Wednesday, September 2

கல்வி

கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையவழி தமிழ் வகுப்புகள்

கார்க்கி ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையவழி தமிழ் வகுப்புகள்

இலக்கியம், கல்வி
கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் 10 ஆண்டுகளாக மொழிக்கணிப்பீடு மற்றும் மொழி இலக்கியத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை நிகழ்த்தி வருகிறது. இந்த அறக்கட்டளையானது, புதிய மொழிக் கருவிகள் மற்றும் செயலிகளை வடிவமைப்பதோடு, பயில் வகுப்புகள் மூலம் இணைய வழியில் தமிழ் மொழியைத் தனித்துவமான அணுகுமுறையுடன் கற்பித்து வருகிறது. இவ்வகுப்புகளில், உலகம் முழுவதுமுள்ள தமிழார்வம் கொண்ட மாணவர்கள், வயதுவரம்பில்லாமல் ஒன்றாகச் சேர்ந்து தமிழ் கற்று வருகின்றனர். இணைய வழியில் நேரடி அமர்வுகளின் மூலம் கற்பிக்கப்பட்ட இப்பயில் வகுப்புகள், இப்போது பதிவு செய்யப்பட்ட காணொளிகளாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் உலகில் எங்கிருந்தும், எந்நேரத்திலும், எவ்விடத்திலும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தமிழைக் கற்கவியலும். முதற்கட்டமாக இந்த உலகத் தாய்மொழி நாளில், இரண்டு பயிற்சி வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. - தமிழில் எழுத/ பட...
சென்னை முத்தையால் பேட்டை கே.இராமயா செட்டி ஏ.ஆர்.சி மகளிர் மேல்நிலைப் பள்ளி 75′ வது ஆண்டு விழா

சென்னை முத்தையால் பேட்டை கே.இராமயா செட்டி ஏ.ஆர்.சி மகளிர் மேல்நிலைப் பள்ளி 75′ வது ஆண்டு விழா

கல்வி
சென்னை முத்தையால் பேட்டையில் அமைந்துள்ள கே.இராமயா செட்டி ஏ.ஆர்.சி மகளிர் மேல்நிலைப் பள்ளியின் 75' வது ஆண்டு விழா, பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது! இந்த விழாவில் நீதிபதி ஆர்.எம்.டி. டிக்கா ராமன் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் புலவர் ஆர்.ராமலிங்ஙம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்! பள்ளிக் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. பரிசுகள் வழங்கப்பட்டன! பள்ளி நிர்வாக குழு தலைவர் டாக்டர் வி.பாலு வரவேற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து பள்ளி வரலாற்றினை பள்ளி செயலாளர் டாக்டர் எஸ்.ஹேமலதா எடுத்துரைத்தார். பின்பு பள்ளியின் ஆண்டு அறிக்கையை தலைமை ஆசிரியை ஆர்.பரமேஸ்வரி வாசித்தார். விழா தலைவர் நீதியரசர் ஆர்.எம்.டி. டிக்கா ராமன், சென்னை உயர் நீதிமன்ற விழா மலரினை வெளியிட்டு, மாணவர்களுக்கு அறிதலும் புரிதலும் அவசியம் என்றார்! அவரிடமிருந்து விழா மலரினை பெற்றுக்கொண்ட நகைச...
மதுரை குயின் மீரா சர்வதேசப் பள்ளியின் முயற்சியில் மாநகராட்சி, அரசு மற்றும் இதர பள்ளி மாணவர்கள் உட்பட 200 குழந்தைகள் இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அறிவியல் பயணம்

மதுரை குயின் மீரா சர்வதேசப் பள்ளியின் முயற்சியில் மாநகராட்சி, அரசு மற்றும் இதர பள்ளி மாணவர்கள் உட்பட 200 குழந்தைகள் இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அறிவியல் பயணம்

