Thursday, June 18

சினிமா

 ‘துணிவு’ திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுடன் பார்க்க விரும்பும் நடிகை மஞ்சு வாரியர்

 ‘துணிவு’ திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுடன் பார்க்க விரும்பும் நடிகை மஞ்சு வாரியர்

சினிமா
ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகி இருக்கும் அஜித் குமாரின் 'துணிவு' திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன் என அப்படத்தின் நாயகியான நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கிறார். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான, அஜித் குமார் மற்றும் 'அசுரன்' படப் புகழ் நடிகை மஞ்சு வாரியர் நடிப்பில் தயாரான, 'துணிவு' திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி அன்று வெளியானது. இந்தத் திரைப்படம் கோலிவுட்டில் மட்டுமல்லாமல் டோலிவுட், சாண்டல் வுட் என தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் திரைப்படத்தில் கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஞ்சு வாரியர், கேரளாவில் உள்ள வனிதா சினி பிளக்ஸில் முதல் நாளில் ரசிகர்களுடன் படத்தை கண்டு ரசித்தார். இதன் பிறகு அவர் பேசுகையில், '' முதல்முறையாக திரையரங்கில் முழு படத்தையும் ரசிகர்களுடன் ...
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி- பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் இணைந்து நடித்திருக்கும் ‘ஃபார்ஸி’ வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியீடு

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி- பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் இணைந்து நடித்திருக்கும் ‘ஃபார்ஸி’ வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியீடு

சினிமா
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர் ஷாஹித் கபூர் இணைந்து நடித்துள்ள அமேசான் ஒரிஜினல் தொடரான 'ஃபார்ஸி' எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் இன்று வெளியாகி உள்ளது. இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த, க்ரைம் த்ரில்லர் தொடரில் ஷாஹித் கபூர் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமாக அமைந்துள்ளது. மேலும் இந்தத் தொடரில் கே. கே. மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தொடரான 'ஃபார்ஸி', பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் இந்தியாவிலும், 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதும் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. விரைவில் வெளியாகவிருக்கும் அமேசான் ஒரிஜினல் சீரிஸ் – ஃபார்ஸியின் முன்னோட்டத்தை இன்று பிரைம் வீடியோ வெளியிட்டது. பாலிவுட் ...
சர்தார், காரி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து  பிரின்ஸ் பிக்சர்ஸ் லஷ்மண் குமார் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் இயக்குநர் மனு ஆனந்த் .

சர்தார், காரி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து  பிரின்ஸ் பிக்சர்ஸ் லஷ்மண் குமார் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் இயக்குநர் மனு ஆனந்த் .

சினிமா
 பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் மனு ஆனந்த் ... சர்தார், காரி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து  பிரின்ஸ் பிக்சர்ஸ் லஷ்மண் குமார் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் இயக்குநர் மனு ஆனந்த் . பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றி பெற்ற எஃப் ஐ ஆர் படத்தைத் தந்தவர் இயக்குநர் மனு ஆனந்த்.கடந்த வாரம் இந்நிறுவனம் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸை ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக தரமான படங்களைத் தர வித்தியாசமாகவும், மக்களை ஈர்க்கும்படியான கதைகளைத் தரும் இயக்குநர்களை தன் நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்துள்ளது பிரின்ஸ் பிக்சர்ஸ். இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்....
வேல்ஸ் திருவிழாவில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்ட ‘P T சார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

வேல்ஸ் திருவிழாவில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்ட ‘P T சார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

சினிமா
உடற்கல்வி ஆசிரியராக நடிக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு 'பி.டி. சார்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள வேலன் அரங்கத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த திறந்த வெளி கிராமிய திருவிழா அரங்கத்தில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் பொங்கல் திருவிழாவை கொண்டாடிய தருணத்தில், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்பட்டது. படத்திற்கு 'P T சார்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. 'வேல்ஸ் திருவிழா'வில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரும், தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ், வேல்ஸ் பல்க...
கண்ணன் ரவி க்ரூப் வழங்கும் ஷாந்தனு பாக்யராஜ்ஜின் இராவணக் கோட்டம் படத்தின் முதல் பார்வை வெளியாகி வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் அதன் ட்ரைய்லர் ‘துணிவு’ மற்றும் ‘வாரிசு’ திரைப்படங்களோடு 250 ஸ்கிரீன்களில் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்படும்

