வெங்கட் பிரபு இயக்கத்தில் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் தயாரிப்பில் நாக சைதன்யா நடித்திருக்கும் ‘கஸ்டடி’ திரைப்பட டீசர் மார்ச் 16 மாலை 4:51 மணிக்கு வெளியிடப்படும்
வெங்கட் பிரபு இயக்கத்தில், ஸ்ரீனிவாசா சித்தூரியின் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் தயாரிப்பில் நாக சைதன்யா நடித்திருக்கும் 'கஸ்டடி' திரைப்படம் பைலிங்குவலாக வெளியாக இருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இதன் டீசர் மார்ச் 16 மாலை 4:51 மணிக்கு வெளியிடப்படும்
பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களைத் தரக்கூடிய இயக்குநரான வெங்கட் பிரபு இயக்கத்தில் அக்கினேனி நாக சைதன்யாவின் தெலுங்கு-தமிழ் பைலிங்குவல் திரைப்படமான 'கஸ்டடி' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக உள்ளது. சமீபத்தில், படத்தில் இருந்து வெளியான கதாபாத்திர போஸ்டர்கள் பார்வையாளர்களிடையே படம் குறித்தான ஆர்வத்தை அதிகரித்துள்ளது. மேலும், படக்குழுவிடம் இருந்து இன்னும் அதிக கண்டெண்ட்டை ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.
இன்று, படக்குழு மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். மிகவும்...









