*இயக்குநர் விக்னேஷ் சிவன் தொடங்கி வைத்த ‘உலக உணவு நாள்’ பிரியாணி திருவிழா*
*உலக உணவு நாளில் 'ஹெல்ப் ஆன் ஹங்கர் பவுண்டேசன்' தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பிரியாணியை வழங்கிய இயக்குநர் விக்னேஷ் சிவன்*
பசிக்கு உணவு கிடைக்காமல் வாடுவோர்களின் துயரைத் துடைக்கும் வகையில் 'ஹெல்ப் ஆன் ஹங்கர் பவுண்டேசன்' எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒருங்கிணைத்த #ZEROHUNGER உணவு வழங்கும் நிகழ்வை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான விக்னேஷ் சிவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
வீதியோரத்தில் வாழ்பவர்கள் - வீடற்றவர்கள் - ஆதரவற்றவர்கள்- முதியோர்கள்- உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள் - தொழுநோயாளிகள்- மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்- என சமூகத்தால் புறகணிக்கப்பட்ட ஏழை எளிய மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு ஒரு வேளை உணவு என்பது தினந்தோறும் எட்டாகனியாகத் இருக்கிறது. இந்த யதார்த்தமான சமூகவியலை உணர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஆலன் சாமுவேல் தன் நண்பர்களுடன் இணைந்து 'ஹெல்ப...