கண்ணன் ரவி க்ரூப் வழங்கும் ஷாந்தனு பாக்யராஜ்ஜின் இராவணக் கோட்டம் படத்தின் முதல் பார்வை வெளியாகி வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் அதன் ட்ரைய்லர் ‘துணிவு’ மற்றும் ‘வாரிசு’ திரைப்படங்களோடு 250 ஸ்கிரீன்களில் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்படும்

சினிமா
கண்ணன் ரவி க்ரூப் வழங்கும் ஷாந்தனு பாக்யராஜ்ஜின் இராவணக் கோட்டம் படத்தின் முதல் பார்வை வெளியாகி வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் அதன் ட்ரைய்லர் 'துணிவு' மற்றும் 'வாரிசு' திரைப்படங்களோடு 250 ஸ்கிரீன்களில் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்படும் தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் அடுத்த படைப்பான 'இராவணக் கோட்டம்' படத்தில் ஷாந்தனு பாக்யராஜ் மற்றும் கயல் ஆனந்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க 'மதயானை' கூட்டம் படப்புகழ் விக்ரம் சுகுமாறன் இந்தப் படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று (ஜனவரி 10,2023) வெளியிடப்பட்டது. கண்ணன் ரவி க்ரூப்பின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி பேசும்போது, "'இராவணக் கோட்டம்' படத்தின் முதல் பார்வை போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. இதன் ட்ரைய்லர் அஜித் சாரின் 'துணிவு' ம...
 நடிகர் அடிவி சேஷ் நடிக்கும் ‘G2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

 நடிகர் அடிவி சேஷ் நடிக்கும் ‘G2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சினிமா
தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திர நடிகர்களில் ஒருவரான அடிவி சேஷ் நடிக்கும் 'G2'எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. பான் இந்திய திரைப்படமாக தயாராகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட பார்வையும் வெளியிடப்பட்டிருக்கிறது. 'HIT 2' எனும் திரைப்படத்தின் மூலம் இரட்டை ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்து நம்பிக்கைக்குரிய இளம் நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கிறார் நடிகர் அடிவி சேஷ். இவரது நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு 'G2' ( கூடாச்சாரி 2) என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கூடாச்சாரி படத்தின் முதல் பாகம், இந்திய அளவில் நடைபெறும் திரைக்கதையாக அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இதன் இரண்டாவது பாகத்தின் கதை சர்வதேச அளவில் நடைபெறுவதாக உருவாக்கப்படுகிறது. இதற்கான கதையை நடிகர் அடிவி சேஷ் எழுதுகிறார். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெ...
லாக்திரைப்பட விழாவில் பல ஆண்டுகளுக்குப் பின் பாக்யராஜ் வெளியிட்ட முருங்கைக்காய் ரகசியம்

லாக்திரைப்பட விழாவில் பல ஆண்டுகளுக்குப் பின் பாக்யராஜ் வெளியிட்ட முருங்கைக்காய் ரகசியம்

சினிமா
பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ்,அல் முராட் ,சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'லாக்'. இப்படத்தை எழுதி ரத்தன் லிங்கா இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கியவர், 'அட்டு' என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வடசென்னை வாழ்வியலைப்பதிவு செய்தவர் என்ற முத்திரை பதித்தவர். 'லாக்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இயக்குநர்கள் கே. பாக்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். விழாவில் படத்தை இயக்கியிருக்கும் ரத்தன் லிங்கா பேசும்போது, "இந்தப் படம் பல போராட்டங்களுக்குப் பிறகு உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு எங்களது பக்க பலமாக இருந்த சக்திவேல் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் மற்றும் படத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் இருவரும் திடீரென...
பனையேறிகளின் வாழ்வியலையும் வலிகளையும் சொல்லும் படம் ‘நெடுமி’!

