சாருஹாசன், மோகனை தொடர்ந்து கதையின் நாயகனாக ‘பவுடர்’ மூலம் நிகில் முருகனை கதைநாயகனாக களமிறக்கும் விஜய்ஸ்ரீ ஜி
பல வெற்றிப்படங்களில் நடித்து தேசிய விருது பெற்று நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த சாருஹாசனை 'தாதா 87' திரைப்படம் மூலம் மீண்டும் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தியவரும், பல வெள்ளி விழா படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்ற நடிகர் மோகனை வைத்து 'ஹரா' படத்தை இயக்கி வருபவருமான விஜய்ஸ்ரீ ஜி, 26 வருடங்களாக வெற்றிகரமான மக்கள் தொடர்பாளராக கேமராவிற்கு பின் இருந்த நிகில் முருகனை கேமராவிற்கு முன் 'பவுடர்' படம் மூலம் அறிமுகப்படுத்துகிறார்.
இந்த மூன்று படங்களுக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் தன்னையும் கதையையும் நம்பி மட்டுமே இயக்குநர் விஜய்ஸ்ரீ ஜி துணிச்சலான முயற்சிகளில் ஈடுபடுவது ஆகும்.
படத்தை பற்றி விஜய்ஸ்ரீ ஜி கூறுகையில், அனைவரும் வீட்டை விட்டு வெளியில் வரும்போது ஒரு முகமூடி அணிந்து கொண்டு தான் வருகிறார்கள். அதை தான் பவுடர் குறிக்கிறது. ஒருவரின் தோற்றத்தை வைத்து தப்பாக கணிக்கக்கூடாது. பவ...









