உன்னி சிவலிங்கம் இயக்கத்தில், ஷேன் நிகம், சாந்தனு செல்வராகவன் ,அல்போன்ஸ் புத்திரன், ப்ரீத்தி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி ,வெளியாகி உள்ள படம் பல்டி.
கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கும் படம் இந்த பல்டி,கேரளாவோட எல்லை பகுதியில ஷேன் நிகம், சாந்தனு மற்றும் அவர்களுடைய நண்பர்கள் வசித்து வருகிறார்கள், அந்த பகுதியில் இருக்கிற செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன் மற்றும் பூர்ணிமா இவங்க எல்லாரும் அதிகமான வட்டிக்கு பணம் கொடுத்து அது மூலமாக பொருளீட்டிவருகிறார்கள்.ஷேன் நிகம், சாந்தனு மற்றும் அவர்களுடைய நண்பர்கள் எல்லாம் சிறப்பான முறையில் கபடி விளையாடி வருகிறார்கள், கபடியில் திறமைசாலிகள் இருக்கும் இவங்கள தன்னுடைய அணிக்காக விளையாடுறதுக்காக செல்வராகவனும் கூப்பிடுகிறார். பணத்துக்காக சாந்தனுவும் அத்ற்க்கு ஒத்துக்கொள்ள , இதற்குப் பிறகு அவங்களுடைய வாழ்க்கை என்னவாகிறது என்பதுதான் படத்தின் மீதி கதை.
தன்னுடைய 25-ஆவது திரைப்படமான இந்த பல்டி படத்தில் உதயன் என்னும் கதாபாத்திரத்தில் ,கபடி வீரராக தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிற ஷேன் நிகம், காதல் ,ஆக்சன் என இரு பரிமாணங்களிலும் நன்றாக பிடித்துள்ளார் அதேபோல அவருக்கு இணையாக குமார் என்னும் கதாபாத்திரத்தில் சாந்தனுவும் கபடி காட்சிகளிலும் ,சண்டை காட்சிகளிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். செல்வராகவன் ,அல்போன்ஸ் மித்ரன், பூர்ணிமா போன்ர்வர்களின் கதாபாத்திர படைப்புகளும் ,அதனை அவர்கள் ஏற்று நடித்துள்ள விதமும் நன்றாக உள்ளது. ப்ரீத்தி அஸ்ரானி தனக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளில் குறைவில்லாமல் பிடித்திருக்கிறார்.
சாய் அபயங்கரின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன, படத்தின் பின்னணி இசை காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப படம் முழுவதும் உயிரோட்டத்துடன் பயணித்திருக்கிறது,அதேபோல கதைக்கும் காட்சிகளுக்கும் ஏற்ற வகையில் ஒளிப்பதிவாளர் அலெக்ஸ் ஜே. புளிக்கல் தன்னுடைய கைவண்ணத்தில் படத்துக்கு ஒளி வண்ணம் கொடுத்திருக்கிறார்.
இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளவர் உன்னி சிவலிங்கம், எடுத்துக் கொண்ட கதைக்கு இணக்கமான திரைக்கதையை அமைத்து ,ஒரு முழு நீள ஆக்சன் பொழுது போக்கு படமாக இப்படத்தினை உருவாக்கி இருக்கிறார். தன்னுடைய கதைக்கு ஏற்ற வகையில் பொருத்தமான நட்சத்திரங்களை தேர்வு செய்து, அவர்களிடம் உள்ள தனித்தன்மை வெளிப்படும் வகையில் படத்தினை இயக்கியுள்ளார் இயக்குனர் உன்னி சிவலிங்கம் .
மொத்தத்தில் பல்டி முழு நீள ஆக்சன் என்டர்டெயின்மென்ட் திரைப்படம்.
