எழுத்தாளர், நடிகர், இணை தயாரிப்பாளர் திருவரணார் எழுதிய ‘திருநெறியாறு’ நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
எழுத்தாளர், நடிகர், இணை தயாரிப்பாளர் திருவரணார் எழுதிய ‘திருநெறியாறு’ நூல் வெளியீட்டு விழா சென்னை கிளார்க் பள்ளி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை பொறுப்பு ஏற்றதுடன் இந்த நூலை திருமதி சோ.மதுமதி ஐஏஎஸ் ( செயலர், மாற்றுத்திறனாளி நலத்துறை, தலைமை செயலகம் ) வெளியிட்டார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரு பெ.குகன் கீதா இந்த நூலை பெற்றுக்கொண்டார். கன்னியாகுமரியைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் திரு தா.ஞானசீலன் உடற்கல்வி ஆசிரியர் நூலின் இரண்டாம் படியை பெற்றுக் கொண்டார். திரைப்பட இயக்குனர் திரு.ராஜமோகன் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில்
திருமதி சோ.மதுமதி ஐஏஎஸ் அவர்கள் பேசும்போது,
“இந்த புத்தகம் உங்களுடைய வாழ்க்கையில் ஒரு மைல்கல். இதை வள்ளுவம் போல பழ மொழிகளில் உலகம் முழுக்க இதைக் கொண்டு சென்று மக...