கல்வி, செய்திகள்
மதுரை குயின் மீரா சர்வதேசப் பள்ளியின் முயற்சியில் மாநகராட்சி, அரசு மற்றும் இதர பள்ளி மாணவர்கள் உட்பட 200 குழந்தைகள் இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அறிவியல் பயணம் ,சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், சினிமா துறை பிரபலங்கள் மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர் சென்னை, பிப்ரவரி 12: மதுரை குயின் மீரா சர்வதேசப் பள்ளி தனது சமூகப் பணிகளில் ஒரு பகுதியாக சுமார் இருநூறு மாணவர்களை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (இஸ்ரோ) அழைத்துச் செல்கிறது. அதில் பெரும்பாலானோர் மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆவர். இடைநிலைப்பள்ளி குழந்தைகளுக்கு பாரபட்சமின்றி நடைமுறை அறிவியல் அறிவை வழங்கும் நோக்கத்தில், குயின் மீரா பள்ளி தனது சிறு மாணவர் குழுவுடன் சேர்த்து பொருளாதாரத்தில் பின்தங்கிய சூழலில் படிக்கும் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவ...
ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியும் அகத்தர மதிப்பீட்டுக் குழுவும் இணைந்து நட த்திய 15 ஆம் ஆண்டு ‘ஷா-கலா உட்சவ் -2023’கலைநிகழ்ச்சி தேனாம்பேட்டை நாரதகான சபாவில் சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷசுன் ஜெயின் மகளிர் கல்லூரியும் அகத்தர மதிப்பீட்டுக் குழுவும் இணைந்து நட த்திய 15 ஆம் ஆண்டு ‘ஷா-கலா உட்சவ் -2023’கலைநிகழ்ச்சி தேனாம்பேட்டை நாரதகான சபாவில் சிறப்பாக நடைபெற்றது.

கல்வி
 'ஷா-கலா உட்சவ் -2023'கலைநிகழ்ச்சி  இந்நிகழ்ச்சியில் கலை இயக்குநர், கலாபிரதர்ஷினி கலைமாமணி திருமதி பார்வதி ரவி கண்டசாலா அவர்களும் பொன்னியின் செல்வன் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கல்லூரியின் செயலர் ஸ்ரீமதி உஷா அபய ஸ்ரீஸ்ரீமால், இணைச்செயலர் முனைவர் ஹரீஷ் எல் மேத்தா, கல்லூரி முதல்வர் முனைவர் சா.பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்கள். சிறப்பு விருந்தினர் திருமதி பார்வதி ரவி கண்டசாலா அவர்கள் உரையாற்றுகையில் மாணவர்கள் மத்தியில் இக்கலைநிகழ்ச்சியில் கலந்து கொள்வது பெருமையாக உள்ளது என்றும் தனது பள்ளிப் பருவமும் கல்லூரிப் பருவமும் நினைவிற்கு வருவதாகவும் கூறி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்ததோடு மாணவர்கள் கலையில் கவனம் செலுத்துவது அவர்களின் மனத்திற்கும் எண்ணத்திற்கும் ஆரோக்கியாமானது என்றும் கூறினா...
ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷாசுன் ஜெயின் பெண்களுக்கான கல்லூரியில் 2023 ஆம் ஆண்டு மாணவர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா

ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷாசுன் ஜெயின் பெண்களுக்கான கல்லூரியில் 2023 ஆம் ஆண்டு மாணவர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா

கல்வி, செய்திகள்
ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷாசுன் ஜெயின் பெண்களுக்கான கல்லூரி 2023 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி மாணவர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழாவை அவர்களின் வளாகத்தில் கொண்டாடியது. காலை 9-10 மணி முதல் ரங்கோலி போட்டியுடன் விழா தொடங்கியது, இதில் 15 துறைகள் பங்கேற்று வெற்றி பெற்றவர்கள் பிஎஸ்சி சிஎஸ், ஷிப்ட் 1 மற்றும் பிகாம் சிஎஸ் ஷிப்ட் 2. பொங்கல் தயாரிப்பு போட்டி காலை 10-11:30 மணி, பி.காம் சிஎஸ், ஷிப்ட் 1 மற்றும் பிகாம் சிஏ, ஷிப்ட் 2ல் வெற்றி பெற்றனர். காலை 11:30 மணிக்கு பாரம்பரிய நடன வடிவங்கள், ஸ்டால்கள் மற்றும் விளையாட்டுகளுடன் நிகழ்வு தொடங்கியது. கும்மி, தப்பு, கோலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம் போன்ற நடன வடிவங்கள் அரங்கேற்றப்பட்டன. ஸ்டால்களில் உண்ணக்கூடிய உணவுகள், பாரம்பரிய உணவுகள், நாஸ்டால்ஜிக் சாக்லேட்டுகள், அவர்களின் குழந்தைப் பருவத்தை நினைவுபடுத்தும் வகையில், பாத்திரங்கள், பாரம்பரி...
நந்தினி கார்க்கியின் இணையவழி துணைமொழியியல் வகுப்புகள் அறிமுகம்

நந்தினி கார்க்கியின் இணையவழி துணைமொழியியல் வகுப்புகள் அறிமுகம்

கல்வி
சுபமி எனும் துணைமொழியிடல் நிறுவனத்தை நிறுவி கடந்த சில ஆண்டுகளாய் நடத்திக்கொண்டிருப்பவர் நந்தினி கார்க்கி. இந்நிறுவனத்தின் மூலமாக துணைமொழியியலை அனைவரும் கற்பதற்காக இணையவழி வகுப்புகளை நந்தினி கார்க்கி அறிமுகப்படுத்தியுள்ளார். துணைமொழியியல் கலையையும் தொழில்நுட்பத்தையும் சான்றிதழோடு கற்றுத்தரும் இந்த வகுப்பு, துணைமொழியியலின் மொழியாக்கம், நேரமிடல், அறம், தொழில் போன்ற தலைப்புகளைக் கற்றுத் தருகிறது. மொழியாக்கத்திலும் திரைத்துறையிலும் ஆர்வம் கொண்ட அனைவரும் இந்த வகுப்பில் இணையலாம். https://courses.subemy.com என்ற தளத்தில் இந்த வகுப்புகள் நிகழும். கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக துணைமொழியியல் துறையில் பணியாற்றும் நந்தினி கார்க்கி, இந்தியாவில் மிகவும் மதிக்கப்படும் துணைமொழியாளர்களுள் ஒருவர். சூரரைப் போற்று, ஐ, கைதி, பிசாசு, ஜெய் பீம், சர்க்கார், என்னை அறிந்தால், தங்க மீன்கள், ரேடியோ பெட்டி, சுழல்...
சினிமா வாயிலாக குழந்தைகளை, ஆளுமைத் திறன் மிக்கவர்களாக திகழ வைக்கும்  நிகழ்வுகளுக்கு என் ஆயுட்காலம் முழுவதும் தமிழக அரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து பணியாற்றுவேன் -சீனு ராமசாமி

சினிமா வாயிலாக குழந்தைகளை, ஆளுமைத் திறன் மிக்கவர்களாக திகழ வைக்கும் நிகழ்வுகளுக்கு என் ஆயுட்காலம் முழுவதும் தமிழக அரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து பணியாற்றுவேன் -சீனு ராமசாமி

கல்வி
வணக்கம், “சினிமா ரசனை கல்வி” எது சிறந்த சினிமா வாழ்வியல் ? சினிமா வழிகாட்டும் சினிமா, குழந்தைகள் விழிப்புணர்வு சினிமா, வாழ்வுக்கு நெருக்கமான யதார்த்த சினிமா, என நம்மை உயர்த்தும் ரசனையில் மேம்பட வைக்கும் சினிமா கலையை மாணவர்களுக்கு அடையாளம் காட்டும் விதமாக இயக்குநர் பாலுமகேந்திரா அவர்கள் சினிமா ரசனைக் கல்வியை தொடங்க வேண்டுமென தன் வாழ்நாளெல்லாம் வலியுறுத்தி வந்தார். நானும், நாங்களும் இக்கருத்தினை வலியுறுத்தினோம். இன்று அது நனவானது. நல்ல சினிமாவை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் விதமாக பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக தமிழக அரசுப் பள்ளியான சென்னை -92, விருகம்பாக்கம், ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளில் மாதந்தோறும் ஒளிபரப்படுகிறது. 14.11.2022 அன்று “குப்பச்சிக்களு” என்ற கன்னட திரைப்படம் திரையிடப்பட்டது. இந்நிகழ்விற்கு சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர். S.மார்ஸ் மற்றும் நேர...
வேல்ஸ் பட்டமளிப்பு விழா

