Friday, June 19

சினிமா

வித்தியாசமான வேடங்களில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் சாக்‌ஷி அகர்வால் !!

வித்தியாசமான வேடங்களில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் சாக்‌ஷி அகர்வால் !!

சினிமா
தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் இளம் நடிகை சாக்‌ஷி அகர்வால், எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும், அதில் ஒரு அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்த எப்போதும் தவறியதே இல்லை. எப்பொழுதும் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்காமல், தனித்துவமான கதாபாத்திரங்களில் மட்டுமே தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி கொள்கிறார். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் "நான் கடவுள் இல்லை" படத்தில் முழு நீள ஆக்‌ஷன் அவதாரத்தில் தோன்றிய அவர், தனது அற்புதமான நடிப்பில் ஒரு வித்தியாசமான பரிமாணத்தை காட்டினார். அதே போல் தற்போது நடிகர் பிரபுதேவா கதாநாயகானாக நடித்து, சமீபத்தில் வெளியான ‘பஹீரா’ படத்தில் மாறுபட்ட வேடத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பஹீரா படத்தில் அவரது அபாரமான நடிப்பு திரையுலகத்தினரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள...
விடுதலை’ படத்தின் இசை வெளியீட்டு விழா

விடுதலை’ படத்தின் இசை வெளியீட்டு விழா

சினிமா
எல்ரெட் குமார், ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடியத் திரைப்படம் 'விடுதலை'. இசைஞானி இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (08.03.2023) நடைபெற்றது.  இசைஞானி இளையராஜாவின் பாடல்களோடு விழா தொடங்கியது.  விழா நாயகன் இளையராஜா பேசியதாவது, " இந்தப்படம் திரையுலகம் இதுவரை சந்திக்காத களத்தில் நடக்கும். அவருடைய ஒவ்வொரு கதையும் வெவ்வேறு திரைக்கதை. 1500 படங்களுக்கு இசையமைத்த பிறகு சொல்கிறேன் வெற்றிமாறன் திரையுலகிற்கு முக்கியமான இயக்குநர். இந்தப் படத்தில் இதுவரை நீங்கள் கேட்காத இசையை கேட்பீர்கள்" என்றார்.  இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது, "'விடுதலை' படத்தின் தொடக்கம் ராஜா சார்தான். 45 நிமிடங்கள...
இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி இணையும் “சப்தம்”படத்தில் நடிகை லைலா இணைந்துள்ளார்!

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி இணையும் “சப்தம்”படத்தில் நடிகை லைலா இணைந்துள்ளார்!

சினிமா
ஈரம் படக்கூட்டணியில் உருவாகும் சப்தம் படத்தில் நடிகை லைலா இணைந்துள்ளார்! ஈரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி வெற்றிக்கூட்டணியில் உருவாகும் “சப்தம்” படத்தின் ஒவ்வொரு தகவல்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் அடுத்த அதிரடியாக படத்தின் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க, நடிகை லைலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் இப்படத்தில் நாயகியாக, நடிகை லக்‌ஷ்மி மேனன் இணைந்தார். இந்நிலையில் அடுத்ததாக தற்போது, முக்கியமான பாத்திரத்தில் நடிக்க, நடிகை லைலா இணைந்திருப்பது ரசிகர்களிடம் பேராவலை தூண்டியுள்ளது. லைலாவின் கதாப்பாத்திரம் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் ஆச்சர்யம் தரும் வகையிலும், மிக அழுத்தமான பாத்திரமாகவும் இருக்குமென படக்குழு தெரிவித்துள்ளது. காமெடி ஹாரர் படங்களுக்கிடையில் ஒரு இனிமையான மாற்றமாக இதயத்தை அதிரவைக்கும் ...
ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள படம் ’மேன்’

ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள படம் ’மேன்’

சினிமா
மெட்ராஸ் ஸ்டுடியோஸ் & அன்ஷு பிரபாகர் பிலிம்ஸ் வழங்கும் இகோர் இயக்கத்தில், ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள படம் ’மேன்' ’96’, ’ரோமியோ ஜூலியட்’, ’கலாப காதலன்’ போன்ற குறிப்பிடத்தக்க தமிழ்ப் படங்களை மெட்ராஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, அன்ஷு பிரபாகர் ஃபிலிம்ஸ், ஹன்சிகா மோத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மேன்’ படத்தைத் தயாரித்து வருகிறது. இகோர் (’கலாப காதலன்’ படப்புகழ்) இயக்கி வரும் இப்படத்தில் ஆரி அர்ஜுனன் முதல்முறையாக வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘மேன்’ என்று தலைப்பு வைத்ததன் காரணத்தைப் பகிர்ந்துகொண்ட இயக்குநர் இகோர், “ஆண்மை என்பது ஒரு அகங்காரக் கூறாக மாறிவிட்டது. இது ஒரு போலி அடையாளத்தை உருவாக்கியுள்ளது. மேலும், இது பெண்களை அடக்கி, ஆதிக்கம் செலுத்துவது போன்ற ஒரு பிம்பத்தையும் கட்டமைத்துள்ளது. இந்த இயற்கைக்கு எதிரான ஒரு பெண்ணின் க...
‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது

‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது

சினிமா
ஸ்ரீ லட்சுமி திரைக்கலைக்கூடம் சார்பில் ஸ்தபதி டாக்டர் ஆர் . பிரபாகரின் தயாரிப்பில் எஸ் ஜே அலெக்ஸ் பாண்டியன் இயக்குந‌ராக அறிமுகம் ஆகும் 'கிறிஸ்டினா கதிர்வேலன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது கும்பகோணம் அருகில் தாராசுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஸ்ரீ லட்சுமி திரை கலைக்கூடம் பெருமையுடன் வழங்கும் ஸ்தபதி டாக்டர் ஆர் பிரபாகர் தயாரிப்பில் உருவாகும் 'கிறிஸ்டினா கதிர்வேலன்' திரைப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இனிதே தொடங்கியது. பவுடர் திரைப்படத்தின் இயக்குந‌ர் விஜய் ஸ்ரீஜியிடம் அசோசியேட் டைரக்டராக பணியாற்றிய எஸ் ஜே அலெக்ஸ் பாண்டியன் இந்தப் படத்தின் மூலம் இயக்குந‌ராக அறிமுகம் ஆகிறார். காலங்களில் அவள் வசந்தம் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிய கௌஷிக் ராம் கதாநாயகனாகவும், பிரபல யூடியூபர்களான ரவி விஜே மற்றும் புவனேஸ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடி...
இசையமைப்பாளர் சி சத்யா உருவாக்கியுள்ள சுயாதீனப் பாடல் ‘பெண்ணே பெண்ணே’

இசையமைப்பாளர் சி சத்யா உருவாக்கியுள்ள சுயாதீனப் பாடல் ‘பெண்ணே பெண்ணே’

சினிமா
சர்வதேச மகளிர் தினத்திற்காக இசையமைப்பாளர் சி சத்யா உருவாக்கியுள்ள சுயாதீனப் பாடல் 'பெண்ணே பெண்ணே’ பல தரப்பட்ட ஜானர்களில் அற்புதமான இசையைத் தரக்கூடிய திறமையான இசையமைப்பாளர் சி சத்யா. அவர் இப்போது சர்வதேச மகளிர் தினத்திற்காக ‘பெண்ணே பெண்ணே’ என்ற ஒரு அழகான சுயாதீனப் பாடலை உருவாக்கியுள்ளார். இந்தப் பாடலை அவரது மகள்கள் சினேகா மற்றும் வைமு ஆகியோர் பாடியுள்ளனர். இது குறித்து இசையமைப்பாளர் சி சத்யா கூறும்போது, “இது மகளிர் தினத்திற்காக உருவாக்கப்பட்ட பாடல். பொதுவாக, பெண்களின் அதிகாரம் மற்றும் பெண்மையை போற்றுவது பற்றி இந்த சமூகம் அடிக்கடி பேசுகிறது. ஆனால், அனைத்தும் வாய்மொழியாக மட்டுமே மட்டுப்படுத்தப்படுகிறது. உண்மையில், பெண்கள் மற்றும் சிறுமிகள் கூட துன்புறுத்தல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான சம்பவங்களை அன்றாடம் எதிர்கொண்டுதான் இருக்கிறார்கள் என்ற கசப்பான உண்மையை ஒத்துக்கொள்ளத...
15 வருடங்களுக்குப் பிறகு ஊர்வசி – கலாரஞ்சனி சகோதரிகள் இணைந்து நடித்துள்ள ‘யோசி’

15 வருடங்களுக்குப் பிறகு ஊர்வசி – கலாரஞ்சனி சகோதரிகள் இணைந்து நடித்துள்ள ‘யோசி’

