Thursday, December 5

கோப்ரா- விமர்சனம்

மதி (விக்ரம்)என்னும் கணித ஆசிரியர் தன்னுடைய தனது கணிதத் திறமையைப் பயன்படுத்தி கணிதவியல் நுணுக்கங்கள் மூலமாய் கொலை செய்கிறார். அவர் எதற்காக இந்த கொலைகளை செய்கிறார்? பல பகுதிகளில் நடந்த கொலைகளின் பின்ணணி என்ன?இவற்றை இன்டர்போல் அதிகாரியான இர்பான் பதான் கண்டுபிடிக்க வருகிறார் இந்த வேளையில் கோப்ரா என்ற கொலையாளி பற்றிய தகவல் கிடைக்க யார் அந்த கோப்ரா? எதற்காக இந்த குற்றங்கள்? இப்படிப்பட்ட பல கேள்விகளுகான விடைகளை வெள்ளித்திரையில் காணலாம் .

மொத்த படமும் விக்ரமின் பலத்தை நம்பியே உள்ளது விதவிதமான கெட்டப்களுடன் விக்ரம் இந்த படத்தில் உழைத்திருக்கிறார்,ஒவ் வரு கெட்டப்பிலும் தனக்கேஉரிய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார் ஏ.ஆர் ரஹ்மானின் பின்னனி இசை, பாடல்கள் அனைத்துமே ரசிக்கும் விதமாக சிறப்பாய் உள்ளது.குறிப்பாக ‘தும்பி துள்ளல்’, ‘அதிரா’ போன்ற பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ஸ்ரீநிதி, மிர்னாலினி, மீனாட்சி ஆகியோர் அவர்களுக்கு தரப்பட்ட கேரக்டர்களுக்கு ஏற்ப சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள் ஏற்கனவே நன்கு அறிமுகமான பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இன்டர்போல் அதிகாரியாக சிறப்பான பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ரோபோசங்கர், ஆனந்த்ராஜ், ரோஷன் மேத்யூ கே .எஸ் ரவிக்குமார், ஜான்விஜய் ஆகியோரும் தங்களது பங்களிப்பை சிறப்பாய் வெளிபடு த்தியுள்ளார்கள்

‘டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ படங்களை இயக்கிய அஜய்ஞானமுத்து மொத்த படத்தின் கதையினையும் விக்ரம் சுமந்து செல்லும் வகையில் கதையோட்டைத்தினை அமைத்துள்ளார் ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு படத்தின் வெளிப்புற காட்சிகளில் மிகவும் சிறப்பாய் உள்ளது

பல கெட்டப்களில் சிறப்பாக நடித்துள்ள விக்ரம், பிரம்மாண்டமாய் இயக்கியிருக்கும் அஜய்ஞானமுத்து இவர்களது கூட்டணியில் வெளியாகியுள்ள கோப்ரா இளையதலைமுறையினரின் இதயங்களில் நிச்சயம் இடம்பிடிக்கும்

Spread the love