
.உறுப்பினர்களுக்காக விழிப்புணர்வு முகாம் நடத்திய தமிழ்நாடு அழகுக்கலை துறை தொழில் முனைவோர் சங்கம்
.அழகுக்கலை கலைஞர்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பு, தொழில் மேம்பாடு, மேலும் திறமையானவர்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல நல்ல நோக்கங்களுக்காக தமிழ்நாடு அழகுக்கலை துறை தொழில் முனைவோர் சங்கம் (TBIEA) கடந்த மார்ச் 19ஆம் தேதி சென்னையில் துவங்கப்பட்டது.
துவக்க நாளிலேயே இந்த சங்கத்தில் சுமார் 100 உறுப்பினர்கள் வரை இணைந்தனர். தொடர்ந்து பலரும் ஆர்வமுடன் இதில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்காக கடந்த வாரம் சென்னை ராயல் பிளாசா டவரில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
பெடரல் வங்கி கிளையின் மேலாளர் P.ஆனந்தி, சான்றிதழ் பெற்ற தொழில் முறை ஒப்பனை கலைஞரும் பயிற்சியாளருமான செல்டன் ஆர்டிஸ்ட்ரி மற்றும் பூக்கள் உருவாக்குவதில் பல்வேறு விதமான சாதனைகளுக்கு சொந்தக்காரரும் வழிகாட்டியுமான C.பிரபாவதி ஆகியோர் முன்னிலையில் இந்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது..
இந்த நிகழ்வில் அரசு சான்...