Sunday, May 3

’பயமறியா பிரம்மை’- திரைப்பட விமர்சனம்

69 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும்படம் ‘பயமறியா பிரம்மை’. கொலை குற்றவாளியான ஜெகதீஷ் என்பவர் சிறையில் உள்ளார்,இந்த ஜெகதீஷ் 25 ஆண்டுகளில் 96 பேரைக் கொன்ற குற்றவாளி ஆவார், அந்த ஜெகதீஷின் வாழ்க்கையை நூலாக எழுதுவதற்காக கபிலன் என்னும் எழுத்தாளர் அவரை சிறையில் சந்திக்கிறார்.அவரது வாழ்க்கையின் நிகழ்வுகள், திரை காட்சிகளாக நகர்வதுதான் ‘பயமறியா பிரம்மை’.படத்தின் மீதி கதை.

ஜெகதீஷ் கதாபாத்திரமாக ஜே.டி, குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், சாய் பிரியங்கா ரூத், ஹரிஷ் ராஜு, ஜாக் ராபின் என்னும் ஆறு பேரும் நன்கு நடித்திருக்கிறார்கள்.மேலும் ஜான் விஜய் ,வினோத் சாகர், திவ்யா கணேஷ் போன்றவர்களின் நடிப்பும் குறைவின்றி நிறைவாக உள்ளது. படத்தை எழுதி இயக்கியிருக்கும் ராகுல் கபாலியின் புதுமையான யுக்தியினை பாராட்டலாம். அவருக்கு பக்கபலமாய் பிரவின் மற்றும் நந்தாவின் ஒளிப்பதிவும், கே -வின் இசையும் துணை நின்றுள்ளது.

திரையில் புதிய முயற்சியை காண விரும்பும் ரசிகர்கள் தவறாமல் பார்க்கலாம்.

Spread the love