டர்மெரிக் மீடியா மற்றும் ஆஹா ஓடிடி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம்!
20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தயாரிப்பு நிறுவனமான டர்மெரிக் மீடியா மற்றும் பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் திரு.அல்லு அரவிந்தின் ஓடிடி தளமான ஆஹா தமிழ் இணைந்து, இன்னும் பெயரிடப்படாத ஒரு புதிய திரைப்படத்தைத் தயாரிக்கவிருப்பதாக இன்று அறிவித்துள்ளார்கள்.
இந்தத் திரைப்படம் புகழ்பெற்ற, மதிப்புக்குரிய எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்கள் எழுதிய ‘வெண்கடல்’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள 'கைதிகள்' சிறுகதையைத் தழுவி உருவாக்கப்படுகிறது. திரு. ரஃபீக் இஸ்மாயில் இந்தப் படத்தை இயக்குகிறார்.
சிறந்த இலக்கியப் படைப்புகள் வெற்றிகரமான திரைப்படங்களாகவும், ரசனைக்கும் ஏற்றவாறு அமைய வேண்டும் என்பதற்காக திரு. ஜெயமோகன் அவர்களின் மூலக்கதைக்கு ஈடுகொடுக்கக்கூடிய மிகச்சிறந்த திரைக்கதையாக வடிவமைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் தலைப்பு, நடிகர்கள...