சினிமா
தற்கொலை எண்ணத்திற்கு எதிராக உருவாகும் 'யோசி' J&A Prime Productions தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'யோசி'. இந்த படத்தை ஸ்டீபன் எம்.ஜோசப் இயக்கியுள்ளார். அபய் சங்கர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரேவதி வெங்கட் நடித்துள்ளார். பிரபல நடிகைகள் ஊர்வசி, கலாரஞ்சனி ஆகியோருடன் அர்ச்சனா கௌதம், சாம் ஜீவன், ஏ.எல்.சரண், பார்கவ் சூர்யா, மயூரன், அச்சு மாளவிகா, கிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ராபின் ராஜசேகர், கே.குமார், வி.அருண், ஏ.எஸ்.விஜய் என நான்கு இசையமைப்பாளர்கள் இசை அமைத்துள்ளனர். பின்னணி இசையை இத்தாலியை சேர்ந்த பிரான்செஸ்கோ ட்ரெஸ்கா என்பவர் அமைத்துள்ளார். பாடல்களை ரட்சகன் மற்றும் இசையமைப்பாளர் வி.அருண் இருவரும் எழுதியுள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை ஆறுமுகம் கவனிக்கிறார். படத்தொகுப்பை ரோஷன் பிரதீப்.ஜி மற்றும் ரதீஷ் மோகனன் ஆகியோர் மேற்கொள்கின்றனர். நீட் தேர்வை எதிர்கொ...
ஜான்வி கபூர் ’என்டிஆர் 30’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.

ஜான்வி கபூர் ’என்டிஆர் 30’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.

சினிமா
ஜான்வி கபூர் ’என்டிஆர் 30’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். படத்தில் புயலுக்கு நடுவே அமைதி போன்றவர் ஜான்வி என அவரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வரவேற்றுள்ளது ’ஜனதா கேரேஜ்’ படத்திற்கு பிறகு ’என்டிஆர் 30’ படத்தில் கொரட்டாலா சிவாவுடன் என்டிஆர் மீண்டும் இணைகிறார். இந்தத் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதில் இருந்தே, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படம் குறித்த அப்டேட்களை கேட்டு வருகின்றனர். இந்த திட்டம் இந்த மாத இறுதியில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட இருக்கிறது. கொரட்டாலா சிவா தற்போது இப்படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார். இன்று படக்குழு பார்வையாளர்களுக்கு படம் குறித்தான அப்டேட் கொடுத்துள்ளது. ஜான்வி கபூர் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்பதை படக்குழுவினர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு போஸ்டருடன் அறிவித்துள்ளனர். மேலும் "#NTR...
தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படத்தின் முதல் தோற்றம் உலக நாயகன் கமலஹாசன் வெளியிட்டார்!!!

தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படத்தின் முதல் தோற்றம் உலக நாயகன் கமலஹாசன் வெளியிட்டார்!!!

சினிமா
உலக நாயகன் கமலஹாசன் வெளியிட்ட "கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படத்தின் முதல் தோற்றம் !! தமிழ் திரையுலகில் மாறுபட்ட வாழ்வியல் படைப்புகளால், மக்கள் மனங்களை வென்ற இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு மனித வாழ்வியலை சொல்லும் அழுத்தமாக படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் "கருமேகங்கள் கலைகின்றன”. பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், யோகிபாபு முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தின் முதல் தோற்றத்தை உலக நாயகன் கமலஹாசன் இன்று வெளியிட்டார். உலக நாயகன் கமலஹாசன் அவரது அலுவலகத்தில் இன்று இப்படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டார். அப்போது பாரதிராஜா, இயக்குநர் தங்கர்பச்சான் , தயாரிப்பாளர் டி. துரை வீரசக்தி ஆகியோர் உடனிருந்தனர். பாரதிராஜா இப்படம் தமிழ் திரை வரலாற்றில் மிக முக்கியமான படைப்பாக இருக்குமென்று கமல்ஹாசனிடம் கூறினார். படம் குறித்து நடிகர் கமலஹாசன் இயக்...
“பருந்தாகுது ஊர்குருவி” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

“பருந்தாகுது ஊர்குருவி” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

சினிமா
லைட்ஸ் ஆன் மீடியா வழங்கும், இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் திரில்லர் படம் “பருந்தாகுது ஊர் குருவி”. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தயாரிப்பாளர் சுந்தர் கிருஷ்ணா பேசியதாவது.., இந்த படத்தை நான், சுரேஷ் மற்றும் வெங்கிசந்திரசேகர் மூவரும் இணைந்து தயாரித்துள்ளோம். இங்கு வந்துள்ள திருத்தணி சட்ட மன்ற உறுப்பினர் சந்திரன் அய்யாவிற்கு முதலில் நன்றி. வெற்றி பெற்ற இளம் இயக்குநர்களை வைத்து இந்த விழாவை துவங்க நினைத்து எல்லோரையும் அழைத்தோம். பல நாட்கள் இந்த மேடைக்காக ஏங்கியுள்ளேன், இப்போது அது நிறைவேறியுள்ளது. படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள், இந்த படம் மார்ச் 24ம் தேதி வெளியாகிறது. இப்படத்தை மக்களிடம் கொண்டு செல்லுமாறு அனை...