Wednesday, July 15

செய்திகள்

ஜெய்ஸ்ரீ ஓம் சக்தி ஹோம் கேர் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தை கவிப்பேரரசு  வைரமுத்து திறந்து வைத்து வாழ்த்தி  பேசினார்

ஜெய்ஸ்ரீ ஓம் சக்தி ஹோம் கேர் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தை கவிப்பேரரசு வைரமுத்து திறந்து வைத்து வாழ்த்தி பேசினார்

செய்திகள்
*பிள்ளைகளால் நிராகரிக்கப்படுகிறார்களா பெற்றோர்கள் - மனம் திறந்த வைரமுத்து* ஜெய்ஸ்ரீ ஓம் சக்தி ஹோம் கேர் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தை வைரமுத்து திறந்து வைத்து வாழ்த்தும்போது பேசியதாவது. ஜெய்ஸ்ரீ ஓம் சக்தி ஹோம் கேர் என்ற நிறுவனம்,காலத்தின் அன்றாட தேவை. இதை நிறுவி இருக்கிற நிர்வாக இயக்குனர் எழிலரசு அவர்கள் காலத்தின் கட்டாயத்தை அறிந்தவர். இன்றைக்கு ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன் மனைவி பணிக்கு செல்வதினால் இல்லத்தை கவனிக்கவும், பிள்ளைகளை பொறுப்பேற்றுக் கொள்ளவும், முதியவர்களை பேணவும் ஆளில்லாத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. மேல் நாடுகளில் ஆட்கள் இல்லாமல் ரோபோக்களை பயன்படுத்தக்கூடிய வாழ்க்கை வந்து கொண்டிருக்கிறது. நம்மூரில் நல்ல பணியாளர்கள் தொண்டு செய்கிறவர்கள் நமக்கு கிடைக்கிறார்கள்.எனவே உங்கள் இல்லத்துக்கு தேவையான பணியாளர்கள், சமையல் கலைஞர்கள் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்கிற தொண...
மதுரையில் வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தை தொடங்கி வைத்தார் எம். எஸ். தோனி

மதுரையில் வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தை தொடங்கி வைத்தார் எம். எஸ். தோனி

விளையாட்டு
இந்திய கிரிக்கெட் புரட்சி நாயகன் மற்றும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இன்று மதுரையில் அமைந்துள்ள வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வேலம்மாள் கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு. எம்.வி.எம். முத்துராமலிங்கம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது உலகத் தரத்துக்கு இணையாக அமைக்கப்பட்ட இந்த மைதானம், இளம் விளையாட்டாளர்களுக்கான திறன்வள மேம்பாட்டிற்கு புதிய ஒளியாக திகழ்கிறது. இதில் சர்வதேச தர பீட்ச்,இரவைப் பகலாக்கும் விளக்குகள்,பகல் இரவு ஆட்டங்களுக்கான , ஆட்டக்காரர்களுக்கான நவீன அறைகள், டிஜிட்டல் ஸ்கோர் போர்டு, பயிற்சி வலைகள், உடற்பயிற்சி கூடம், மீடியா மற்றும் வி.ஐ.பி. கேலரிகள், மேலும் பெரிய அளவிலான பார்வையாளர் இருக்கைகள் ஆகிய வசதிகள் உள்ளன.மழை பெய்தாலும் அடுத்த 10 நிமிடங்களில் மைதானம் விளையாடுவதற்கு தகுந்தாற் போல காய்ந்துவிடும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் இந்த மைத...
இந்திய ஆண்களின் ஆடைத்தொழில் பிராண்ட் “டஸ்வா” – சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து திருமண ஆடைத் தொகுப்பு மற்றும் அதன் திருவிழாவை அறிமுகப்படுத்தியுள்ளது

இந்திய ஆண்களின் ஆடைத்தொழில் பிராண்ட் “டஸ்வா” – சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து திருமண ஆடைத் தொகுப்பு மற்றும் அதன் திருவிழாவை அறிமுகப்படுத்தியுள்ளது

அழகும் ஆரோக்கியமும்
*இந்திய ஆண்களின் ஆடைத்தொழில் பிராண்ட் “டஸ்வா” – சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து திருமண ஆடைத் தொகுப்பு மற்றும் அதன் திருவிழாவை அறிமுகப்படுத்தியுள்ளது* மாடர்ன் இந்திய ஆண்களுக்கான திருமண மற்றும் விழாக்கால ஆடை பிராண்ட் டஸ்வா (Tasva), ABFRL மற்றும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் தருண் தாஹிலியாணி இணைந்து தொடங்கிய நிறுவனம், தற்போது சென்னை நகரின் இதயப்பகுதி என்று சொல்லக்கூடிய இடத்தில் எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தன் பிரமாண்டமான பிரதான ஷோரூம் அமைந்துள்ளது. 2500 சதுர அடியில் பரந்து விரிந்த இந்த மொத்த விற்பனை மையம், நவீன ஆண்களுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட செம்மையான ஆடைகள் மற்றும் பிரமாண்டமான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் என டஸ்வா வலியுறுத்துகிறது. இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, கோலிவுட் நடிகர் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய வருகையால் இந்த திருவிழா மற்றும் திருமணத் தொகுப்பை வெளியீட்டா...
*வடிவேல் பைரோடெக்ஸ் அறிமுகப்படுத்தும் சீட்ஸ்டார் – மரங்களை நடும் உலகின் முதல் பட்டாசு!*