வேல்ஸ் பட்டமளிப்பு விழா

கல்வி, செய்திகள்
சென்னை, பல்லாவரம், வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் பன்னிரெண்டாம் ஆண்டுப் பட்டமளிப்பு விழா 05.08.2022 அன்று நண்பகல் 12.00 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்புற நடைபெற்றது. இப்பட்டமளிப்பு விழாவில் மேதகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பட்டமளிப்பு விழாப் பேருரையாற்றிப் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்குப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கிச் சிறப்பித்தார். வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனரும் வேந்தருமான டாக்டர் ஐசரி கே.கணேஷ் அவர்கள் தலைமையில் நிகழ்ந்த இவ்விழாவில், துணைவேந்தர் பேராசிரியர் ச.ஸ்ரீமன்நாராயணன் அவர்கள் வரவேற்புரையாற்றி, 2020-2021ஆம் கல்வி ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வழங்கினார். இவ்விழாவில், புகழ்பெற்ற நான்கு ஆளுமைகளான பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் பேராச...
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 12 வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. R.N.ரவி அவர்கள் கலந்துகொள்கிறார் – வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் Dr. ஐசரி K. கணேஷ் அறிவிப்பு

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 12 வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. R.N.ரவி அவர்கள் கலந்துகொள்கிறார் – வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் Dr. ஐசரி K. கணேஷ் அறிவிப்பு

கல்வி, செய்திகள்
சென்னை பல்லாவரம் "வேல்ஸ் பல்கலைக்கழகத்தின்" 12 வது பட்டமளிப்பு விழா வருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு பல்கலை வளாகத்தில் உள்ள "வேலன் அரங்கில்" நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. R.N.ரவி அவர்கள் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கி கௌரவிக்கவுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 11 வது பட்டமளிப்பு விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை & இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. அனுராக் தாகூர் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது....
ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் உலக செஸ் சாம்பியன்களை கவுரவிக்கும் பிரமாண்ட நிகழ்ச்சி – ரூ.30 லட்சம்பரிசுத்தொகை வழங்கி பாராட்டு விழா – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் உலக செஸ் சாம்பியன்களை கவுரவிக்கும் பிரமாண்ட நிகழ்ச்சி – ரூ.30 லட்சம்பரிசுத்தொகை வழங்கி பாராட்டு விழா – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

கல்வி, செய்திகள், விளையாட்டு
ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் உலக செஸ் சாம்பியன்களை கவுரவிக்கும் பிரமாண்ட நிகழ்ச்சி - ரூ.30 லட்சம்பரிசுத்தொகை வழங்கி பாராட்டு விழா - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு 44-வது 'செஸ் ஒலிம்பியாட்' போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வேலம்மாள் பள்ளியின் 6 உலக செஸ் சாம்பியன்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி ஜூலை 25-ந்தேதி பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியதுடன், வேலம்மாள் பள்ளியின் செஸ் வீரர், வீராங்கனைகளுக்கு பள்ளியின் சார்பில் வழங்கப்பட்ட ரூ.30 லட்சம் பரிசுத் தொகையை வழங்கி சிறப்பித்தார்.   இந்தியாவில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் சர்வதேச அளவிலான 44 -வது 'செஸ் ஒலிம்பியாட்' சதுரங்க போட்டிகள் வருகிற ஜூலை 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் செஸ் ஒ...