்டிஸ்ட் ஏழுமலை என்னும் கதாபாத்திரத்தில் நாசர் இருவரும் தங்களது அனுபவ நடிப்பை அவர்களது பாத்திரங்களில் பதிவு செய்துள்ளார்கள்,
மேலும் அஞ்சா நெஞ்சன் என்னும் கதாபாத்திரத்தில் வி.டி.வி. கணேஷ்,ரெஜினா கசாண்ட்ரா,டாக்டர் ஜானி என்னும் கதாபாத்திரத்தில் ரெடின் கிங்ஸ்லி,டெவில் ஆம்ஸ்ட்ராங் என்னும் கதாபாத்திரத்தில் ,ஆனந்தராஜ்,சோடா சேகர் என்னும் கதாபாத்திரத்தில் நமோ நாராயணன் போன்றோரும் தத்தம் பாணியில் நடிப்பை கொடுத்து கதையின் நகர்வுக்கு துணை நின்றுள்ளார்கள்.
ஃபேன்டஸி கலந்த காமெடி கதைக்கு பொருத்தமான நடிகர்களுடன் படத்தை இயக்கி உள்ளார் இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர்.பொதுவாக இது போன்ற கதைகளங்களுக்கு பெரிதும் துணை நிற்பவை பின்னணி இசையும் ஒளிப்பதிவும் , அதனை செவ்வனே கொடுத்துள்ளார்கள் யுவன்சங்கர் ராஜாவும் ,ஒளிப்பதிவாளர் எஸ்.யுவாவும்,அவர்களுக்கு இணையாக பிரதீப் இ.ராகவின் நேர்த்தியான படத்தொகுப்பும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளது.

மொத்தத்தில் லாஜிக் இல்லா மேஜிக் டைம் பாஸ்படம் என்பதால் அனைவரையும் இந்த கான்ஜூரிங் கண்ணப்பன் கவர்வான் .