*வடிவேல் பைரோடெக்ஸ் அறிமுகப்படுத்தும் சீட்ஸ்டார் – மரங்களை நடும் உலகின் முதல் பட்டாசு!*

செய்திகள்
*இந்தியாவின் நம்பர் 1 பட்டாசு பிராண்டான வடிவேல் பைரோடெக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள உலகின் முதல் விதைப்பட்டாசான சீட்ஸ்டார் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிறது!* இந்த தீபாவளியில் சூழலுக்கு மாசு விளைவிக்காத விதைகளாக மாறும் பட்டாசுகள் வெடித்து, பசுமையான எதிர்காலத்தை சந்ததிகளுக்கு விட்டு செல்வோம். 84 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற பிராண்டான வடிவேல் பைரோடெக்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்தியாவின் முன்னணி பட்டாசு உற்பத்தியாளர்களில் ஒன்று. 1937 ஆம் ஆண்டு பிரீமியர் பட்டாசுகளாக நிறுவப்பட்ட இந்த நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய தரமான மற்றும் புதுமையான பட்டாசு உற்பத்தியாளராக வளர்ந்துள்ளது. பாரம்பரியத்தை அதிநவீன தொழில்நுட்பத்துடன் தொடர்ந்து இணைத்து, கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியாகவும் பொறுப்புடனும் இருப்பதை உறுதி செய்கிறது. சுதந்திரத்திற்கு முன்பிருந்து அதாவது, 1945 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 84 ஆண்டுகளா...
CTMAவின் பிரமாண்டமான ஆவணிப்பூவரங் 2025 கொண்டாட்டத்திற்கு சென்னை தயாராகிறது!

CTMAவின் பிரமாண்டமான ஆவணிப்பூவரங் 2025 கொண்டாட்டத்திற்கு சென்னை தயாராகிறது!

செய்திகள்
CTMAவின் பிரமாண்டமான ஆவணிப்பூவரங் 2025 கொண்டாட்டத்திற்கு (அக்டோபர் 4 & 5)  சென்னை தயாராகிறது!தி சென்னை தமிழ்நாடு மலையாளி சங்கம் கூட்டமைப்பின் (CTMA) வருடாந்திர முதன்மை கலாச்சார விழாவான ஆவணிப்பூவரங் 2025, அக்டோபர் 4 (சனிக்கிழமை) மற்றும் அக்டோபர் 5 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் சென்னையில் நடக்கிறது. தமிழ் மற்றும் மலையாளிகளின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் இணைவாக அமையும் இந்த இரண்டு நாள் கொண்டாட்டத்தில் ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் சமூக உணர்வு ஆகியவற்றைக் காணலாம். முதல் நாளின் ஹைலைட் தருணங்கள்: சனிக்கிழமை, அக்டோபர் 4: சென்னை, கேரள சமாஜத்தில் ஃப்ளோரல் டிசைன் போட்டி மற்றும் கவிஞர்கள் சந்திப்புடன் விழா தொடங்கும். அதிகாரப்பூர்வ தொடக்க விழா பிற்பகல் 3:30 மணிக்கு நடைபெறும். இதில் மதிப்புமிக்க பிரமுகர்கள் எம்.பி. புருஷோத்தமன், கோகுலம் கோபாலன் மற்றும் வி.சி. பிரவீன் ஆகியோர் கலந்து கொள்வ...
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ,அவரின் மணிமண்டபத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ,அவரின் மணிமண்டபத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்

செய்திகள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் ,சென்னை, அடையாறு, தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் இன்று (01.10.2025) புதன்கிழமை காலை 10.00 மணியளவில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 98ஆவது பிறந்த நாளை முன்னிட்டு,தமிழ்நாடு அரசின் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்....
23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025 சென்னைவில் நடைபெறுகிறது !!

23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025 சென்னைவில் நடைபெறுகிறது !!

