கிரிக்கெட்டர் அஷ்வின் தலைமையில் ’22 யார்ட்ஸ்’ அமைப்பு கிரிக்கெட்டிற்கான சிறப்பு கோடைக்கால பயிற்சி முகாமை ஏப்ரல் 14 அன்று ஆரம்பிக்க உள்ளது
கிரிக்கெட் ரசிகரான ஆதித்யா ரவி தன்னுடைய 16-வது வயதில் கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற ஆசையில் கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தார்.
2014 இல் R. அஷ்வின் வழிகாட்டியாக இருந்த ஜென் நெக்ஸ்ட் கிரிக்கெட் இன்ஸ்டிடியூட் மூலம் ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்டார். மேலும், லீக் அணியில் திறமையை வெளிப்படுத்த அவருக்கு வாய்ப்பும் வழங்கப்பட்டது. இருப்பினும், அடுத்தடுத்த ஆண்டுகளில்,வாய்ப்புகள் மற்றும் எங்கு அணுகுவது என்பது அவருக்குத் தெரியாததால், லீக் அணியில் சேருவது அவருக்கு மிகவும் கடினமாகவே இருந்தது.
இதுபோன்ற இக்கட்டான காலக்கட்டத்தில் தோன்றிய யோசனையே '22 யார்ட்ஸ்'. தமிழ்நாடு முழுவதும் உள்ள திறமையான கிரிக்கெட் வீரர்களை அங்கீகரிக்கும் வகையிலும், திறமைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் தளமாகவும் '22 யார்ட்ஸ்' அமைந்தது.
பின்பு தங்கள் வீரர்களின் திறமைகளை சுவைக்க மேட்ச் எக்...