பனையேறிகளின் வாழ்வியலையும் வலிகளையும் சொல்லும் படம் ‘நெடுமி’!

சினிமா
இதுவரை திரை காணாத வலிகளைப் பதிவு செய்துள்ள படம் 'நெடுமி'! சுனாமிகள் வந்தாலும் புயல்கள் வந்தாலும் தடைகளைத் தாண்டி தலை நிமிர்ந்து நிற்பவை பனை மரங்கள்.மனித உழைப்பைக் கோராமல் மனிதனுக்கு அள்ளி அள்ளி பயன் அனைத்தையும் தருபவை பனை மரங்கள்தான். திருக்குறளில் இடம்பெற்ற பெருமை கொண்ட அந்தப் பனை மரத்தைச் சார்ந்து வாழும் மக்கள் தமிழ்நாட்டில் இலட்சக்கணக்கானர் உள்ளனர். குறிப்பாகக் கள் இறக்கித் தொழில் செய்த குடும்பங்கள் லட்சக்கணக்கானவை. ஆனால் கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையின் காரணமாக அந்தக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து நின்றன. அவர்களின் வலிகளும் துயர ஓலங்களும் வெகுஜன மக்களைச் சென்றடையாமலே காற்றில் கரைந்து போய்விட்டன. தங்களின் சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து கொண்டிருந்த அந்த லட்சக்கணக்கான குடும்பங்களின் ஒரு பிரதிநிதியாக ஒரு குடும்பத்தை எடுத்துக் கொண்டு அவர்களின் வாழ்வியலைப் பேசும் படம் தான் 'நெ...
 உலகளாவிய மொழிகளில் வெளியாகும் ஹனு-மேன்

 உலகளாவிய மொழிகளில் வெளியாகும் ஹனு-மேன்

சினிமா
கற்பனைத் திறன் மிகு படைப்பாளி பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் சூப்பர் ஹீரோ படைப்பான 'ஹனு-மேன்', எதிர்வரும் மே மாதம் 12ஆம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் ஜப்பானிய மொழிகளில் தயாராகி உலகளவில் வெளியாகிறது என படக்குழுவினர் பெருமிதத்துடன் தெரிவித்திருக்கிறார்கள். இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நட்சத்திர நடிகர் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ' ஹனு- மேன்'. இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டீசரில் இடம் பெற்றிருக்கும் பிரம்மாண்டமான காட்சி அமைப்புகள் மற்றும் பின்னணி இசையின் மாயாஜாலத்தில், தேச எல்லைகளைக் கடந்து உலகளவில் மக்கள் வியப்படைந்திருக்கிறார்கள். பல அடி உயர பிரம்மாண்டமான அனுமான் சிலையின் தோற்றத்துடன் தொடங்கும் முதல் காட்சியிலிருந்து.. பனி ...
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட ‘தில் திலீப்’ திரைப்படத்தின் முன்னோட்டம்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட ‘தில் திலீப்’ திரைப்படத்தின் முன்னோட்டம்

சினிமா
'தில் திலீப்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி புதுமுகங்கள் நடித்திருக்கும் ‘தில் திலீப்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். 'குபீர்' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் திலீப் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'தில் திலீப்'. இதில் திலீப் குமார், ராதா ரவி, டினா, வைஷ்ணவி, தமிழ்ச்செல்வன், பிரதாப், ஃபரோஸ். ஒயிட், கர்வாஸ், டாக்டர் பிரபு, மதன், இம்ரான், ஏகவள்ளி, ராதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹர்ஷன் ராதாகிருஷ்ணன் மற்றும் ஏழிசை வேந்தன் ஆகிய இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். பாடலாசிரியர் அகிலன் கங்காதரன் பாடல்கள் எழுத, பின்னணி பாடகர்களான அந்தோணி தாசன், பென்னி...