விளையாட்டு
23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025 சென்னைவில் நடைபெறுகிறது !! இந்திய மாஸ்டர்ஸ் தடகள சங்கம் (MAFI) வரும் நவம்பர் 5 முதல் 9, 2025 வரை, சென்னையின் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு மைதானத்தில் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளதை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. 35 வயதுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் தடகள போட்டிகள், 5 ஆண்டு இடைவெளி பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடைபெறும். இந்த சாம்பியன்ஷிப்பில் போட்டியில் 30 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 4,000 வீரர்கள் பங்கேற்கின்றனர். போட்டியின் நோக்கம், உலக மாஸ்டர்ஸ் தடகளத்தின் வழியாக போட்டித் திறனின் மூலம் உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதே ஆகும். முதலில் இந்தோனேஷியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இப்போட்டி, ஜூலை 2025-இல் இந்தியாவிற்கு மாற்றப்பட்டது. நவீன விளையாட்டு வசதிகள் மற்றும் தமிழக அரசின் உறுதியான ஆதரவுடன் செ...
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான மல்லர் கலையில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவித்து வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான மல்லர் கலையில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவித்து வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

சினிமா, விளையாட்டு
நடிகர் ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்! எளியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவுவதிலும் ஊக்குவிப்பதிலும் பெருமகிழ்ச்சி அடைபவர் நடிகர் லாரன்ஸ். அந்த வகையில், தற்போது தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான மல்லர் கலையில் ஆர்வம் கொண்ட மாற்றுத்திறனாளிகளை ஊக்குவித்து வருகிறார் லாரன்ஸ். இதுகுறித்து நடிகர் லாரன்ஸ் தனது சமூகவலைதளப்பக்கத்தில் மல்லர் கலையில் அசத்தும் மாற்றுத் திறனாளிகளோடு வெளியிட்டிருக்கும் வீடியோவில், "இரண்டு கை, கால்கள் நன்றாக இருப்பவர்களே மல்லர் கம்பத்தில் பேலன்ஸ் செய்து ஏறுவது கடினம். அதில் மாற்றுத் திறனாளிகள் சாதிப்பது எவ்வளவு சவாலான விஷயம். ஆனால், அந்த சவாலை செய்கிறார்கள் என்றால் அதுதான் அவர்கள் வாழ்வாதாரம். இதன் மூலம் தங்கள் குடும்பத்தையும் பார்க்கிறார்கள். அதனால், இந்த வீடியோவை பார்ப்பவர்கள் உங்கள் வீட்டில் நடக்கும் விசேஷங்கள், விழாக்கள் மற்றும் மற்ற நிகழ்ச்சி...
புரட்சிகர பசுமை எரிசக்தி கண்டுபிடிப்புகளின் நேரடி செயல்விளக்கத்தை HONC கேஸ் பிரைவேட் லிமிடெட் நடத்துகிறது

புரட்சிகர பசுமை எரிசக்தி கண்டுபிடிப்புகளின் நேரடி செயல்விளக்கத்தை HONC கேஸ் பிரைவேட் லிமிடெட் நடத்துகிறது

செய்திகள்
எங்களது HONC Gas Pvt. Ltd. நிறுவனத்தின் சார்பில் எங்கள் நிறுவனத்தின் ஆலையில் HONC Gas Generator குறித்து நேரடி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், உலகிலேயே முதல் முறையாக, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் இருந்து நேரடியாக எரியூட்டக் கூடிய பசுமை ஹைட்ரஜன் எரிவாயு உற்பத்தி செய்யும் HONC Gas நிறுவனத்தின் புதிய மாற்றத்திற்கு வித்திடும் செயல்திறன் குறித்து மிகச் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், மேம்பட்ட Gyroid Electrolytic Medium (GEM) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி HONC Gas Generator மூலமாக தனித்துவமான ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தி செய்வது எப்படி என்று செயல்விளக்கத்தின் போது விளக்கிக் காட்டினோம். மரபு ரீதியான புதைவடிவ எரிபொருள்கள் அல்லது LPG போல அல்லாமல் HONC Gas எரிபொருளை நமக்கான தேவையின்போது உற்பத்தி செய்து கொள்ள முடியும், இதை சேமித்து வைக்க சிலிண்டர்கள் தேவையில்லை மற்றும் எரிவாயு கசிவ...
கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தொழில் அதிபர் ஏ.எம். கோபாலன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது வேல்ஸ் பல்கலைக்கழகம்

கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தொழில் அதிபர் ஏ.எம். கோபாலன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது வேல்ஸ் பல்கலைக்கழகம்

சினிமா, செய்திகள்
பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சட்டம் மற்றும் நீதித்துறை, நாடாளுமன்ற விவகாரத்துறை மத்திய அமைச்சர் திரு.அர்ஜுன் ராம் மேக்வால் கலந்துக்கொண்டு உரையாற்றினார் . அதில் அவர் ”இந்தியா 2047க் கனவை அடைய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தொழில் புரட்சி 4.0 யுகத்தில் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லெர்னிங் போன்ற துறைகள் முன்னிலை வகிக்கின்றன எனக் குறிப்பிட்ட அவர், பட்டதாரிகள் சமூகப் பொறுப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றை வழிகாட்டுதலாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றார். இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவாகும் என்றும், 5,000-க்கும் மேற்பட்ட பட்டதாரிகளை வாழ்த்தியும் அவர் உரையை நிறைவு செய்தார்”. இவ்விழாவில் மொத்தம் 4,992 ம...